மேஷம்
முயற்சிகள் தடைகளைக் கடந்து வெற்றி தரும் வாரம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கண்காணிக்க வேண்டும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் இருக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களுக்கு வீடே விழாக்கோலம் பூணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். நல்ல வகையான உணவு வகைகளை உட்கொள்வாங்க. டீக்காக உடையணிந்து ஆட்களை அசத்துவாங்க. வார மத்தியில், குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் பேசப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
ரிஷபம்
லாபகரமான வாரம் இது. வியாபாரிகள், தொழில் துறையினர் சிரமப்பட நேர்ந்தாலும் அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டிருந்தாலும், அப்படிச் செய்தால் உத்தரவாதமான நன்மை ஏற்படும். இந்த வாரம் வாக்கு வன்மையால் பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்படும். பூஜா வழிபாடுகளும், பெரியோர் ஆசிகள் ஆகியவை மூலம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். சுபச் செய்திகளைக் கேட்டு மகிழ்வாங்க. தொழிலில் புதிய முதலீடுகளால் உற்பத்தி திறன் அதிகரித்து இலாபம் பெருகும். புத்தக வெளியீட்டாளர் களுக்கு தங்கள் தொழிலில் ஏற்றமான காலம். பெரியவர்கள் ஆசிகள், ஆதரவு ஆகியவை எப்போதும் இருக்கும். அறிவு விருத்தி ஆகும். மேலதிகாரிகளின் ஆதரவால் மேன்மை அடைவீங்க. வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்
பொருளாதார ரீதியாக அனுகூலமான காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள் எதிர்பார்த்த ஆதாயத்தை அடைவாங்க. உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் தங்களுக்கான கௌரவத்தை அடைவீங்க. இந்த வாரம் தனவரவு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள், பதவிகள் ஆகியவை கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்தபடி இலாபங்கள் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவுகளின் உதவியால் உள்ளம் மகிழும். அரசுப் பணியாளர்களுக்கு ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். கோடை வெப்பம் காரணமாக உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வரலாம். உடல் நிலையை அலட்சியப்படுத்தாதீங்க. மனைவியின் அரவணைப்பு மூலம் மனக் கவலைகள் மறந்து பறந்துவிடும். குடும்ப நண்பர்கள் அனுசரணையாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். பெண்கள் குடும்பத்தையும், வேலையையும் ஒருசேர பார்த்து சமாளிக்கத் திணர வேண்டிய சூழ்நிலை நிலவும். ஆயினும் உங்கள் திறமையால் சமாளித்து விடுவர்.
கடகம்
செலவுகளுக்கு ஏற்ற பண வரவும் இந்த வாரம் உண்டு. அரசு ஒப்பந்ததாரர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வார இறுதி நாட்களில் வண்டி வாகனங்களில் பயணிக்கும்போது சற்றே கவனமாயிருந்துவிட்டால் போதுங்க. தந்தைவழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு வகையில் கட்ட வேண்டிய தீர்வைகள், வரி பாக்கிகள் ஆகியவற்றைச் செலுத்துவதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் வந்து சேரும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வு போன்ற முன்னேற்றங்களை அடைய முற்படுவீங்க. குதூகலமாய் இருந்த குடும்ப ஒற்றுமை குறையாம பார்த்துக்குக்குங்க மகிழ்ச்சி குறைய சிலருக்கு (மட்டும்) சான்ஸ் இருக்குங்க. . எனவே, அனுசரித்துச் செல்வது நல்லது. தூக்கமின்மையால் சுறுசுறுப்பற்ற தன்மை நிலவும்.
