மேஷம்
அரசாங்கக் விஷயங்கள் தாமதமானாலும் நல்லபடி முடியும். எதிலும் வெற்றியே ஏற்படும். எதிரிகள் பணிந்து போவர். நல்லவர்களால் ஆதாயமும் உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வாரத்தின் பிற்பகுதியில் சகோதரர்களுடன் சிறுசிறு கருத்துவேறுபாடு ஏற்பட்டு சரியாகும். அதன் காரணகர்த்தா நீங்களாக இருக்க வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். சிற்சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது ஆலோசனை பெறுங்கள். கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை. வாரத்தின் பிற்பகுதியில் உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் உண்டாகும். அவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். வாழ்வில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ரிஷபம்
பணம் தேவையான அளவுக்கு இருக்கும். குடும்பச் சூழ்நிலை நிம்மதி தருவதாக அமையும். தேவையற்ற செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படாது. திருமண முயற்சிகள் பலிதமாகும். பழைய கடன்கள் தீரும். தாயாருக்கு சிறிய அளவில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் நலமடைவார். அலுவலகத்தில் உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. வியாபாரத்தில் சற்று பிற்போக்கான நிலைமையே காணப்படுகிறது. எதிர்பார்த்தபடி லாபம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை. நஷ்டமாகாது. கடன் வாங்கவேண்டாம். குடும்ப பெண்மணிகளுக்கு மனமகிழ்ச்சி தரும் வாரம் இது. அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை சந்தோஷம் தருவதாக அமையும்.
சந்திராஷ்டமம் : ஜூன் 21 முதல் ஜூன் 23 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
மிதுனம்
செய்யும் செயல்களால் அனுகூலம் உண்டாகும். வீடுகட்டுதல் மற்றும் வேலை தேடும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. முன்னேற்றத்துக்குத் தடை இருக்காது. புதிய பொருள்களின் சேர்க்கை உண்டாகும். சிலருக்கு பயணங்களும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் அடிக்கடி வீண் விவாதம், கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதன் மூலம் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும். பிள்ளைகள் வகையில் பெருமை சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். அரசு வேலையில் இருப்பவர்கள் பணியிடத்தில் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். பைல்களில் கையெழுத்து போடுமுன் படித்துப் பார்த்துக் கையெழுத்திடுங்க.
சந்திராஷ்டமம் : ஜூன் 23 முதல் ஜூன் 26 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாரத்தின் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். கணவன் – மனைவிக்கிடையே சிறுசிறு கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டாலும்கூட ஒருவரை ஒருவர் அனுசரித்து ராசியாயிடுவீங்க. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. வாரத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் ஏற்பட்டிருந்த பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் தீர்ந்து நிம்மதி ஏற்படும்.
சந்திராஷ்டமம் : ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்
சிம்மம்
திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைங்களால மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும். நண்பர்களும் அனுகூலமாக இருப்பார்கள். அவங்ககிட்ட எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தெய்வபக்தி அதிகரிக்கும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்துல உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி, சுமுகமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வாரத்தின் பிற்பகுதியில் குடும்பப் பெரியவர்களும் நண்பர்களும் உதவிகரமாக இருப்பார்கள். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். ஆண்களுக்கு பெண்களாலும் பெண்களுக்கு ஆண் களாலும் நன்மைகள் ஏற்படும். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண் டாகும்.
கன்னி
உடல்நலனில் கவனம் தேவைப்படுகிறது. தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாம பணிஞ்சு போனால் தேய்ஞ்சுபோயிடுவீங்களா என்ன? அவருடைய உடல் ஆரோக்கியமும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, உடனே சரியாகிவிடும். தாய்வழி உறவினர்கள் உங்ககிட்ட அனுசரணையா நடந்துப்பாங்க. பணவரவு உங்க முயற்சிக்கு ஏற்றபடி உயரும். புதிய டிரஸ் மற்றும் நகைங்க சேரும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதையும் சாதிக்கவேண்டும் என்ற மன உறுதி ஏற்படும். பழைய வாகனத்தை மாத்திப் புதிய வாகனம் வாங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். பிரிஞ்சிருந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் விருந்து விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள்.
துலாம்
ரிலேடிவ்ஸ், ஃப்ரெண்ட்ஸ் உதவி கெடைக்கும். வயசாளிங்க கிட்ட கொஞ்சமாச்சும் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். வாழ்க்கைத்துணை வழி உறவுகள் உங்கள் ஆலோசனைங்களை ஏத்துக்குவாங்க. அவர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் ஒரு படி உயரும். இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல்பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய தொழில் செய்வதானால் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க. வீண் பயங்களை உதறுங்க.
