மேஷம்

குடும்பத்துல சுப நிகழ்ச்சிங்க நடக்கப் போகுதுங்க. ஃப்ரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ்லாம் ஒண்ணாக்கூடி ஹாப்பியா சிரிச்சு.. உரக்கப்பேசி.. கலாட்டா கலாட்டா செய்து.. ஜமாயுங்க. குடும்பம் குழந்தை குட்டின்னு சந்தோஷமா இணைஞ்சு குதுகலிச்சு மகிழ்வீங்க. டூர் போவீங்க. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சின்ன சின்ன நோய்கள் ஏற்பட்டு நீங்கும். பெரியளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. தைரியம், தன்னம்பிக்கை கூடும். குறிப்பாக பெண்கள், இல்லத்தரசிகளுக்கு திருப்தியான வாரமாக அமையும். இந்த வாரம் உறவு நிலை சிறப்பாக இருக்கும். உங்க மனசுல அன்பும் காதலும் நிறைந்து இருப்பதாக உணர்வீங்க. காதலர்கள் மகிழ்ச்சியாக இருக்கும். திருமணத்திற்கு வரன் தேடுவோர் தங்கள் முயற்சிகளில் வெற்றி காணலாம். இந்த வாரத்தின் இரண்டாம் பகுதியில் உங்க தெளிவற்ற தகவல் தொடர்பு காரணமாக தவறான புரிந்துணர்வு எழலாம். பிறகு சரி செய்துடுவீங்க.

ரிஷபம்

குழந்தைங்க லைஃப்ல ஹாப்பி நிகழ்ச்சிங்க நடக்கப்போகுது. கணவர் அல்லது மனைவிக்கு ஒரு குட் நியூஸ் உண்டு. டாடிக்கு உங்களாலயும் உங்களுக்கு அவராலயும் நல்லது நடந்து ஒருத்தருக்கொருத்தர் பாராட்டி .. நன்றி சொல்லி சந்தோஷப்படப்போறீங்க. வேலை தொடர்பாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில், நீங்க எடுக்கக்கூடிய முடிவுகள்ல எந்த தயக்கமும் காட்ட வேண்டாம். தைரியமா நீங்க களம் இறங்கலாம். இந்த வாரம் உங்க முக்கிய கவனம் உங்க பொருளாதாரம் குறித்ததாக இருக்கும். நீங்க வீட்டில் வசதி மற்றும் வாகன வசதிகளை அனுபவிப்பீங்க. உங்க வழக்கமான வருமானம் மற்றும் பிற ஆதாரங்கள் மூலம் நல்ல பண வரவைக் காணலாம். பங்குவர்த்தகம், பங்குகள், மியூச்சுவல் பன்ட்ஸ், மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் நிதி ஆதாயங்களைப் பெறுவீங்க. மனசுல நேர்மையான எண்ணங்களும்  தெய்வ நம்பிக்கையும் கூடும்.

மிதுனம்

ஆபீசில் வெளியூர் அல்லது வெளிநாட்டுக்குப் போகச் சொல்வாங்க. மறுக்காம யெஸ் சொல்லுங்க. அந்தப் பயணத்து மூலமா நிறைய நன்மைங்க காத்துக்கிட்டிருக்கு.. ரெடியா இருந்துக்குங்க. திடீர்னு அதிர்ஷ்டம் வருவதற்கான சான்ஸ் இருக்கிறது.  சில பேருக்கு சில உணவுகளால், ஒவ்வாமை, அலர்ஜி உள்ளிட்டவை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அதையும் நீங்கள் ஒரு சரியான மருத்துவரை அணுகி  கன்ஸல்ட் செய்வீங்க. உங்களுக்கு சரியாகி போகும். உங்க உத்தியோக வளரச்சிக்கு இந்த வாரம் சாதகமாக உள்ளது. உங்களில் சிலர் பதவி உயர்வு பெறலாம். சக பணியாளர்களுடன் நல்லுறவைப் பராமரிப்பீங்க. வேலை சம்பந்தமான பயணங்களை நீங்க மேற்கொள்ளலாம். உத்தியோகம் மூலம் வரும் பண வருவாய் உங்க நிதிநிலையை மேம்படுத்தும். வீட்டில் உற்சாக சூழல் நிறையும்.

