மேஷம்

உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக உங்களைவிட்டுக் கிளம்பிப்போயிடுங்க. வெளிநாட்டுலேயிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். அது அனேகமாய் உங்க மனசுக்குப் பிடிச்சவங்ககிட்டேயிருந்ததோ சகோதர சகோதரிங்ககிட்டேயிருந்தோ வரும். அவங்கதான் இப்போ ரொம்பவும் உயரத்துக்குப் போயிக்கிட்டே இருக்காங்களே. நண்பர்களுக்கு பிரமோஷன் ஆகுமுங்க.. அவங்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீங்க. இது ஜயன்ட் வீல். இன்னிக்கு அவங்க போனால் நாளைக்கு அடுத்த ரவுண்டில் நீங்க போவீங்களே. அட ஆமாங்க. இப்போ எந்த வழக்காக இருந்தாலும் (குறிப்பாக அப்பா வழிச்சொத்து சம்பந்தமானவை) சற்று டென்ஷன் கொடுக்கும். பயப்படாதீங்க, அது வெறும் தற்காலிக டென்ஷன்தான். கண்டிப்பாக சீக்கிரத்தில் உங்களுக்குச் சாதகமான திருப்பம் ஏற்படும். டோன்ட் ஒர்ரி.

ரிஷபம்

வெளிநாட்டுலேயிருந்து வருமானம் விமானம் ஏறிப் பறந்து வர வாய்ப்பு அதிகம் உண்டு. அல்லது உத்யோக அழைப்பாவது வரும். அல்லதுநீங்க எதிர்பார்த்த அளவு சம்பளம் கொடுக்க ஒப்புக்கிட்டு மெயில் வரும். ஹாப்பிதானே? ஆரோக்யம் நல்ல முறைல இருக்கும். சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். அப்பாடா எத்தனை காலம் கழிச்சு அது நிறைவேறியிருக்குங்க. வீட்டில் இத்தனை காலம் தடைப்பட்டுக் கொண்டு வந்த நல்ல காரியங்கள் நடக்க பிள்ளையால் சுழி போடப்படும். முன்பைவிட அதிகமாகப் பணம் வரும். புண்ணிய காரியங்கள் மற்றும் தர்ம காரியங்கள் செய்வீங்க. சிறிய அளவில் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட்டு ஓரிரண்டு நாட்களில் சரியாகக்கூடும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். கணவருக்கு / மனைவிக்கு ஏற்பட்டிருந்த சிரமங்கள் தீர்ந்து மனசுல நிம்மதி பிறக்கும். திடீர் லாபங்கள் வாசல் கதவைத் தட்டி சர்ப்பிரைஸ் கொடுக்கும். குடும்பம் ஹாப்பியா இருக்கும்.

மிதுனம்

வீட்ல மகிழ்ச்சியும் கலகலப்பும் படிப்படியா.. நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுங்க. உங்களோட கவரும் தன்மை காரணமா ஒங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். அதைவிட உங்களுடைய செல்வாக்கு கூடுதலாகும். வீடு மனைகளினால் ஆதாயம் ஏற்படும். அது ஒரு வேளை பூர்வீக வீடாகவோ, தந்தை வழி சொத்தாகவோகூட இருக்கலாம். ரொம்பவும் லாபமான வாரம். சிலருக்கு என்றைக்கோ போட்ட முதலீடுகள் இப்போ வளர்ந்து கனிந்து பெருகும். நீங்க மனு செய்து விருப்பத்துடன் காத்திருக்கீங்களா? எனில் ஃபாரின்ல வேலை கிடைக்கும். ரொம்ப நாள் கழிச்சு இந்த வீக் பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க. உங்க திறமை ஆபீஸ்லயும், சமூக வலைதளங்கள்லயும் கவனிக்கப்படும். மேலதிகாரிங்க உங்களோட நீண்டகால நேர்மையையும் உழைப்பையும் கவனிச்சு சப்போர்ட் செய்வாங்க.

