ப.சி, கார்த்தி வீடுகளில் சோதனை: சி.பி.ஐ. சொல்வது என்ன

Must read

டில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் சி.பி.ஐ., இன்று (மே 16) 14- இடங்களில் சோதனை நடத்தி உள்ளது.

இது குறித்து சி.பி.ஐ. அதிகாரி வினீத் விநாயக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி :

* ஐ.என்.எக்ஸ். நிறுவனம் மீது மோசடி உள்ளிட்டபல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
* ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் பங்குதாரர் கார்த்தி. இவர் அந்நிறுவனத்திற்கு சலுகை காட்டி இருக்கிறார். .
* ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தின் உரிமையை வேறு நிறுவனத்திற்கு மாற்றம் செய்துள்ளனர்.


* மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் ஐ.என்.எக்ஸ்.நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன.
* சி.பி.ஐ. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
* சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் வீடு,அலுவலகங்களில் சட்டரீதியான வழிகளிலேயே சோதனை நடக்கிறது.
* சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும்.
* சோதனையில் அரசியல் குறுக்கீடு எதுவும் இல்லை.

இவ்வாறு விநாயக் தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article