மேற்குவங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தல்: இன்று வாக்குப்பதிவு மும்முரம்
இந்தியத் தேர்தல் ஆணையம், மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலை இரண்டுகட்டமாக நடத்துகின்றது.
முதற்கட்டத் தேர்தல் ஏப்ரல் 4 மடுர்ம் 11 தேதிகளில் நடைபெற்றது. அதில் பல வன்முறைச்க் சம்பவங்கள் அரங்கேறின. எனவே இரண்டாம் கட்டத் தேர்தலை அமைதியுடன் நடத்தும் சவாலை தேதல் ஆணையம் எதிர்கொண்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக முதல்வர் மம்தா மீதும் அக்கட்சியின் தலைவர் அனுப்ரதா மோண்டல் இருவருக்கும் ஏப்ரல் 14 அன்று நோட்டிஸ் அனுப்பிஇருந்தது தேர்தல் ஆணையம். இதற்கு மம்தா, என்ன நடவடிக்கை வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.. மக்கள் சரியான தீர்ப்பு அளிப்பார்கள் எனவும் காட்டமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டாம் கட்டத் தேர்தல் 56 தொகுதிகளில் நடைபெறுகின்றது.
1.2 கோடி வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை இன்று ஆற்றவுள்ளனர்.
33 பெண்கள் உட்பட 383 வேட்பாளர்கள், ஆறு வட மாவட்டங்களான அலிபுர்தூர், ஜல்பைகுரி, டார்ஜலிங், உத்தர் தினஜ்பூர், தக்ஸின் தினஜ்பூர், மல்டா மற்றும் தென் மாவட்டமான பிர்பூம் ஆகியவற்றில் களம்காண்கின்றனர்.
எதிர்கட்சியின் புகாரை அடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அனுப்ரதா மண்டலை, மத்தியப் பாதுகாப்புப் படையினரின் 24 மணி நேரக் கண்காணிப்பில் வைத்துள்ளதை அடுத்து பிர்பூம் தொகுதி மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
மொத்தமுள்ள 13,600 வாக்குச் சாவடிகளில் பதட்டம் நிறைந்த சாவடியாக 2909 சாவடிகளை இனம் கண்டுள்ளது தேர்தல் ஆணையம். பெரும்பாலானவை மல்டா மற்றும் உத்தர் தினஜ்பூர் சாவடிகள் வன்முரைக்கு இலக்காகும் பட்டியலில் உல்லதால் அங்கு மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
தமக்கு சாதகமான முடிவுகள் இந்தப் தொகுதிகளில் கிடைக்கும் என்று
இந்த இரண்டாம் கட்டத் தேர்தலை நம்பி உள்ளது. அலிபுர்தூர், ஜல்பைகுரி மற்றும் மல்டா மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளில் பா.ஜ.கவும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
அண்மைச் செய்தி :
காலை 10.30 மணி: பிர்பூமுல் வாக்குச்சாவடியருகே திரிணாமுல், காங்கிரஸ், பா.ஜ.க. இடையே அடிதடி. மூவர் காயம் . காயமுற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.
நன்றி: பி.டி.ஐ.