கடகம்

கேட்டது கெடைக்கும். நெனைச்சது நடக்கும். சூப்பர்தான் போங்க. பேச்சினால் நன்மை வரும். எதை எடுத்தாலும் இத்தனை ஸ்லோவாய்ப் போகுதேன்னு டென்ஷன் வேணாம். முடிவு நல்லபடியா இருக்கும். அதானே வேணும்? ஆரோக்யத்தை மட்டும் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்குங்க. இனஃப். நிறையக் கோயில்களுக்கு நீங்க போகப்போறீங்க! ஒண்ணா.. ரெண்டா? எத்தனையோ மாசங்களா ..ஏன்.. வருஷங்களாகவேகூட.. காத்திருந்த சுப விசேஷம் ஒண்ணு முடிவாயிருக்கே.. நீங்களே நம்பிக்கை இழந்து சோர்ந்து போயிருந்தீங்கதானே? குடும்ப பிரச்னைங்க காரணமாய்த் தூக்கமின்றி அல்லல்பட்டுக்கிட்டிருந்தவங்களுக்கு ஹப்பாடான்னு நிம்மதிப்பெருமூச்சு வரும். அப்பாவுக்கு திடீர் நன்மைகள் நிகழும்.ஊருக்குப் போறதுக்கு எல்லாம் பேக் பண்ணியாச்சா? இல்லாட்டி சீக்கிரமாத் தயார் நிலைல இருங்க. ஓகேயா? நீங்க ஆவலோட எதிர்பார்த்திருந்த ட்ரிப் முடிவாகும்.

சிம்மம்

திருமண முயற்சிகள் மெல்லப் பலன் தர ஆரமபிக்கும். பல விஷயங்களில் காத்திருப்பு முடிவுக்கு வந்து சந்தோஷம் குடுக்கும். படிப்புக்காகவோ உத்யோகத்துக்காகவோ திருமணமாகியோ வெளிநாடு போகப்போறீங்க. குட் லக். எல்லா விஷயத்திலும் கொஞ்சமாச்சும் ஜாக்கிரதையா இருக்கணுங்க. பேச்சிலும் செயலிலும் இரட்டிப்பு ஜாக்கிரதையா இருக்கணும்னு நல்லா நினைவு வெச்சுக்குங்க. மகன்/ மகளால் ஏற்பட்டிருந்த டென்ஷன்ஸ் ஒவ்வொன்றாய்த் தீர்ந்துக்கிட்டே வந்து நிம்மதி தர ஆரம்பிக்கும். ஹாப்பிதானே? முன்பு இருந்ததைக் காட்டிலும் நிதி நிலைமையும் பலப்படுவதால் மனசுல தெம்பும் உற்சாகமும் பிளஸ் பிளஸ் ஆகும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் முனைப்புடன் ஈடுபடுவீங்க. அடடா, இத்தனை காலம் சும்மா இருந்துட்டோமே என்று ஆதங்கப்படாதீங்க. நல்லகாலம் இப்பதானேங்க வந்திருக்கு.

கன்னி

வேலைக்கு முயற்சி செய்யறவங்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும். ஆபீஸ் சம்பந்தமான சில சாதனைகளைச் செய்து முடிப்பீங்களே! உங்களுக்கு நல்ல அட்வைஸ் குடுக்கறவங்களை அலட்சியம் செய்யாமல் மதிச்சுக் காதைக் குடுங்க. அவங்க சொல்ற ஒரு விஷயம் ஒங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். அலுவலகத்துல பல காலமாக… ரொம்பப் பேருக்கு இருந்துக்கிட்டிருந்த பிரச்சினைகங்ளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். அதுக்கு நீங்களும் ஒரு காரணமாய் இருந்து பாராட்டு வாங்குவீங்க. இதன் காரணமா ஆபீஸ்ல உங்களுக்கு அவார்ட்.. ரிவார்ட் மாதிரியான நன்மைங்க அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் சான்ஸ் இருக்கு. வேறு பல விஷயங்கள்லயும் நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுட்டீங்க. நிம்மதி காரணமா முகத்துல ஒரு பொலிவு இன்கிரீஸ் ஆகும்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 19 முதல் 22 வரை
சந்திராஷ்டம தினங்கள்ல பேச்சுலயும் செயல்களிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

