லண்டன்: மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாக கருதப்படுவதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் மனித இன சூழலில் மனச்சோர்வானது நோய் என்று பின்புலத்தில் இருந்து பார்க்கப்பட்டு வருகிறது. உடல்நிலையை பாதித்து, மனதையும் மரணத்தையும் ஏற்படுவதாகவும் மனச்சோர்வு அடையாளப்படுத்தப்படுகிறது. தற்போது இந்த மனச்சோர்வு குறித்து பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆய்வின் அடிப்படையில் புதிய கூற்றை கண்டுபிடித்து உள்ளனர்.

அதாவது, மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாகும் என்று பிரிட்டிஷ் சைக்காலஜிகல் சொசைட்டியானது கூறி உள்ளது. மனச்சோர்வை பகுத்தாய்ந்து, அது தேவையற்ற துன்பம் என்பதை கருத வேண்டும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

அந்த ஆய்வு முடிவுகள் மேலும் கூறி இருப்பதாவது: நரம்பியல் விஞ்ஞானியான ஸ்டீபன் போர்ஜசால் கண்டுபிடிக்கப்பட்ட பாலிவகல் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனின் நரம்பு மண்டலத்துடன் நமது அன்றாட சிந்தனைகள் தொடர்புடையது ஆகும். நமது நரம்பு மண்டலம் ஒரு விஷயத்தை பாதுகாப்பாக உணரும் போது, சமூகத்துடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பும் வலுவடைகிறது. எப்போது நமது ஒரு விஷயம் தவறு என்பது நமது நரம்பு மண்டலத்துக்கு தோன்றுகிறதோ அப்போது அதற்கு எதிரான சிந்தனை தோன்ற ஆரம்பித்து விடுகிறது.

அதே தருணத்தில் எப்போது இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு இல்லை என்று உணருகிறதோ அப்போது வேறு வழியில்லை என்று மனித மனம் சோர்வடைகிறது. ஆனால் பாதுகாப்பு இல்லை என்று வரும் தருணத்தில் விலங்குகள் மிகச்சரியாக அமைதியாகி விடுகின்றன. இதே உணர்வு தான் ஊர்வனவற்றிலும் பிரதிபலிக்கிறது.

அதிர்ச்சிக்கரமான நிகழ்வுகளை அல்லது சம்பவங்களை உணரும் போது மனித மனங்களும் தன்னிலையற்று போகின்றன. குறிப்பாக விபத்து போன்ற தருணங்களில் மனித உடலானது ஒரு அசையாமையை நோக்கி நகருவதை உணரலாம். எனவே அசையாமை என்பது ஒரு உயிரியல் பாதுகாப்பின் முக்கிய பகுதியாகும்.

மனச்சோர்வு என்பதை உணரும் மனிதர்களின் உடல் உறுப்புகளில் எந்த சேதாரமும் ஏற்படுவதில்லை. மனச்சோர்வின் அறிகுறிகளில் ஒன்று வெட்கப்படுவதாகும். எனவே, மனச்சோர்வு மனிதர்களை கேலி செய்வதை விட்டுவிட்டு, நாம் மதித்து அவர்களை நம்மில் ஒருவராக கருத வேண்டும். இந்த தருணத்தில் அவர்களை ஊக்கப்படுத்தி, மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.