மேஷம்

லேடீஸ்க்கு வேலை பளுவளாக.. தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். ஸ்டூடன்ஸ்க்குக் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும். தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சின்னச் சின்னதாய்க் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும்.

ரிஷபம்

திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமா முடியும். கோபத்தை குறைச்சுக்கறது நன்மை தரும். நல்லா உழைக்கறவங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீங்க. வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். ஒங்களோடதொழில் அல்லது உத்தியோகத்துல கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். குடும்பத்துல உள்ளவங்க உங்க கிட்ட அனுசரிச்சுப் போவாங்க. அதனால எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீங்க. நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும்.

மிதுனம்

மெதுவாக நடைபெற்றாலும் காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். ஸ்டாப் ஆயிடாது. எனவே… பின்வாங்கிடாதீங்க. பேச்சில் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். நிறையப்பேர் உங்க கிட்ட ஆலோசனை கேட்பாங்க. சட்டென்று வேகமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால பரவாயில்லை. சரியாகவே தீர்மானிப்பீங்க. அடிப்படை புத்திசாலித்தனமும், இயல்பாக உள்ள சமயோசிதமும் கைகொடுக்கும். மனசுல எதைப் பத்தியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை அவாய்ட் செய்துடுங்க. அதுதான் பெட்டர். பாஸ் கிட்ட கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. ஹாப்பியான வாரம்.

கடகம்

ஆபீஸ்ல உங்களோட மேலதிகாரியின் நல்லெண்ணம் ஒங்களோடமேல் பதியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படாமல் பொறுமையாக போவறது உத்தமம். ஆபீஸ் வேலைகளில் கவனம் தேவை. ஒங்களோடவேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்காதீங்க. வண்டி பழுதடைவதால் செலவுகளும் வேலை தடையும் உண்டாகும். டாடியிடமிருந்து உதவிகள் கிடைக்கும். வளைகாப்பு, சஷ்டியப்த பூர்த்தி போன்ற விசேஷங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீங்க.

சிம்மம்

கவர்ச்சி அம்சம் இன்கிரீஸ் ஆகும். நாலு இடங்களுக்குப்போனால் மத்தவங்களைவிடவும் உங்களையே பலரும் தேடி வருவாங்க. பர்சனல் விஷயங்களை மத்தவங்ககிட்ட அதிகம் பேசாதீங்க. குடும்பத்தினர்கள் கிட்டேயும் நெருங்கிய உறவினர்களிடமும் நன்றி அது இது என்று எதையும் எதிர்பார்க்காதீங்க. பலனே எதிர்பார்க்காம இன்றைக்கு செய்துடுங்க. சீக்கிரத்தில் அதன் அருமை புரிந்து அவங்க பாட்டுக்கு உங்க கிட்ட நன்றி உணர்ச்சியோட வருவாங்க. உங்க பெருமையை ஊரே பேசும்போது அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்களா என்ன? வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீங்க. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி குடுப்பீங்க.

கன்னி

அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க வேண்டி வரலாம். டோன்ட் ஒர்ரி. அதிச் சரியா செய்வீங்க. வியாழக்கிழமை முக்கிய சந்திப்புக்கள் நல்ல ரிசல்ட் தரும். நல்ல ஃப்ரெண்ட்ஸ்ஸுடைய  உதவிங்க கிடைக்கும். வீடு கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை ஸ்டார்ட் செய்வீங்க. பெண்களின் சேமிப்பு பணம் தங்க நகைகளாக மாறும். உறவுக்காரங்களால முன்பு ஏற்பட்டிருந்த குழப்பங்கள், மன வருத்தங்கள் இனி மாறும். நிலுவையில உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலா உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மற்றும்கவர்மென்ட் வேலையில் உள்ளவங்க.. மக்கள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.  மத்தவங்களோட பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீங்க. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 23 முதல் ஆகஸ்ட் 26 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

துலாம்

ஏகப்பட்ட செலவுங்க காத்துக்கிட்டிருக்கு. நிறைய டிரஸ்கள் எடுப்பீங்க. நகைநட்டுன்னு வாங்குவீங்க.  எனவே எல்லாமே சந்தோஷம் தரும் செலவுங்கதான். வாழ்க்கையை ரசிக்கப்பிறந்தவங்க நீங்க (அல்லது உங்க மனைவி/மகள்) சின்னச்சின்னத் தோல்விங்களுக்குத் துவண்டு போயிக்கிட்டிருந்தீங்க. இப்ப நிம்மதியா சந்தோஷமான திருப்பங்கள் ஏற்பட்டு உங்களை ஹாப்பியாக்கியிருக்கும்.. ரைட்டா? நண்பர்கள் என்ற பெயரில் யாரையும் ஒங்களோடஉரிமையில் தலையிட அனுமதிக்கவே அனுமதிக்காதீங்கப்பா. இந்த வாரம் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 28 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