துலாம்

பல காலமா நிறைவேற்றாத திட்டங்கள்ல ஒண்ணாச்சும் நிறைவேறும். பிரார்த்தனைகளை நிறைவேற்றக் கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க. பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் உடனே சாமியைத் திட்ட வேண்டாம். நீங்க திட்டி முடிக்குமுன் குழந்தை ஜாலியா சிரிச்சுப் பேசி விளையாட ஆரம்பிக்குங்க. மிகவும் மெனக்கெட்டும் சிரமப்பட்டும் நீங்க செய்யற எந்த முயற்சியும் உங்களுக்கு வெற்றியாய்த்தான்முடியும் . ஆனால் எடுத்த வேலைகளில் சோம்பல் உள்ளே புகுந்து வேலைகளைத் தாமதப்படுத்தாமல் பார்துக்குங்க. திடீர் நன்மைகளையும் லாபங்களையும் ஷ்யூரா எதிர்பார்க்கலாம். பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்க்கு நன்மை உண்டாகும். அவங்களால ஒங்களுக்கு நன்மை விளைந்தாலும் ஆச்சர்யமில்லை. உறவினர் வீட்டு விசேஷங்கள்ல கலந்துக்கிட்டு, விருந்து சாப்பிடுவீங்க. என்ஜாய்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 22 முதல் 24 வரை
சந்திராஷ்டம தினங்கள்ல பேச்சுலயும் செயல்களிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

விருச்சிகம்

மனைவி / கணவராலும் அவங்க வழி உறவினர்களாலும் லாபமும் நன்மையும் உண்டாகும். தொடர்ந்து நல்ல பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவில் வெச்சு செயல்படுவதால் சக்ஸஸ் பார்த்துடுவீங்க. அயராத உழைப்பினாலேயே பெரிய நன்மைகளைக் காணப்போறீங்க. ஆனால் கண்டிப்பா உழைப்பில்லாத அதிருஷ்டத்தின்மீது மில்லிமீட்டர் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கைகூட வேணவே வேணாம். ப்ளீஸ். அசாதாரண லக் எதையுமே எதிர்பார்க்க வேண்டாம். உழைப்புக்கும் திறமைக்கும் நீங்க எதிர்பார்க்கும் அளவுக்கு மேலயே நல்ல பலன் இருக்கும் என்று ஷ்யூரா நம்பலாம். நிறையச் செலவுங்க இருக்கும். அதே சமயம் முன்பிருந்த உத்யோகம்.. சம்பளம்.. வாழ்க்கை வசதிகள்.. பிசினஸ் லாபம்ஸ் எதிலும் ஒரு குறையும் இருக்காதுங்க. டோன்ட் ஒர்ரி. அம்மாவோட ஆரோக்யத்தை கவனிச்சுக்குங்க. வாகனத்தோட ஆரோக்யத்தையும்தான்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 24 முதல் 26 வரை
சந்திராஷ்டம தினங்கள்ல பேச்சுலயும் செயல்களிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

தனுசு

சொத்து வாங்கறதுக்காக நீங்க செய்துக்கிட்டிருந்த முயற்சிகள் ஒங்களோட விருப்பப்படியே நிறைவேறும். அது பற்றிக் கவலையோ டவுட்டோ வேணாங்க. எனினும் அதற்கான முயற்சிகளும் செலவுகளும் நீங்க எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாயிருக்க வாய்ப்பிருக்கு. கணவன் மனைவிக்குள் லாஸ்ட் வீக் இருந்து வந்த சண்டை சச்சரவுங்க குறைஞ்சு இன்முகமான சூழல் நிலவும், உங்களுக்கு எண்ணமும் பிளானும் இருந்தால் வீடுகளை வாங்க, விற்க இது கரெக்டான டைம்தான். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகளைக் காணப்போகிறீர்கள் பாருங்களேன். உங்க ஆபீசில் இத்தனை நாளா இருந்து வந்த பிரச்னைங்களுக்குத் தீர்வு கிடைக்கும். மாணவர்கள் ஸ்காலர்ஷிப் கிடைக்க முயற்சி செய்யலாம். கூடிய விரைவில் பலன் கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அக்கறை கூடுதலாயிக்கிட்டு வரும். அக்கம் பக்கத்தினர் ஒங்களை மதிப்போடு பார்க்கும்படியான விஷயம் ஒண்ணு செய்வீங்க.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 26 முதல் 29 வரை
சந்திராஷ்டம தினங்கள்ல பேச்சுலயும் செயல்களிலும் ரொம்பவே கேர்ஃபுல்லா இருங்க.

