டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநிலங்களவையில் மேற்கு ஆசிய போர் குறித்து விவாதிக்க மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் கார்கே கோரிய அனுமதியை ஏற்க மறுத்ததை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதில் கார்காவுடன் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜன. 28-ஆம் தேதி குடியரசுத் தலைவா் உரையுடன் தொடங்கி பிப்.13-ஆம் தேதியுடன் ‘ நிறைவடைந்தது. இதையடுத்து இன்று இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கிய நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெறும் போர் குறித்து மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, மேற்காசிய போர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் கோரிக்கை மறுக்கப்பட்டதால், எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், அமளிக்கு மத்தியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது உரையை நிகழ்த்தினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மேற்காசிய போர் விவகாரத்தில் இந்திய தலைமை அமைதி காப்பதாகவும், உறுதியான பிரதமர் தேவை என்றும் குற்றம்சாட்டி எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேற்கு ஆசிய போர்: இந்தியாவின் நிலை குறித்து மாநிலங்களவையில் மத்தியஅரசு விளக்கம்…
[youtube-feed feed=1]