கடகம்

திடீர் லாபங்கள் நேர்மையான முறைல வரும். எப்பவோ இன்வெஸ்ட் செய்ததெல்லாம் பல மடங்கு பெருகி வரும். உடல் நலத்தை அநாயாசமா அலட்சியம் செய்த காலம் போய்.. அக்கறையாப் பார்த்துக்க ஆரம்பிப்பீங்க. கணவர் அல்லது மனைவிக்கு நிரந்தர நன்மை ஒண்ணு கூடி வரப்போகுதுங்க. தொழிலைப் பொறுத்தவரை அனுகூலமான பலன்கள் கிட்டும் வாரமாக இந்த வாரம் உள்ளது. கடந்த கால முதலீடுகளில் இருந்து லாபங்களைப் பெறவும் அவ்வாறு பெற்ற பணத்தை இந்த வாரம் தொழிலில் மறு முதலீடு செய்வதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது. நீங்கள் விடுதியில் தங்கி படிப்பவர் என்றாலோ, ஆன்லைனில் படிப்பவராக இருந்தாலோ உங்களுக்கு அது நல்ல விதமாக அமையும்.   நீங்க சவால்களைச் சந்திக்க வாய்ப்புள்ளது. எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் வேலை தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள் விஷயத்தில் சற்றே கவனமாயிருந்தால் சூப்பர் பலன் இருக்கும்.

சிம்மம்

யாரோடயும் எதுக்காவும் சண்டை வேணாம். எஸ்பெஷலி கடுமையான வார்த்தைகளை  அமிலம் மாதிரி வீச வேண்டாம்.  வேண்டவே வேண்டாம். திடீர் லக் ஒண்ணு வந்து சந்தோஷப்படுத்தப்போகுது. உங்க அப்பாவுக்கும் டிட்டோ. உங்க கடின உழைப்பின் மூலம் உங்க நிறுவனம் நல்ல லாபத்தையும் நிதி ஆதாயங்களையும் காணலாம். இருப்பினும், புதிய விதிகள் மற்றும் யோசனைகளை முன்னெடுப்பதிலும் செயல்படுத்துவதிலும் நீங்க சில சவால்களையும் சிரமங்களையும் சந்திக்க நேரிடலாம். வணிகத்தில் கூட்டாளிகள் மூலம் லாப கரமான வருவாய் இருக்கும். இதனால் உங்கள் சேமிப்பு தொடர்பாக ஸ்திர தன்மை அதிகரிக்கும். இந்த மாதத்தில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட உங்களோட உறவு, வேலையில் முன்னேற்றம் ஏற்படும். இந்த வாரத்தின் இரண்டாம் பாதியில் நீங்க பதட்டமாக உணரலாம். குடும்பத்தில் நல்லுறவு பராமரிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம்.

கன்னி

அலைச்சல்.. உழைப்பு.. அபரிமித வேலைன்னு இருந்தாலும் அத்தனைக்கும் சூப்பரான நற்பலன்கள்.. வருமானம்.. சன்மானம் அனைத்தம் கேரன்ட்டியா உண்டுங்க. கணவர் அல்லது ஒய்ஃபுக்கு வெளிநாட்டு ட்ரிப் உறுதியாகும். அதன் மூலம் கெடைக்கப்போற நன்மைங்களும் கன்ஃபர்ம் ஆகும். உங்க வியாபாரத்துல புதிய சிந்தனையுடன் செயல்படப்போறீங்க. ஸோ உங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்த மாதத்துல நிதி நிலை முன்னேற்றத்தால உங்களோட கடன் குறையப்போகுது. வாழ்க்கைத் துணைக்கு அனுசரணயா .. அன்பா.. நடந்துக்குங்க. உங்க ஆரோக்கியத்திலும், ஆற்றலைச் செலவிடுவதிலும் அக்கறை காட்டி நன்மை அடைவீங்க. உங்களின் துணிச்சலான செயல்பாடு உற்சாகத்தைத் தரும். நம்பிக்கையுடன் செய்யும் தொழில் முயற்சியில் மன நிறைவு தரும் பலன் கிடைக்கும். நிறைய டிராவல் செய்வீங்க. நல்ல பலன் உண்டு.

துலாம்

சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்னைங்களுக்குத் தீர்வு தெரிஞ்சு நிம்மதியாகும். எஸ்பெஷலி வயிறு சம்பந்தமான பிரச்னைங்களும் ஜீரணக்கோளாறுகளும் முடிவுக்கு வந்து மங்களம் பாடும். புதிய வாய்ப்புகள் பல கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கும், வியாபாரம் தொடர்பாகவும் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும். அதிக லாபம் கிடைக்கும் நிதி நிலை முன்னேற்றத்தால் குடும்ப செலவுகளை சமாளிக்கவும், தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். ஆன்மிகத்தில் ஆர்வம் ஏற்படும். பயணங்களும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான முதலீட்டு ஆர்வம் காட்டுவீங்க. குடும்பம் செழிக்கும். அன்பும், மகிழ்ச்சி அதிகரிப்பதோடு உங்களுக்குப் பல வாரமா மனசை அரிச்சுக்கிட்டிருந்த பெரிய கவலைகள் நீங்கும். உறவுகள், ஆரோக்கியம் மேம்படும். சகோதர சகோதரிங்களோட ஹாப்பியாப் பேசுவீங்க. அவங்களும் உங்ககூட .. அதே.

விருச்சிகம்

இந்த திடீர்க் கோபம்னு ஒரு சமாசாரம் இருக்கே.. அதை மட்டும் மாத்திக்குங்க, ரெண்டாவது நிமிஷம் உங்க கோபம் போன எடம் தெரியாம மறைஞ்சுடுது. ஆனா அது மத்தவங்களுக்குத் தெரியாதே? ஆரோக்கியத்துல கவனம் செலுத்துவீங்க. கூட்டிக்கழிச்சு யோசிச்சா.. மொத்தத்தில் உங்க ஆரோக்கியம் நல்லாத்தான். இருக்கும். உத்தியோகத்துல சக ஊழியர்கள், நண்பர்களோட ஆதரவு கிடைப்பதால் எந்த வேலையையும் சிறப்பா, வேகமா செய்து முடிப்பீங்க.  உறவுகளைப் பேணுவதில் கவனம் தேவை. உங்களின் குடும்பம், பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பான முதலீட்டில் ஈடுபடுவீர்கள். புதிய வேலை வாய்ப்புகள், தொழில் தொடர்பான முயற்சிகள் சாதக பலனை தரும். இந்த வாரம் நீங்க உங்களோட அல்லது உங்க குழந்தைங்களின் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பீங்க. இந்த வார முதல் பாதியில் சாதகமான பலனும் இரண்டாம் பாதியில் மிதமான பலனும் இருக்கும்.

தனுசு

வெளி நாட்டிலேயிருந்து குட் நியூஸ் வரும்.. குறிப்பா அலுவலக சம்பந்தமான முன்னேற்றம் உண்டு. உங்க மம்மி உங்க ஊருக்கு வந்து ஒங்களைப் பார்ப்பாங்க. பல காலமா மனசை அழுத்திக்கிட்டிருந்த பிரச்னைங்க ஃபுல்ஸ்டாப் வெச்சுக்கும். உங்களோட சொத்து அல்லது முன்ன எப்பவோ செய்த முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். நிதி நிலை முன்னேற்றமும், பணியிடத்தில் சலுகையும், ஆதாயமும் அனுபவிக்க முடியும். உங்க தைரியம் மற்றும் தன்னம்பிக்கையால ஆரோக்கியத்தில் சிறப்பான நன்மைகள் அடைவீங்க. உங்க நிதிநிலையில் ஸ்திரத் தன்மை இருக்கும். இது எதிர்காலத்துக்கு நிறைய உதவிகரமா இருக்கப்போகுதுங்க. தொழில் மாற்றம் செய்ய நினைப்பீர்கள். இருப்பினும் இதில் எல்லாவற்றிலும் பொறுமையும், நிதானமான முடிவு எடுப்பது நல்லது. பண வருவாய்க்காக அதிகம் அலைய வேண்டியது இருக்கும். ஆனா முடிவு சுபம்.

