மேஷம்
தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்க முயற்சி செய்யலாம். உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள். நண்பா்கள் எதிரிகளாகும் நேரம் இது. கூட்டுத்தொழிலில் பங்குதாரா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பணப்பிரச்னை தலையெடுத்தாலும் சமாளிப்பீங்க. மனம் ரிலாக்ஸ் ஆகும். வாழ்க்கை துணை நலம் மேம்படும். காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் வாக்குவாதத்தினை தவிர்க்க வேண்டும். பயணத்தில் சிறு நன்மை ஏற்படும். குடும்ப பிராப்ளம்ஸ் தீர்ந்து நிம்மதி பிறக்கும். கோபமான பேச்சுக்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மன தைரியமும் நிம்மதியும் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். நண்பர்களால் நன்மை உண்டாகும். மனதில் உள்ள குழப்பம் நீங்கும்.
சந்திராஷ்டமம் :நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
மனதில் உற்சாகம் அதிகரிக்கும், உடலில் சுறுசுறுப்பு கூடும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவைங்க. இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். நண்பா்கள் உதவி கிடைக்கும். உத்தியோகத்திலிருப்பவா்களுக்கு இருந்த வந்த பிராப்ளம் தீரும். பண வருவாய்க்கு பஞ்சமிருக்காது என்றாலும் கடன் தொல்லை சிறிது சிறிதாகத் தீர ஆரம்பிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வேலை செய்யும் உழைப்பு அதிகரிக்கும் புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். பண வரவு அதிகரிக்கும். திடீர் யோகம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சொந்த பந்தங்கள் வருகையால் உற்சாகமடைவீங்க. முதலீடுகளைத் தவிர்க்கவும். வண்டி வாகனங்களில் அதிவேகாமகப் பயணங்கள் செய்ய வேண்டாம்.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன வாக்குவாதம் வந்து செல்லும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். அலுவலகத்தில் பாலிடிக்ஸ் அதிகரிக்கும். எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிறிய, நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வம்பு வழக்குகளால் இருந்து வந்த பிராப்ளம் நீங்கும். உடல் உபாதை ஏற்படும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவைங்க. தம்பதியரிடையே சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும் தற்காலிகமானதே. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். சுப விரயம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பீங்க. வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வியாபாரம் விருத்தியாகும். வியாபாரம் விருத்தியாகும், வியாபாரக் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும்.
சந்திராஷ்டமம் : டிசம்பர் 4 முதல் டிசம்பர் 7 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். வேலைகளில் உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் கூடுதலாகும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும். சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீங்க. அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவைங்க.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீங்க உடலில் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்
சிம்மம்
எந்த பக்கமாவது இருந்து பணம் வந்து கொண்டேயிருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு வேலை உயரும் கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் இருந்த பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். அப்பாவின் உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்பட்டாலும் திருப்தி இருக்காது. தொழில் தடை நீங்கும். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். தொழில், வியாபார கூட்டாளிகளின் உறவு வலுபடும். மேலும் லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நல விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது நல்லது. பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் இருந்து வந்த பிராப்ளம் தீரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்களில் கவனம் தேவைங்க. செய்யும் புதிய முயற்சிகளுக்கு தடைகளைத் தாண்டி வெற்றி உண்டாகும்.
கன்னி
பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். வீட்டில் தம்பதியர் இடையே பிரச்சினை வந்து உடனுக்குடன் சமாதானமாகும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.சற்று விட்டுக்கொடுத்து செல்வீங்க என்பதால் நீங்கும். இந்த வாரம் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. செலவுகளில் கவனம் தேவைங்க. பண வரவு அதிகரித்தாலும் சுப விரைய செலவுகளும் வரும். வாகனங்களை பழுது நீக்கி சரி செய்து கொள்வது நல்லது. செயல்கள் எல்லாம் சிறப்படையும். அம்மாவின் ஆரோக்கியம் மேம்படும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கலாம். பதவி உயர்வு ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். உறவினா் வருகை உண்டு. பணம் வருவாய் அதிகாிக்கும். அதற்கு ஏற்ப செலவினமும் அதிகாிக்கும். பண நெருக்கடிகள் நீங்கும். நிதி சார்ந்த விஷயங்களில் நன்மை உண்டாகும். மன தைரியம் அதிகரிக்கும்.
