மேஷம்

அதிகம் உழைக்க வேண்டிய வாரம். அதனால் என்னங்க? இந்த வாரம் பல வழிகளி களிலிருந்தும் பணவரவு கூடுதலாக வருங்க.   மனைவி மூலம் நன்மைகள் கிடைக்குமுங்க. பல வகையான உயர்ரக வாகன வசதி அமையுங்க. திருமணத்துக்குக் காத்திருப்போருக்கு நற்செய்தி உண்டு.  மாணவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சி உண்டாகும். ஃபேமிலியில் கருத்து வேறுபாடு ஏற்படாது இருக்க அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீங்க. உறவுகள் நடவடிக்கையால் சந்தோஷமும் பெருகும். செலவுகளும் அதிகரிக்கும்.  சிறப்பான பொதுஜனத் தொடர்பு இருக்குமுங்க.  உபரி வருமானம் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. அண்டர்ஸ்டாண்ட்??

ரிஷபம்

அதிக மகிழ்ச்சி தரும்  வாரம். குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அக்கம்பக்கத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். அனைத்தையும் புத்திகூர்மையால் சாதிப்பீங்க.  குடும்பத்தினரால் சந்தோஷம் சற்றே குறையக்கூடும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசினால்தான் முக்கியமான காரியங்களில் நல்ல  முடிவு எடுக்க முடியும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வி  பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படித்தாலே நலலபடியாக வெற்றியை தரும். குட் லக்.

மிதுனம்

பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் வாரம். குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசுவீங்க. மனதிற்கு இதமான செய்தி வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவாங்க. வியாபாரத்தில் அதிரடி திட்டங்களை தீட்டுவீங்க. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவாங்க. புத்தி சாதூர்யத்துடன் செயல்படுவீங்க. எதிர்பார்த்த பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.  எல்லாவற்றிலும் இருந்த பயம் நீங்கும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம்  தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம்  தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக  வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். பட்- டோன்ட் ஒர்ரி.

கடகம்

பெரிய பொறுப்புகள் தேடி வரும் வாரம். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீங்க. சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும் தாயார் ஆதரித்து பேசுவார். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவாங்க. உத்தியோகத்தில் குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீங்க. சிலர் உங்கள் உதவியை நாடுவாங்க. செலவுகளை குறைக்க திட்டமிடுவீங்க. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீங்க. உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீங்க எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே  அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வெரி குட்.. சூப்பர்.

சிம்மம்

அலைச்சல் அதிகரிக்கும் வாரம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும். சிறு சிறு அவமானங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்களை பகைத்து கொள்ளாதீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். குழந்தைங்க விஷயத்தில் நம்பிக்கை இன்கிரீஸ் ஆகும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீடு மனை சார்ந்த விஷயங்களில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும்.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீங்க.  சிறந்த முயற்சி உள்ளவர்கள்  கட்டாயம் வெல்வீங்க. பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். மற்றவர்களுடன் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். ப்ளீஸ். தட்ஸ் பெட்டர்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 3 முதல் செப்டம்பர் 5 வரை

கன்னி

விழிப்புடன் செயல்பட வேண்டிய  வாரம். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். பிசினஸ் செய்வோருக்கு எதிர்பார்த்த ஆர்டர்கள் தாமதித்தும், முயற்சிகளின்பேரிலும்  வரலாம். எது எப்படியோ.. எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீங்க.  உத்யோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம்.  கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துத் சென்றாக வேண்டும். . வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மனோ தைரியம்  கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை.  திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். அனைத்து டென்ஷன்களிலிருந்தும் கட்டாயம் வெளிவருவீங்க. பெஸ்ட் ஆஃப் லக்ஸ்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 8 வரை

துலாம்

சிந்தனைத் திறன் பெருகும் வாரம். கடுமையான சூழல்கள் ஏற்பட்டு, வேறு வழியின்றி எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்களை நம்பிசி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பாங்க. அதை மிகுந்த கவனத்துடன் செயல்படுத்துங்கப்பா. சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீங்க. வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீங்க. உத்தி யோகத்தில் சவாலான வேலை களை மிகவும் முயச்சி செய்து ஒரு வழியாக முடிப்பீங்க. கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை ரொம்பவும் கவனமாக கையாளுங்க. உடல் அசதி சோர்வு வந்து விலகும். யாரையும் யாருக்கும் ரெகமண்ட் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து போங்க. வாரக்கடைசியில் வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஹாப்பி?

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 10 வரை

விருச்சிகம்

புகழ் கௌரவம் கூடும் வாரம். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரம் தழைக்கும். பொது ஒப்பந்தம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவாங்க. மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும்.  குடும்பத்தினருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்கள் மனசு காயப்படும் படி பேசாதீர்கள். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெருமைதேவைப்படும் நாள். செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். வெரி குட்.

தனுசு

மனநிறைவு கிட்டும் வாரம். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீங்க. பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பாங்க. உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீங்க. பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீங்க. பழைய பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தி யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் சென்று மனம் ரிலாக்ஸ் ஆகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். சூப்பர்.

மகரம்

அமோகமான வாரம். சமயோசிதமாக பேசி சாதிப்பீங்க. பணப்புழக்கம் அதிரிக்கும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீங்க. விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். செயல்களில் திட்டமிடுதல் மிகவும் அவசியம். அதேபோல் செலவுகளிலும் சற்று கவனம் செலுத்துவது நல்லது. சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். இட்ஸ் ஓகே. ஹாப்பியா செய்ங்க.

கும்பம்

புதுமை படைக்கும் வாரம். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீங்க. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையை புரிந்து கொள்வீங்க. உத்தியோகத்தில் புது பொறுப்பை ஏற்பீங்க. சந்தோஷத் துள்ளலுடன்  இருப்பீங்க. உறவினர்கள் மூலம் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தையைத் தொலைபேசி மூலம் தொடங்குவீங்க . தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். பழைய கடனைத் திருப்பித் தரும் வாய்ப்பு ஏற்படும். கொடுத்த கடனும் திரும்பக் கிடைக்கும். ஃபேமிலியில் சந்தோஷ அதிர்ச்சி  இருக்கே. தட்ஸ் குட்.

மீனம்

எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் வாரம். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீங்க. தாய்வழி உறவினர்களுடன் மன ஸ்தாபம் வந்து நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையுங்க. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பாங்க. உத்தியோகத்தில் மறுக் கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். இந்த காலகட்டம் உங்களுக்கு ஒரு இனிய நற்பலன்கள் நடைபெறும் காலமாக அமையுங்க. கொடுக்கல் வாங்கல்களில் இருந்த மந்த நிலை மாறும். குடும்பத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள்.  அப்போதுதான் பிரச்னைகளை தவிர்க்க முடியும். இதுவரை நடைபெறாத ஒருசில காரியங்கள் இப்பொழுது நடைபெறலாம்.  திடீர் மாற்றங்கள் சந்தோஷமாகத் திகைக்கவும் வைக்கும். வாவ்.