மகரம்

தற்போது எல்லாம் டிலே மயம். எனவே மனசைத் தயார் நிலைல வெச்சுக்குங்க. எதையும் ஒரு முறைக்கு நாலு வாட்டியா முயன்றுதான் முடிக்க முடியும். தடைகளும் தாமதங்களும் தினசரி ரொட்டீன் என்றாகும். அதனால் என்ன? கடைசில முழுசாய் நல்லபடியா முடியும். வார்த்தைங்களை கவுன்ட் செய்து பேசுங்க. அல்லது மனசில் நோ டாக்கிங்னு போர்ட்டு போட்டுக்குங்க. நண்பர்களால் நன்மை வரப்போகுது. இந்த வாரத்துல மாணவர்கள் புத்திசாலித்தனமாகவும் தெளிவாகவும் இருந்தபோதிலும் எதிர்பாராத வெளிப்புற காரணிகளால் குழப்பத்தை உணரலாம். நீங்க ரொம்பவும் மதிக்கும் ஒரு நபரால அந்தக் குழப்பம் தீர்ந்து நிம்மதி ஏற்படும். பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்த வேண்டும். அவநம்பிக்கை தரும் எண்ணங்களை தவிர்த்து நேர்மறையாக எண்ணினால் நல்ல பலன்கள் கிடைக்கும். பரபரப்பான் வாரம்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 22 முதல் நவம்பர் 25 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம்

வண்டி ஓட்டும்போது ரொம்ப ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா ஓட்டுங்க. பேசும்போதும் டிட்டோ. மற்றபடி நோ பிராப்ளம். ரிலேட்டிவ்ஸ் நல்லபடியா இழைவாங்க. நீங்களும் நிறைய உதவிங்க செய்வீங்க. பட்.. அதுக்கு நன்றியெல்லாம் எதிர்பார்க்க வேணாம். அது பற்றிச் சொல்லிக்காட்டவோ.. இடிச்சுக் காட்டவோ வேணாம். பிகாஸ் அடுத்த முறை அவங்க உதவி கேட்டு வரும்போது இது பற்றி நெகிழ்ந்து பேசி “தாங்க்ஸ்..” சொல்லி உருகுவாங்க. (அப்பவும் ஒரு புன்னகையோட விட்ருங்க). அலைச்சலை அவாய்ட் செய்ய முடியாதுங்க. ஆபீஸ் சம்பந்தப்பட்ட பழைய நல்ல நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவீங்க. மனசுல உள்ள பாரம் நீங்கும். அவங்களை ஏன் தேவையில்லாம பகைச்சுக்கிட்டோம்னு மனசு உறுத்தும். தொழில் / ஜாப் ரீதியா பெரிய நன்மைகளும் பாராட்டும் உண்டு. அவார்ட் உண்டு. ரிவார்ட் உண்டு. புது இயந்திரங்களையோ சாதனங்களையோ உபயோகிக்கப் பழகிக்குவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 25 முதல் நவம்பர் 27 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மீனம்

அது மிகவும் யூஸ்ஃபுல்லான விஷயமா இருக்கும். காதல், தொழில் வாய்ப்புக்கள், பணவரவு, உடல் ஆரோக்கியம் எல்லாவற்றிலும் நீங்க எந்த அளவுக்கு கவனமாய் இருக்கீங்களோ அந்த அளவுக்கு நல்ல ரிசல்ட்  தரும். குழந்தை இல்லாதவர்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றாக சேர வாய்ப்புக்கள் அதிகம். வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் புகழைக் காணுவீங்க. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிலம், வீடு மனை, சொத்து போன்ற விஷயங்களுக்கான முயற்சிகள் சாதகமாக அமையும். புது விஷயங்கள் கற்றுக் கொள்வீங்க. பதட்டம் மற்றும் பாதுகாப்பின்மை உணர்வை கட்டுப்படுத்திக்கணுங்க. அவநம்பிக்கை தரும்  நெகடிவ்வான எண்ணங்களை தவிர்த்து நேர்மறையாவே எண்ணினால் நல்ல பலன்கள் கிடைக்கும். நம்பிக்கையோட இருங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 27 முதல் நவம்பர் 30 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.