கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் லாக்டவுன் தேதிகளை மாநில அரசு மாற்றி உள்ளது. ஆகஸ்ட் 28ம் தேதி முழு ஊரடங்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அச்சுறுத்தலை தருகிறது. மேற்கு வங்கத்திலும் கொரோனா பாதிப்புகள் உயர்ந்து வருகின்றன. ஆயினும் மாநிலத்தில் மக்கள் நலன் கருதி, ஊரடங்குகளில் தளர்வு அளிக்கப்பட்டது.
இந் நிலையில், அம்மாநிலத்தில ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பதிலாக 28ம் தேதியுடன் ஊரடங்கு முடித்துக் கொள்ளப்படுகிறது. அதாவது, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 21, ஆகஸ்ட் 27 மற்றும் ஆகஸ்ட் 31 ஆகிய தேதிகளில் மாநிலத்தில் முழுமையான லாக்டவுன் காணப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
சில திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் பழக்க வழக்கங்களுடன் ஒத்துப்போகின்ற சில தேதிகளில் முழுமையான லாக்டவுனை தளர்த்துமாறு பல்வேறு பகுதிகளிலிருந்துபல கோரிக்கைகள் மற்றும் முறையீடுகள் வரப்பெற்றன. இதையடுத்து அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆகஸ்ட் 11 ம் தேதி, இம்மாநிலத்தில் கோவிட் -19 எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி 1,01,390 ஐ எட்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 49 புதிய இறப்புகளுடன் 2,149 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.