துலாம்
எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உண்டு. ஓரளவு பணவருவாய் உண்டு. திடீா் வாய்ப்பு தேடி வரும். வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். காதல் முயற்சிகள் கைகூடும் திருமண விசயமாக பேசி முடிக்கலாம். நன்மைகள் நடைபெற பச்சை நிற ஆடைகளை அணியவும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உங்களுக்கு வரவேண்டிய பணம் கைக்கு வரும். வேலை விசயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியைத் தரும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் இருந்த எதிரிகளின் பிரச்சினை நீங்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். எல்லா செயல்களும் சிறப்படையும். புதிதாக வீடு வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிகம்
வீடு, நிலம், வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். சகல செளபாக்கியம் கிடைக்கும். பண வருவாய் ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். ஆடை ஆபரணம் சோ்க்கை ஏற்படும். திருமணம் சுபகாரியங்கள் கைகூடி வரும். வேலை செய்யும் இடத்தில் சிலருக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும். நன்மைகள் அதிகம் நடைபெறும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவைங்க. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்து விசயத்தில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். புத்தியில் சஞ்சலம் ஏற்படும். அக்கம்பக்கத்தாருடன் பிரச்சினை உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான வாரம். சோம்பல் விலகி சுறுசுறுப்பு அதிகரிக்கும். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீங்க. அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவைங்க.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும்.
தனுசு
திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் காலமிது. பேச்சில் இனிமை கூடும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களுக்கு மூத்த சகோதரர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் ஏற்படும் காலமாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். பணவருவாயும், சொத்து சோ்க்கை உண்டு. சகோதரர்களால் உதவிகள் வந்து சேரும். இந்த கால கட்டத்தில் மிகச் சிறிய அளவில் உடல் உபாதை ஏற்படும். உடல் நலனில் அக்கறை செலுத்தவும். முன்னோர் சொத்து விற்பனையில் பங்கு கிடைக்கும். அப்பாவின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உடலில் சோர்வு அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பம் ஏற்படும். கவனமும் நிதானமும் தேவைங்க. பெரிய அளவில் முதலீடுகள் வேண்டாம். மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும். சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவீங்க உடலில் தெம்பும் தைரியமும் அதிகரிக்கும்
மகரம்
இது திருப்தியான காலமாகும். பண வரவு அதிகரிக்கும். சிறிய முதலீடு செய்தால், நல்ல பலனைப் பெற்றிடலாம். பரிசுகள் மற்றும் சலுகைகளைப் பெறலாம். உறவில் சில சிக்கலைச் சந்தித்தாலும், அன்னியோன்னியம் அதிகரிக்கும். அரசாங்க தேர்வுகளுக்குத் தயாராகும் போட்டியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நல்ல காலம். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. உங்கள் உடல் நலனை பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். மனதில் கலக்கம் அதிகரிக்கும் உடலில் சோர்வு ஏற்படும். வேலைப் பளு அதிகரிக்கும். வீண் பேச்சுக்களைத் தவிர்க்கவும் குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். புத்திரர்கள் மூலம் சந்தோஷ செய்திகள் தேடி வரும். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் வரும்.
கும்பம்
பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன சண்டை சச்சரவுகள் நீங்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் உங்களின் பேச்சு திறமையால் புதிய வாய்ப்பு, வருமானம் அதிகரிக்கும். தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு சாதகமான நேரம். தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். மனதில் மந்தத் தன்மை உருவாகும். சுப காரியங்களில் தடைகள் வரும் சிறு போராட்டத்திற்குப் பிறகு வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். மனதில் பயம் ஏற்படும். கவனமும் நிதானமும் தேவைங்க. வீண் வாக்குவாதங்கள் தவிர்க்கவும். பயணங்கள் வேண்டாம் தவிர்க்கவும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.
மீனம்
வருமானம் அதிகரிக்கும் எந்த பக்கமாவது இருந்து பணம் வந்துக்கிட்டே இருக்கும். சிலருக்கு பதவி உயரும். கமிஷன், புரோக்கரேஜ் வழியில் பணம் வரும். பூா்வீக சொத்தில் பிராப்ளம்ஸ் தலைதூக்கினாலும் டென்ஷன் இல்லை. அப்பாவின் உடல்நிலையில் சிறிதளவு கவனம் செலுத்துங்கள். சகோதர வழியில் ஆதாயம் ஏற்படும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும் உங்களின் சிந்தனை, திறமை, ஆளுமை அதிகரிக்கும். தொழில், வியாபார கூட்டாளிகளின் உறவு வலுபடும். லாபம் சிறப்பாக இருக்கும். உடல் நல விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டியது நல்லது. நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதல் மலரும் காலம் இதுவாகும். படிப்பில் மந்தத் தன்மை உண்டாகி. பிறகு சரியாகும். மேல்படிப்பைத் தேர்ந்தெடுக்கும் விசயத்தில் கவனம் தேவைங்க. உடல் நலனில் பிராப்ளம் இல்லை பண வரவு அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் :நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.