மேற்கு மிதினாபூர், மேற்கு வங்கம்
வங்க தேச மக்களுக்கு ஆதார் அட்டை கிடைக்கப் பொய் சான்றிதழை பெற்றுத்தந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வருடம் ஜூலை மாதம் மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி நகரில் சட்டவிரோத குடியேற்றம் குறித்த புகாரில் ஒரு இசை விடுதி சோத்னை இடப்பட்டது. அப்போது சிலர் கைது செய்யப்பட்டனர். அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அந்த இசை விடுதி அதிபர் தரம் பாஸ்வான், ஊழியர் சவுமன் பாயன் மற்றும் அவர் மனைவி புஷ்பா ராய் ஆகியோர் அடங்குவார்கள். அவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்
இந்த விசாரணையில் புஷ்பா ராய் வங்க தேசத்தை சேர்ந்தவர் எனவும் ஆயினும் அவர் பெயரில் ஆதார் அட்டை பெற்றுள்ளதும் தெரிய வந்தது. இர்ஹு குறித்த மேல் விசாரணையில் புஷ்பாவின் கணவர் சவுமன் பாயனுக்கு மிதினாப்பூர் பாஜக தலைவர் ரவிக்குமாருடன் தொடர்பு உளது தெஇர்ய வந்தது. ரவிக்குமார் மூலமாக அப்போதைய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் திலிப் கோஷ் அளித்த இருப்பிடச் சான்றின் அடிப்படையில் புஷ்பா ஆதார் அட்டை பெற்றுள்ளார்.
அதையொட்டி ஆள் மாறாட்டத்துக்கு உதவியதாக ரவிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜகவின் விளையாட்டுப் பிரிவு செயலரான ரவிக்குமார், “சவுமன் பாயனின் மனைவிக்கு நான் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் திலிப் கோஷ் இடம் இருந்து இருப்பிட சான்றிதழ் வாங்கி சவுமன் பாயன் மனைவிக்கு அளித்தேன். ஆனால் இது குறித்து வழக்குப் பதியப்பட்டு என்னைத் தவறாக அதில் இணைத்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் மற்றும் மக்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கும் திலிப் கோஷ் இடம் தொலைப்பேசி மூலம் விவரம் கேட்க பல செய்தியாளர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அவர் எந்த தொலைப்பேசி அழைப்பையும் ஏற்கவில்லை. இந்த விவகாரத்தில் மேலும் பலருக்குத் தொடர்பிருக்கலாம் என ஜல்பாய்குரி காவல் தலைவர் அபிஷேக் மோடி தெரிவித்துள்ளார்.