மேஷம்

புதிய முயற்சிகள் சாதகமா முடியும். நண்பர்களால அனுகூலம் உண்டாகும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால உற்சாகமாகச் செயல்படுவீங்க. ஒங்களோட கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமா இருப்பாங்க. வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். தேவையான கடனுதவியும்  கெடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் மாதம் 25 முதல் ஏப்ரல் மாதம் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

ரிஷபம்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் குடும்பத்துல சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும்.  பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள்  கெடைக்கும். வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். ஆனால், எதிர்பாராத செலவு களும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீங்க. ஆபீஸ்ல உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் மாதம் 28 முதல் ஏப்ரல் மாதம் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

மிதுனம்

முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், அவருடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டியது அவசியம். ஆபீஸ்ல சுமுகமான சூழ்நிலையே காணப்படும். உங்களுடைய சமயோசிதமான ஆலோ சனை பெரிதும் பாராட்டப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

சந்திராஷ்டமம் : ஏப்ரல் மாதம் 30 முதல் மே மாதம் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

கடகம்

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வாங்க. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூல மாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆபீஸ்ல சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீங்க.

சிம்மம்

தேவையான பணம் இருப்பதால் செலவுகளைச் சமாளித்துவிடுவீங்க. உறவினர்கள் ஆலோசனை கேட்டு வரு வாங்க. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக் கசப்புகள் நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் சுபச்செலவு ஏற்படும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நெருங் கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீங்க. சிலருக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.

கன்னி

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி  கெடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். வாழ்க்கைத்துணையின் முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவீங்க. ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். ஆபீஸ்ல சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும்.

துலாம்

மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தாய்மாமன்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் கிடைக் கும். மன உறுதியுடன் செயல்படுவீங்க. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். குடும்பத்துல நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்வது நல்லது.

விருச்சிகம்

எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். பிற்பகலுக்கு மேல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.  சிரமங்கள் நீங்கும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று கூடிவரும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில்  கெடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும்  கெடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.

தனுசு

மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீங்க. பிள்ளைகள் கேட்பதை வாங்கித் தந்து அவர்களை உற்சாகப்படுத்துவீங்க. ஒங்களோட முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு  கெடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பாங்க. குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும்  கெடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய் வாங்க. எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். ஒங்களோட முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.

மகரம்

தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்று எடுக்க வேண்டாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படும் என்பதால் கவனம் தேவை. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீங்க. உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலஙகளைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆபீஸ்ல ஒங்களோட பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை  கெடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும்.

கும்பம்

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வரு வாங்க. நண்பர்கள் அனுசரணையாக இருப்பாங்க. வங்கிக் கடனுதவி  கெடைக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஆபீஸ்ல பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த சலுகை  கெடைக்கும். ஆபீஸ்ல உற்சாகமாக ஒங்களோட பணிகளைச் செய்வீங்க. ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல்  கெடைக்கும். அதிகாரிங்க சில நேரங்களில் கண்டிப்பாகப் பேசினாலும் அனுசரணையாகவும் இருப்பாங்க.

மீனம்

அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளை களால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம். பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீங்க. இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.