புதுடெல்லி :
மே.வங்காள, மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன.
இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
கூட்டணி குறித்து மே.வங்க மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் மே.வங்க காங்கிரஸ் பொறுப்பாளர் கே.சி. வேணுகோபாலும் பங்கேற்றார்.
மே.வங்க மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, 76 தொகுதிகளில் வெற்றி பெற்றன.
இந்த முறை காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் போட்டியிடுவது என அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
– பா. பாரதி