விருச்சிகம்

நல்ல நண்பர்கள் வாழ்வில் முன்னேறுவாங்க. சிலரின் முன்னேற்றத்துக்கு நீங்களும் காரணமாய் இருப்பீங்க.  அதுக்கு அவங்க நன்றி சொல்லி  நெகிழ்வாங்க. தடைபட்ட விஷயங்கள் எதிர்பாராத வகையில் கூடி வரும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அதனால் மன அழுத்தம் நீங்கி நிம்மதி அடைவீங்க. நீங்கள் ஆசைப்பட்ட படி நல்ல இடத்தில் வீடு, பிளாட் அமையும். சமையலறைக்கு தேவையான மின் சாதனங்கள் வாங்குவீங்க. வியாபாரத்துல போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்துல உள்ளவங்க கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும்.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 28 முதல் ஆகஸ்ட் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

நல்ல வேலை கிடைக்கும். அதுல நீங்க மேலும் மேலும் முன்னேறுவீங்க பாருங்களேன். லாபங்களும் வருமானங்களும் நீங்க நினைச்சதைவிடவும் அதிகமாகக் கிடைக்கும். நல்ல விஷயங்களையும் மற்றவர்களுக்கு நன்மை தரும் விஷயங்களையும் பேச ஆரம்பிச்சிருக்கீங்க. சூப்பர். இப்படியே எப்பவும் பேசினால் நன்மைகள் அதிகமாகும். பேச்சினால் வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த முறை அதிக அறுவடை. அரசாங்க உத்யோகம் கிடைக்க நீங்க செய்த முயற்சிகள் எல்லாம்.. அப்பாடா..இப்ப பலன் தருமே. என்ஜாய். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் கெடைச்சுடும்மா. மாணவர்களுக்குத் தடைகளை தாண்டி கல்வியை கற்கச் செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படிச்சு முடிப்பீங்க. மொத்தத்துல இந்த ராசிக்காரங்களுக்கு மனசுல நிம்மதியும் சந்தோஷமும் நிறையும்.

மகரம்

வெளிநாட்டிலேயிருந்து இன்கம் கிடைக்கும். உடல் நலம், மன நலம் சீராக இருக்கும். வீடு கட்ட, வண்டி வாங்க கேட்டிருந்த வங்கி கடன் கைக்கு வரும். வழக்கு சம்பந்தமாக சமாதான தீர்வுக்கு வாய்ப்புள்ளது. கன்னிப் பெண்கள் பெற்றோர்களின் அறிவுரைகளை கேட்பது நலம் தரும். அரசு, வங்கி ஊழியர்களுக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வுக்கு யோகம் உள்ளது. மாமன் வகை உறவுகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களச் சாதிச்சுக்குவீங்க. பணம் வருவது அதிகரிக்கும். இளம் வயசில் உள்ளவங்களுக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான சான்ஸஸ் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீங்க. கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்

திருமணமாகாதவங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாகும். குழந்தை அற்றவர்களுக்குக் குழந்தை பிறக்கும். லவ் கனிந்து கல்யாணமாக வெற்றியளிக்கும். டாடிக்கு குட் நியூஸ் வரப்போகுதுங்க. திடீர் அதிருஷ்ட வாய்ப்பு வரும். பரிசுகள் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. தங்க நகைகள் வாங்கித் தருவாங்க. மம்மிக்கு திடீர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தால் டென்ஷன் வேண்டாம். கடைசி நிமிடத்தில் அது ரத்தாகக்கூடும். அல்லது அறுவை சிகிச்சையினால் அற்புதமான ஆரோக்யம் மீளும். உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சவுக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீங்க. பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்

மீனம்

பழைய இரண்டு / நான்கு சக்கர வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீங்க. புது வீடு கட்டுவதற்கான பூமி பூஜை போடும் வேலையை தொடங்குவீங்க. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவாங்க. வருமானம் அதிகரிக்கும். எது பற்றியெல்லாம் பயந்தீங்களோ அதெல்லாம் நல்லபடியாக நடந்து நிம்மதியும் மகிழ்ச்சியும் அளிக்கும். பொதுவாகவே ஒங்களோடமனசில் பயமும் குழப்பமும் அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை என்றால் கிலோவில் அளக்கணுமா லிட்டரிலா என்பீங்க. உங்களுக்கு அபாரத் திறமை உள்ளது என்று யாராச்சும் எப்பவும் உங்களுக்கு எடுத்துச் சொல்லிக்கிட்டே இருக்கணும். இப்ப கேட்கவே வேண்டாம். இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த மனக்கவலை எல்லாம் மொத்தமா முடிவுக்கு வரும்.