கொல்கத்தா: ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்கத்தில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பேரணி சென்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கை காப்பதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இந் நிலையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து முதலமைச்சர் மமதா பானர்ஜி பேரணி சென்றார்.பிர்லா கோளரங்கத்தில் இருந்து காந்தி சிலை வரை நடைபெற்ற இப் பேரணியில் அவருடன், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
Patrikai.com official YouTube Channel