தேங்காய் எண்ணெயில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளது என்பது குறித்துஉங்களுக்கு தெரியுமா?… இதோ தெரிந்து கொள்ளுங்கள்…
பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் தலைக்கு தேய்ப்பதற்கு மட்டுமே பலர் பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர். ஆனால், இதனை சமையலில் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென பார்ப்போம்…
தினமும் காலையில் தேங்காய் எண்ணெயை குடித்து வந்தால், அது ஒருவரது தொப்பையின் அளவை குறைக்கும்.
தேங்காய் எண்ணெய் வயிற்றை சுற்றி தேங்கியுள்ள கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்றும்.
தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்தால், அது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள உட்பொருட்கள், செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள கெமிக்கல் பொருள், உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும்.
காலையில் தேங்காய் எண்ணெய்யை குடித்தால் இந்த எண்ணெயில் உள்ள கலோரிகள், உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும்.
அரிசிக்கு உலை வைத்த அரிசி கொதிக்கும்போது அரிசி போடும்முன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணேயை உலையில் விட்டு அதன்பின் அரிசியை போட்டு வடித்து அப்படியே எடுத்து பிரிட்ஜில் வைத்து 8 மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு பெரியதாக ஏறாது. இவைகள் அனுபவத்தில் கொண்டே கூறுகிறோம்.
முடிந்தவரை அரிசியை குக்கரில் வடிக்காமல் , உலை வைத்து கொதிக்க வையுத்து கஞ்சி வடித்து பயன்படுத்துங்கள், கஞ்சி வடித்தம் என்பது ஸ்டார்ச் எனும் மாவுச்சத்தை குறைக்கும், அதற்கு தேங்காய் எண்ணேய் பெரும் உதவி புரியும்
தேங்காய் எண்ணேய் என்பது சல்பர் (கந்தகம்) சேர்க்காத சுத்தமான தேங்காயில் இருந்து எடுக்க வேண்டும்…