கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 45 சதவிகிதம் அளவுக்கு குறைந்துள்ளது, அவர் தாக்கல் செய்துள்ள அஃபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம்தேதி தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது. ஆட்சியை கைப்பற்ற பாஜக பகீரத பிரயத்தனம் செய்து வருகிறது.
இந்த தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இந்தமுறை 291 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சியான கூர்கா ஜன்முக்தி மோர்ச்சா(ஜிஜேஎம்) கட்சிக்கு 3 இடங்களையும் ஒதுக்கியுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது வேட்புமனுவுடன் அவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்கள் குறித்த அஃபிடவிட் வெளியாகி உள்ளது.
அதில், அவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த சொத்து மதிப்பில் இருந்து, கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 45 சதவிகிதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொதுவாக வேட்பாளர்கள், ஆட்சியாளர்களின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து வரும் நிலையில், மம்தாவின் சொத்து மதிப்பு பாதியாகு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016ம் ஆண்டு நடைபெற்ற மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலின் போது, மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்புமனு தாக்கலின்போது தெரிவித்த சொத்து மதிப்பானது.30,45,013 ஆகும். ஆனால், தற்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ .16,72,352 என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு 45.08 சதவீதம் குறைந்துள்ளது.
அதுபோல, மம்தா பானர்ஜியின் கட்சி சகாக்களான மம்தா பூனியா மற்றும் சுகுமார் தே ஆகியோரின் சொத்துக்கள் முறையே 37.53 சதவீதம் மற்றும் 36.18 சதவீதம் குறைந்துள்ளதும் அவர்கள் தாக்கல் செய்த அஃபிடவிட் மூலம் தெரிய வந்துள்ளது.
அங்கு போட்டியிடும் சிபிஐ (எம்) இன் பன்சுரா பூர்பா வேட்பாளர் ஸ்க் இப்ராஹிம் அலியின் சொத்து மதிப்பு 2141.48 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இது 2016-2021க்கு இடையிலான கடந்த 5 ஆண்டுகளில் வேமான வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது, அவரது சொத்து மதிப்பு கடந்த 2016 தேர்தலின் போது மொத்த சொத்து ரூ.49,730. இந்த ஆண்டு அவரது மொத்த மதிப்பு ரூ .10,64,956.
அதுபோல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ மந்துராம் பகிராவின் சொத்து மதிப்பு 735.95 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
மம்தாவின் சொத்து விவரங்களை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…