சென்னை: ரூ.4000 கோடி என்னாச்சு என கேள்வி எழுப்பியதன் எதிரொலியாக, சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னை மீண்டும் மழை வெள்ளத்தில் மிதந்ததைத்தொடர்ந்து, சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் மழைநீர் வடிகால் பணிகள், அதற்காக செலவழிக்கப்பட்ட ரூ.4000 கோடி என்னாச்சு என பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பின. இது திமுகஅரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், 98 சதவிகிதம், 75 சதவிகிதம் என அமைச்சர், மேயர் என என ஆளாளுக்கு கதை சொல்லி வந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இதையடுத்து, இதையடுத்து, சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதது.
மிக்ஜாப் புயல் மழையின்போது, சென்ன்னை மீண்டும் மழை வெள்ளத்தில் மிதந்தது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சென்னையில், மேற்கொள்ளப்பட்ட மழைநீ வடிகால் பணிகள் என்னென்ன, இந்த வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் , வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியாகும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரூ.4ஆயிரம் கோடி ஸ்வாஹா? வெள்ளத்தில் மிதக்கிறது சென்னை! பாமக தலைவர் ராமதாஸ் கண்டனம்..