அரியலூர்:

மிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி வாக்குப்பதிவு நாளன்று பொன்பரப்பியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பல்வேறு கட்சிகள் சார்பிலும் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தி வரப்பட்டது.

ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான தகவல்களை கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில்,  வேலிஅறக்கட்டளை சார்பில் பொன்பரப்பி கலவரம் குறித்து  உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த உண்மை அறியும் குழுவில்,  தோழர் அரங்க குணசேகரன், தருமபுரி வழக்கறிஞர் பாவெல், கவிஞர் பழமலய், டாக்டர் விமுனா மூர்த்தி, அச்சமில்லை ஆசிரியர் ந.இறைவன், அ.சிற்றரசு, கோ.ஜெயபாலன்,  மருதுபாண்டியன் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த ஏப்ரல் 24ந்தேதி சம்பவம் நடைபெற்ற இடங்களுக்கு ஆய்வு மேற்கொண்டனர்.

கலவரம் தொடர்பாக பல இடங்களை ஆய்வு செய்த குழுவினர், அந்த ஊர் மக்கள் மற்றும், தாக்குதலுக்கு உள்ளானவர்கள், அது தொடர்பாக போராட்டத்தியவர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டதுடன் தாக்குதலுக்கு ஆளான தொலைக்காட்சி செய்தியாளரையும் சந்தித்து தகவல் சேகரித்தனர்.

அதைத்தொடர்ந்து பொன்பரப்பி கலவரம் தொடர்பாக உண்மை அறியும் குழுவினர்  விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அறிக்கை விவரம்: