
டில்லி,
ரெயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளது ஐஆர்சிடிசி நிறுவனம்.
இணையம் ரெயில் டிக்கெட் பதிவு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலோர் வீட்டில் இருந்தே இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு, முன்பதிவு போன்றவைகளை செய்து வருகின்றனர்.
இதற்காக பொதுத்துறை நிறுவனமான ரெயில்வே துறை IRCTC இணைய தளத்தை உருவாக்கி உள்ளது. அந்த தளத்தின் மூலம் பயணத்திற்கான டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கான பணம் செலுத்த் அனைத்து வகையான டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலமும் பண பரிவர்த்தனை மூலம் நடைபெற்று வருகிறது.
ஆனால், தற்போது ஐஆர்சிடிசி நிறுவனம் இதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பிட்ட 7 வங்கிகளின் கார்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி,
கனரா வங்கி,
இந்தியன் வங்கி,
சென்ட்ரல் வங்கி,
எச்டிஎப்சி வங்கி,
ஆக்சிஸ் வங்கி,
யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா.
இந்தியாவின் மிக்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேங் வங்கி கார்டுகள் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படாத நிலையில் ஐஆர்டிசியின் இந்த அறிவிப்பு பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
[youtube-feed feed=1]