சென்னை: சட்டத்தை பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோ வெளியீட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பிரபல யூடியூபர் இர்பான்மீது புகார்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
சாதாரண விமர்சன வீடியோக்களுக்கே இரவோடு இரவாக சென்று யுடியூபர்களை கைது செய்து, அவர்களின் தளத்தை முடக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை, இர்பான் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த முறை நடவடிக்கை எடுக்காவிட்டால், காவல்துறை மற்றும் தமிழ்நாடு அரசு மீதான கண்ணோட்டம் குறித்து கடுமையாக விமர்சனங்கள் எழும் என்பதில் சந்தேகமில்லை.
ஐந்தரை ஆண்டுகாலம் மருத்துவம் படித்து வரும் ஆயுஷ் மருத்துவர்கள் (சித்தா, ஹோமியோ, யுனானி, ஆயுர்வேத) அலோபதி மருத்துவம் பார்க்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில், மீறி செயல்படும் சிலரையும் கைது செய்யும் காவல்துறையினர், சாதாரண மனிதன் ஒருவர் மருத்துவமனையில் ஆபரேசன் அறைக்குள் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதை அலோபதி மருத்துவர்கள் எப்படி அனுமதித்தார்கள், அதன்மீது காவல்துறையினர் எடுக்கப்போகும் சட்ட நடவடிக்கை என்ன என்பது விவாதப்பொருளாகி உள்ளது.
ஏற்கனவே பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தை மீறி, அதை பகிரங்கமாக இர்பான் அறிவித்த நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையும், சுகாதாரத்துறையும், இர்பானை மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வைத்து, அந்த விவகாரத்தில், இர்பான் மன்னிப்பு கோரியதால், எச்சரிக்கை செய்துள்ளதாக தெரிவித்தது.
இந்த நிலையில், தற்போது இர்பான் மீண்டும் சட்டத்தை குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் இர்பான் வீடியோ வெளியிட்டது தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்மீது புகார்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.
இந்j நிலையில் யூடியூபர் இர்பான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை மீதும், இர்பான் மீதும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது ஏற்கனவே மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. யூடியூபர் இர்பான் சர்ச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலி மருத்துவத்தை ஊக்குவிப்பதாக கூறி மருத்துவத்துறை அதிகாரிகள் மருத்துவர் நிவேதிதா மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்? யார்? எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களை கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
யூடியூப்பில் சாப்பாடு தொடர்பான வீடியோ பதிவிட்டு, அதிகமாக சப்ஸ்கிரைபவர்களை பெற்றவர் தான் இர்பான். இவருக்கான ஃபாலோயர்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர்.
இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் குழந்தை பிறக்கப் போவதாக அறிவித்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது வழக்கு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் மன்னிப்பு கேட்டதால் அவர் மீதான நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி, இர்பான் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று, அவர் தனது மனைவி பிரசவ வலியால் துடிக்கும் காட்சி, குழந்தை பிறந்த வுடன் அதை கையில் ஏந்தி இருக்கும் காட்சிகளை பதிவு செய்துள்ளார். மேலும் பிரசவத்தின்போது தாயையும் குழந்தையையும் பிரிப்பதற்காக, தொப்புள் கொடி அறுக்கும்போது வீடியோ எடுத்த இர்பான தற்போது அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இரண்டு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி உரிய அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே அறுவை சிகிச்சை அறைக்குள் செல்ல வேண்டும் மற்றும் முறையான அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் கத்தரிக்கோல் பிடிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளது.
இந்j நிலையில், யூடியூபர் இர்பான் அறுவைச் சிகிச்சை அறைக்குள் வீடியோ கேமராவை எடுத்து சென்றது மட்டுமின்றி குழந்தைக்கும் தாயுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடியை வெட்டியதற்கு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்றும், தொப்புள் கொடியை இர்பான வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும், மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நமது நாட்டின் சட்டத்தை மீறி செயல்படும் யுடியூபர் இர்பான் மீது தமிழ்நாடு காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
சாதாரண விமர்சனுங்களே சம்பந்தப்பட்டர்களை கைது செய்து, அவர்களின் யுடியூபை மூட நடவடிக்கை எடுத்து வரும் தமிழ்நாடு காவல்துறை, இர்பான் யுடியூப் பக்கத்தை முடக்குமா, அவரை கைது செய்யுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
கடந்த முறைபோல இந்தமுறையும், அவர் மன்னிப்பு கோரினார் , அதனால் அவரை எச்சரித்து விட்டு விட்டுவிட்டோம் என காவல்துறை சொல்லப்போகிறதா அல்லது நடவடிக்கை எடுக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதற்கிடையில், இர்பான் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. வீடியோ எடுக்கப்பட்ட நாளில் அறுவை சிகிச்சை அரங்கில் பணியில் இருந்தவர்களிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். அறுவை சிகிச்சை அரங்கிற்குள் சென்றது யார்? யார்? எத்தனை சுத்திகரிக்கப்பட்ட ஆடைகள் பயன்படுத்தப்பட்டது போன்ற விபரங்களை கேட்டு மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.