மேஷம்

அலுவலகத்தில் உங்க திறமை வெளிப்படும். உயர்ந்த பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கிடைக்கும். ஆனால், சக ஊழியர்களிடம் எச்சரிக்கையா இருங்க.  வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பாங்க. ஓரளவு அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம். பணவரவைப் பொறுத்தவரை திருப்தி கரமான போக்கே காணப்படுது. செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமணம் தொடர்பான முயற்சிகளில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.

ரிஷபம்

எதிலும் கவனமாக செயல்பட்டு  வெற்றி காண்பீங்க.  அலுவலகத்தில் பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கலைப்பொருட்கள் விற்பனை தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. வெளிநாடு சான்ஸ்கள் வரலாம்.மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில்  எதிர்பாராத உதவியும் லாபமும் வரலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீங்க.  உத்யோகத்தில் இருப்பவர்கள் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவாங்க.  சிலருக்கு புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவாங்க. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க.

மிதுனம்

ஏதாவது ஒரு வகையில் நன்மை நடைபெறும்.  மற்றவர்கள் செய்கைகளால்  உண்டான மனவருத்தம் நீங்கும். நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த பிரச்னை முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மாறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவாங்க.. குடும்பத்தில் அமைதி குறைவது போல் தோன்றினாலும் உடனுக்குடன் சீரடையும் சகோதரர்கள் வழியில் ஏதாவது சின்னஞ்சிறு பிரச்னை தலைதூக்கலாம். விட்டுக்கொடுத்துக் கண்டுக்காம போயிடுங்க. ப்ளீஸ். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்து செயலில் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு சகஜநிலை காணப்படும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். உங்களை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவாங்க. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்

ஒங்களோட ஆரோக்கியம் வழக்கத்தை விட வலுவாக இருக்கும் நேரம் இதுவாக இருக்கும், மேலும் பல்வேறு வகையான உடல் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீங்க. எந்த எதிர் பாலினத்தவரையும் ஈர்க்க விரும்பாவிட்டாலும் ஒங்களோட பணத்தை அவருக்காக நிறைய செலவிடலாம். அது உங்களை பின்னாளில் சிக்கலில் மாட்டிவிடும். எனவே, மற்றவர்களுக்கு பணம் செலவழிக்கும் போது, ​​கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு நல்லது. குடும்ப வாழ்க்கையில், இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல பலன்கள் கிடைக்கும். ஏனெனில் குடும்பத்தில் சில புதிய அல்லது சிறிய விருந்தினர் வருவதற்கான சான்ஸ் உள்ளது, இது குடும்ப சூழலில் மகிழ்ச்சியைத் தரும். இதன் போது, ​​வீட்டில் உள்ளவர்களிடையே சகோதரத்துவமும் பரஸ்பர அன்பும் தெளிவாகத் தெரியும்.

சிம்மம்

சம்பள உயர்வு பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். அதைக் கேட்டு உள்ளிருந்து உணர்ச்சிவசப்பட முடியும். இந்தச் செய்தி ஒங்களோட மூத்த அதிகாரிகளால் கூறப்படும் சான்ஸ்ம் உள்ளது, இது ஒங்களோட பதவி மற்றும் கௌரவம் உயரும். மேலும், இதற்குப் பிறகு மற்ற ஊழியர்களும் உங்களை அதிக மரியாதையுடன் பார்ப்பாங்க. இந்த வாரம் ஸ்டூடன்ட்ஸ் குதூகலப்படும்படியான சம்பவங்கள் நடைபெறும்.. கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. ஸ்டூடன்ட்ஸ் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு கல்வியில் முன்னேற்றம் காண்பீங்க. எதிர்ப்புகள் விலகும். புதிய முதலீடுக்கான பண உதவி கிடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி

மற்றவர்களின் விமர்சனங்களால் பாதிக்கப்படுவதன் மூலம் தங்கள் திறன்களை குறைத்து மதிப்பிட வேண்டிய அவசியமில்லை. தேவையில்லாத சந்தேகங்களை மனதில் உருவாக்கி உங்களின் நல்ல திறமையை வெளிப்படுத்தி அனைவரின் வாயையும் அடைப்பதை உங்க இன்டென்ஷனா வெச்சுக்குங்க.  வீண் பேச்சைவிட உழைப்பே மேல் என்பதை நீங்களும் நன்றாக புரிந்து கொண்டீர்கள். ஸ்டூடன்ஸ் மற்றவர்களின் வீண் பேச்சுகளால் உங்களைத் தொந்தரவு செய்யாமல் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தி சரியான முடிவை எடுங்கள். ஒங்களோட மன நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். இதன் மூலம் நீங்க எல்லாவிதமான மன அழுத்தங்களிலிருந்தும் உங்களை விலக்கிக் கொள்ள முடியும். பருவம் மாறும்போது சிறுசிறு நோய்கள் வரலாம் என்றாலும் இதைத் தவிர இந்த நேரத்தில் பெரிய நோய் எதுவும் வராது.,

துலாம்

பலர் தங்கள் மனைவிக்காக தங்கள் பணத்தை செலவழிப்பதைக் காணலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்க அவர்களுடன் ஒரு அழகான பயணத்தைத் திட்ட மிடலாம், ஏனெனில் இந்த நேரத்தில் ஒங்களோட சம்பளம் அதிகரிக்கும். இந்த மகிழ்ச்சியை ஒங்களோட அன்புக்குரியவர்களுடன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதை நீங்க காண்பீங்க. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒங்களோட ஆலோசனைகளையும் கருத்துக்களையும் திணிப்பீங்க. இருப்பினும், அவ்வாறு செய்யறவங்களை அவாய்ட் செய்துடுங்கப்பா. ஸ்டூடன்ட்ஸோட உயர்கல்விக்கான ஆசை இந்த வாரம் நிறைவேறும். ஆனால் இதற்காக,  அவங்க வழியில் வரும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் இந்த சவால்களை எதிர்த்துப் போராடுவதன் மூலமே  அவங்க வெற்றியைப் பெறுவாங்க. இருப்பினும், இந்த காலகட்டத்தில் மாணவர்கள் ஒவ்வொரு சவாலையும் எதிர்த்துப் போராட முடியும்.

விருச்சிகம்

இந்த வாரம் ஒங்களோட உடல்நிலை பொதுவாக நன்றாக இருக்கும். செல்வாக்கும் ஒங்களோட ஆரோக்கியத்தை பலப்படுத்தும் அதே நேரத்தில் தீராத நோய்களில் இருந்தும் நிவாரணம் தரும். எனவே, இந்த வாரம் ஒங்களோட மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உங்களுக்கு சில பெரிய நிதி நன்மைகள் கிடைக்கும். இதனுடன், , ​​​​புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிடலாம். குடும்ப உறுப்பினர்களும் புதிய பொருட்களை வாங்குவதன் மூலம் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பாங்க. இந்த வாரம் இல்லற வாழ்வில் சந்தோஷம் காண்பீங்க. இந்த நேரம் ஒங்களோட தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும், ஆனால் ஒங்களோட பொறுமையை இழக்காதீங்க, எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்காதீங்க, அதே நேரத்தில் வெற்றியின் போதை ஒங்களோட மனதைக் கவ்வ விடாதபடிக்கு கேர்ஃபுல்லா… அமைதியா நடமாடுங்கப்பா. இந்த வாரம், பல முக்கியமான மற்றும் நேர்மறையான மாற்றங்களைக் காணலாம்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 11 முதல் நவம்பர் 14 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