விருச்சிகம்
நீங்க எவ்வளவு அன்பானவர்.. நல்லவர்.. வல்லவர்னு உங்களுக்கே தெரியும்தான். ஆனாலும் அதை மத்தவங்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்தினால்தானே மத்வங்களுக்குப் புரியும். இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா? இனி மனசுக்குப் பிடித்த பெண்/ வரன் அமைவாங்க. குட் லக். புதிய ஜாப் தேடி முயற்சி செய்யறவங்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக்காம இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பெண்களுக்கு எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல்வாதிகளுக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். பட்… திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள்.
தனுசு
கணவன் மனைவி உறவு நல்ல ஹாப்பியாய்த்தான் இருக்கும். ஆனாலும் அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாக்கும். பேசும்போது ரெம்ப ரெம்ப கவனமாக இருங்க. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேண்டாம். சுருங்கச் சொன்னால் யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். யாரைப் பற்றியும் யார் கிட்டயும் தப்பாகப் பேசவே வேணவே வேணாம். காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் ரொம்பவும் சிம்ப்பிளாய் நடைபெறும். அதிகத் தாமதத்துக்குப் பிறகுதாங்க எந்த வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு ஜஸ்ட் சுமாரான முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. ப்ளீஸ். வேலையில் உள்ளவங்க கவலையைவிடுங்கப்பா. நல்லதே நடக்கும். அலுவலகத்தில் உங்களை அடிச்சுக் கேட்டால்கூட யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லிடாதீங்க.
மகரம்
வீட்ல இதுவரைக்கும் தள்ளிப் போயிக்கிட்டிருந்த ஹாப்பியின விஷயங்களெல்லாம் நடப்பதற்கு இன்டிகேஷன்ஸ் தெரியுமுங்க. குறிப்பா உங்க சிஸ்டர் அல்லது பிரதருக்கு நடக்காமல் தள்ளிப் போயிக்கிட்டிருந்த திருமணம் அல்லது குழந்தைப் பேறு நல்ல முறையில் சாத்தியமாகப்போகுது என்ற தகவல் உறுதியாகும். இதுவரை உங்ககிட்ட இருந்த மந்த நிலை அல்லது சோம்பல் நிலை காணாமல் போயிடும். அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும். நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கற ஐடியாவைக் கொஞ்சம் தள்ளிப்போடலாமே? நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு எதையும் டிஸைட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்சினைக்குள் போய்ச் சிக்கிக்கொள்ள மாட்டீங்க. நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க கொஞ்சம் பொறுமை தேவை. வீட்டில் உள்ள சூழ்நிலை உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். ஆல் த பெஸ்ட்.
கும்பம்
இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம்… வெளிநாட்டுப்பயணம் எதுவும் வேணாம்ங்க. திருமண வாய்ப்பு உறுதியாகும். எனவே மனசுக்கு நெருக்கமானவருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் மிக்கவர்கள் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துகொள்வீங்க. பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. பிலீவ் மீ. மாணவர்களுக்குப் பழைய பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். காதல் விஷயங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் வாங்கும் செலவு வரும். நாலா வழிகளிலும் இன்கம் வரும்.எனவே செலவு பற்றிய பயம் இருக்காது கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க.. அதனால உங்களுக்கு எந்தக் குறையும் வந்துடாது. நல்லதுதாங்க நடக்கும். ஷ்யூர்லி.
மீனம்
புதிய வீடு பொலிவுடன் ரெடியாகும். குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. பாக்கெட் காலியாகும் காலம் இது. ஏற்கனவே ரொம்ப நாளாய் அப்படித்தான் இருந்துக்கிட்டிருக்கு மேடம் என்கிறீர்களா. சரியாகும். இதோ சரியாகிவிடும். விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் தொடரும். இதுவரை தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்த்தீங்க. அதனால் உழைப்புகேற்ற பலன் இல்லாமல் இருந்தது. இனிமேல் நல்லபடியா உழைப்பை அதிகரிப்பீங்க. 100 பர்சன்ட் லாபம் .. நன்மை.. வருமானம் வரணும்னு நினைச்சீங்கன்னா.. 150 பர்சன்ட் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு அஞ்சுபவர் இல்லை நீங்க. எனவே ஜமாயுங்க. என்ஜாய்.