சிம்மம்
பெரியோர் ஆசிகள் கிடைக்கும் காலகட்டம் இது. தொழில்துறையினர், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள் வழக்கத்தை விடக் கூடுதலாக உழைக்க வேண்டும். ஷேர் மார்க்கெட்டில் ஈடுபடுவதாயிருந்தால் மிகவும் கவனத்துடன் கணக்கிடுங்கள். அதுல லிமிட்டாய் முதலீடு செய்ங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் தேவையான பணவரவு இருப்பதால் சமாளித்துவிடுவீங்க. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும். சுப வார்த்தைகளைக் கேட்டு ஞான தன்மைக்கு மாற முயல்வீங்க சிலருக்கு நண்பர்கள் பகைவர் ஆகலாம். எப்போதும் பண விஷயமான சிந்தனைகள் எழும். அரசு அதிகாரிகள் தொல்லை தரலாம். நண்பர்களிடையே போட்டி பொறாமைகள் அதிகமாகும். பட்.. அது ஆரோக்கியமான போட்டி. உங்கள் பக்கம் திறமையும் பலமும் அதிகம். ஸோ டோன்ட் ஒர்ரி.
கன்னி
மனசுல உற்சாகம் ஏற்படும் காலகட்டம் இது. தொழில்துறையினர் புதிய முதலீடுகளை மேற்கொள்வாங்க. வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அடைவாங்க. குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வாங்க. தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீங்க. எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும். சகோதரர்களால் தேவையற்ற பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. வெளியூர்ப் பயணங்களை.. குறிப்பா.. ஜாலி டூரைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பாங்க. உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சலுகை கிடைக்கும்.
துலாம்
புதிய தொடர்புகளால் எதிர்பாராத வாய்ப்புகளை பெறுவாங்க. ஷேர் மார்க்கெட் லாபம் தரும். இல்லத்தரசிகள் மனசுல உற்சாகம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் சந்தோஷம் இன்கிரீஸ் ஆகும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். ஆபீஸ் பிரச்னைங்களைப் பத்தி பயமே வேணாம். மி…க விரைவில் சரியாகும்.
விருச்சிகம்
தகவல் தொடர்பு மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும் காலகட்டம் இது. தொழில் துறையினர், வியாபாரிகள் புதிய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் அடைவாங்க. உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீங்க. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் சான்ஸ்ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் அது பற்றி வருத்தமோ கவலையோ ஏற்படாத அளவுக்கு அதனால நன்மைகள் ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும்.
தனுசு
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோஅல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். வேலைக்கு முயற்சி செய்பவர் களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சில சங்கடங்கள் நீங்கும். அதாவது அவங்க பிரிஞ்சிருக்கும் உறவுகளைச் சேர்த்து வைக்க மனப்பூர்வமாய் முயற்சி செய்து அதுல வெற்றியும் அடைவாங்க. சிலருக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் சான்ஸ்ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் பொறுமை அவசியம். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பணவரவைப் பொருத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும். தந்தையுடன் ல் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகி முடியும்.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 26 முதல் செப்டம்பர் 29 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருங்க.
மகரம்
வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் சான்ஸ்ஏற்படும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சந்திராஷ்டமம் : செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 1 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருங்க.
கும்பம்
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். எதுவுமே தடை தாமதத்துக்குப் பிறகுதான் நிறைவேறும். குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவாங்க. சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கு சான்ஸ்ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குக் குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் சான்ஸ்ஏற்படும். நீண்டகாலமாக விடுபட்டிருந்த குலதெய்வ வழிபாடு செய்வதற்கான சான்ஸ்கனிந்து வரும்.
சந்திராஷ்டமம் : அக்டோபர் 1 முதல் அக்டோபர் 4 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாய் இருங்க.
மீனம்
பல வகைகளிலும் அனுகூலமான வாரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறை வேறும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வழியில் எதிர்பாராத பொருள் வரவுக்கு சான்ஸ்உண்டு. முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை நன்கு யோசித்து எடுப்பது நல்லது. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பாங்க. அதிகாரிகளை அணுகும்போது பொறுமை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சமாளிக்கும் அளவுக்குப் பணவரவு இருக்கும்.