*** ஏழைப் பாட்டாளி வன்னிய சமுதாய மக்கள், தங்கள் கல்வி, வேலைவாய்ப்புகளில் 20 சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்காக 1987 ஆம் ஆண்டு ஒரு வார கால சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்….
அப்போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 21 அப்பாவி வன்னியர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள்!
அந்தப் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து தான், 1989 இல் ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி, வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதியினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதுடன், அந்த 21 தியாகிகள் குடும்பத்துக்கும் தலா 3 லட்ச ரூபாய் மற்றும் மாத ஓய்வூதியமாக 3000 ரூபாய் வழங்கினார்!
அதன் பின்னர் தான், வன்னிய மக்கள் தொடரந்து தந்த ஆதரவால் ,நாடாளுமனறத்திற்கச் சென்ற பாம.கக.வினர் மத்திய அமைச்சர்களாகினர்! பிறகு என்ன? ராமதாசும் அவரது குடும்பத்தாரும் அரசியலிலும் பொருளாதாரத்திலும் அசுர வளர்ச்சி அடைந்தனர்! சுக பாகங்களில் திளைத்தனர்!
அத்துடன், ஒவ்வொரு தேர்தலிலும் ,இவர்கள்,அணி சேர்ந்த திராவிடக் கட்சிகளிடம் ‘பெருந் தொகை ஆதாயம்’ அடைந்தனர்!
இத்தனை உயர்ந்தும், தங்கள் வசதி, வாழ்வுக்குத் காரணமான அந்தத் தியாகிகளின் குடும்பங்களை ராமதாஸ்-அன்புமணி மறந்தனர்!
ஆனால், அரசியலில் தங்களுக்கு வீழ்ச்சி ஏற்படும் போதெல்லாம் இவர்களுக்குத் ‘ திடீர் வன்னியர் பாசம் ‘ வந்துவிடும்!
இன்றைய சூழலில், இவர்களைப் பற்றி நன்கு உணர்ந்து கொண்ட வன்னிய மக்கள், கடந்த 2009 இலிருந்து நேற்று நடந்த உள்ளாட்சித் தேர்தல் வரை இவர்களுக்குத் தொடர்ந்து தோல்விகளையே தந்து வருகிறார்கள்!
இதனால், துவண்டு போய்க் கிடந்த ‘தந்தை- மகனுக்கு’, தற்போது ஒரு திரைப்பட விவகாரம் கையில் கிடைத்துள்ளது!
உடனே பொங்கி எழுந்து ‘ திடீர் வன்னியர் பாசம்’ காட்டுகின்றனர்!
எனவே தான், வன்னிய சமுதாயத்தில் தோன்றி… அந்த மக்களுக்காகப் பல நன்மைகள் செய்து மறைந்த வாழப்பாடியாரின் மகன் இராம சுகந்தன், அன்புமணியை நோக்கி நியாயமான சில கேள்விகளை எழுப்பி உள்ளார்!
** அதில் உள்ள நியாயங்களை மக்களும் உணர்ந்துள்ளனர்!!
** ஓவியர் இரா. பாரி.