மகரம்

குழந்தை வேணும்னு ஏங்கிக் காத்திருந்தவர்களுக்கு, அந்த பேபிக்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் வேளை வந்தாச்சு. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாகவே நீங்க கிடப்பில் போட்டிருந்த பெண்டிங் வேலைப் பட்டியலை எடுத்துத் தூசி தட்டி நிறைவேத்துவீங்க. நடக்கட்டும்! எவ்ளோ ஹாப்பியா இருக்கீங்க. இப்படி நீங்க இருந்து ரொம்ப காலமாச்சுதானே? கங்கிராட்ஸ். குட் லக். உத்யோகம் மற்றும் கல்வி சம்பந்தமான முயற்சிகளுக்கான நல்ல ரிஸல்ட் கெடைக்கும். மேரேஜ் பற்றிய பேச்சுக்கள் நல்லபடியாக முடியும். அப்பாடா எவ்ளோ காலமாய்க் காத்திருந்தீங்க. ஆனாலும் திருமண நாள் சற்று போஸ்ட்போன் ஆக வாய்ப்பிருக்குங்க. அதனால் என்ன? மணமகன்/ மணப்பெண் யாருன்னு தெரிஞ்சாச்சு, இரண்டு பேருக்கும் பலஸ்பரம் பிடிச்சுப்போச்சு., பிறகென்ன? ஜாலிதான். வாகனம் ஓட்டும்போதும் அதிவேகமாக நடக்கும்போதும் சற்று கவனமாக இருங்கள்.

கும்பம்

ஆபீஸ்ல உங்களுடைய வேலையை வேறு ஒருத்தர்கிட்ட ஒப்படைச்சு, அவங்களால அதைச் செய்ய முடியாமல் நீங்களே செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும். அது ஒரு வகையில் நல்லதுதான். அவங்க செய்திருந்தால் சொதப்பியிருப்பாங்க. சில நல்ல விஷயங்கள் பற்றி அவசரம் அவசரமாய் முயற்சி செய்துட்டு வேக வேகமாய்ப் பலனை உடனடியாய் எதிர்பார்த்தா எப்பிடிங்க? வெயிட்டீஸ் ப்ளீஸ். அததுக்கு நேரம் வந்தால் நாலு கால் பாய்ச்சலில் நல்ல ரிசல்ட் வந்தடையும். பொறுங்க. உடனடிப் பலன் இல்லையேன்னு முயற்சி செய்வதை நிறுத்தி பக்கத்துல உள்ள சமுத்திரத்துல போட்டுடாதீங்க. புதிய கார்.. ஃப்ளாட்..வில்லா.. வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீங்க. உறவினர் மத்தில எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீர்கள். நிறைய உழைக்க வேண்டியிருக்கும். பட் உழைப்புக்கேத்த பலனும் பாராட்டும் கட்டாயம் கெடைக்கும்.

மீனம்

மனசுல குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனா அது நீங்க பொருட்படுத்தும்படியாவோ டென்ஷனாகும் அளவுக்கோ இருக்காது என்பது குட் நியூஸ்தானே? வீடானாலும் சரி.. வாகனமாயினும் சரி.. அழகாகவும் கவர்ச்சிரகமாகவும் அமையும். நீங்களே எதிர்பார்க்காத அளவு சிறப்பா இருக்கும். ஒரு வேளை வீடு வாங்கினால் அதில் சுற்றிலும் பசுமை இருக்கும். உங்க பட்ஜெட் சற்று பெரிய அளவில் இருக்கும்னா.. எஸ்டேட் போன்றவை வாங்கவும் சான்ஸ் இருக்குங்க. உழைப்பு எதுவும் வீணாகாது. அததற்குக் காலம் வரும்போது சிறப்பான பலன் கொடுக்கும். இப்பபோ அப்படிப்பட்ட நல்ல காலம் ஒங்களை நெருங்கி வந்துக்கிட்டிருக்கு. அலைச்சலும் உழைப்பும் இருந்தாலும் பயணங்களால லாபம் ,நன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். எஸ்பெஷலி அலுகலகம் சம்பந்தமான பயணங்கள். நிதி சம்பந்தமான நன்மைகள் திடீர்னு நடைபெற்று சந்தோஷம் கொடுக்கும்.