தனுசு

இந்த வாரம் பெரும்பாலான மாணவர்கள் கடின உழைப்பு குறைவாக இருந்தாலும் நல்ல மதிப்பெண்கள் பெறுவாங்க. அதன் காரணமாக அவங்களோட மனசு ஹாப்பியா இருக்கும். அதே போல் அவர் குடும்பத்திலும் சமூகத்திலும் புகழப்படுவாங்க. இந்த வாரத்தோட கிரக சேர்க்கைகள் மாணவர்களின் மன உறுதியை அதிகரிப்பதோடு, முன்பை விட சிறப்பாக செயல்பட முடியும். ஒங்களோட சிறிய முயற்சியால் ஒங்களோட ஆரோக்கியத்தை மேம்படுத்திக்குவீங்க. ஒங்களோட மன மற்றும் உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். இந்த வாரம், நீங்க குறிப்பாக அனைத்து வகையான நீண்ட கால முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். நீங்க ஒங்களோட நண்பர்களுடன் வெளியே சென்று சில மகிழ்ச்சியான தருணங்களை செலவிடுவீங்க. ஏனெனில் இது ஓய்வோடு ஒங்களோட சிந்தனைத் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 14 முதல் நவம்பர் 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

மகரம்

இந்த வாரம் ஒங்களோட குடும்ப வாழ்க்கையில் அனைத்து வகையான பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். இதனால் குடும்ப உறுப்பினர்களிடையே சகோதரத்துவம் பெருகும் போன்ற பல சூழ்நிலைகள் ஏற்படும். எனவே, இந்த நேரத்தில் நீங்க வீட்டு வேலைகளில் பங்கேற்று வீட்டுப் பெண்களுக்கு உதவி சகஜமான மனநிலையை ஏற்படுத்தி வெற்றி காண்பீங்க. இந்த வாரம் உங்களின் பதவி உயர்வின் அடிப்படையில் பல பெரிய சான்ஸ்களை தரப்போகிறது. இருப்பினும், ஒவ்வொரு வாய்ப்பையும் சரியான சிந்தனையுடன் பயன்படுத்திக்குவீங்க. பிறகென்ன? சக்ஸஸ்தான். ஆனாலும் புதியவங்களை நம்பிடாதீங்க. கடன் கொடுக்காதீங்க. யார் சார்பிலும் நீங்க திருப்பித் தர்றேன் பேர்வழின்னு கையெழுத்து காலெழுத்து எதுவும் போட்றாதீங்க. வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் செலவுகள் இருக்காது. பிள்ளைங்க மூலம் பணவரவுக்கு சான்ஸ் உண்டு

சந்திராஷ்டமம் : நவம்பர் 16 முதல் நவம்பர் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் மிகுந்த கவனம் தேவை

கும்பம்

இந்த வாரம் ஒங்களோட ஆரோக்கியத்தில் பல நேர்மறையான மாற்றங்கள் ஒங்களோட பணியிடத்திலும் சமூக வாழ்விலும் மற்றவர்களுடன் வெளிப்படையாகப் பழக உதவும். இதன் காரணமாக ஒங்களோட தைரியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும், மேலும் நீங்க ஒவ்வொரு முடிவையும் எடுக்கும் திறனை முழுமையாகக் காண்பீங்க. நீங்க திருமணமானவராக இருந்தால், இந்த வாரம் முழுவதும் ஒங்களோட குழந்தையின் கல்விக்காக நிறைய பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக, மனசுல பெரிய திருப்தி நிலவும். உங்க குழந்தைங்களும் ஒங்க கிட்ட ரொம்ப நன்றி பாராடி நெகிழ வைப்பாங்க. வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வருகை செலவுகளை ஏற்படுத்துவதுடன் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் உங்க பணிகளில் கூடுதல் கவனம் தேவை. இப்போதைக்கு சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. சிலருக்கு இட மாறுதல் கிடைப்பதற்கும் சான்ஸ் உள்ளது.

மீனம்

அலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். பணியில் ஸ்திரத் தன்மை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்வதை சற்று ஒத்திப் போடவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு ஹாப்பி நியூஸ் உண்டு. பணவசதி ஓரளவு திருப்தி தரும். நீங்க நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல தகவல் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பணவரவு அதிகரிக்கும். வாரத் தொடக்கத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீங்க. சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். நெருங்கிய உறவினர்களால் சந்தோஷமளிக்கும் சுப செலவுகள் ஏற்படும்.