மேஷம்
பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கிய நிலை மாறி, உபரித்தொகை கையில் இருக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சந்தோஷமான பலன்கள் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் இருக்கும். பேச்சினால் நன்மையும் சந்தோஷமும் ஏற்படும். ஃபேமிலில உள்ள உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீங்க. அவங்களும் அதை நல்ல விதமாய்ப் புரிஞ்சுப்பாங்க. அதிக விரயம் ஏற்படும் வாரம் என்பதால மனசை ரெடியா வெச்சுக்கிட்டிருங்க. அந்தச் செலவுகள் நல்ல பலன் தரும்.சந்தோஷம் அளிக்கும். சுப காரியங்களுக்கான செலவுகள் அவை. பல காலமா ஆட்டிப்படைச்சுக்கிட்டிருந்த முக்கியமான நிதி பிரச்னைகளிலிருந்து விடுபடுவீங்க. திடீர் சந்தோஷ செலவுகளால கையிருப்பு கரைந்தாலும் பொருட்படுத் தும்படி இருக்காதுங்க. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
ரிஷபம்
தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். மத்தவங்க கிட்ட பேசும்போது பொறுமையைக் கடைப்பிடித்து வெற்றி காணுவீங்க. அக்கம்பக்கத்தில் உள்ளவங்க உதவிகரமாக இருப்பாங்க. வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கி அவர்களின் சந்தோஷத்துக்கு வழி வகை செய்வீங்க. இதனால் அவங்க அதிகம் உழைப்பாங்க. பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். அலவலகத்தில் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவீங்க. ஒரு விஷயத்தைக் கண்டிப்பா நினைவில் வெச்சுக்குங்க. வார்த்தைகளில் நிதானம் காத்தால், மற்றவர்களின் கோபத்திலிருந்து தப்பிக்கலாம். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தால் மன சஞ்சலத்திற்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கியத்துல மட்டும் நூறு பர்சன்ட் கவனம் செலுத்திடுங்க போதும்.
மிதுனம்
அனுகூலமான வாரம். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், கூடுதல் செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில நல்ல விஷயங்கள் ஏற்படக்கூடும். வாரக்கடைசியில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் முன்பு ஏற்பட்டிருந்த சில சங்கடங்கள் முடிவுக்கு வரும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். அக்கா அண்ணனுங்க எல்லாம் உறுதுணையாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். அலவலகத்தில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அந்தச் சந்திப்பு நல்ல ரிசல்ட் அளிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திட்டங்கள் நிறைவேறும் வாரம். சுப காரியங்களுக்கான முயற்சிகள் நிதானமான வெற்றியைத் தரும்.
கடகம்
இந்த வாரம் உங்களோட பலகால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மகன்களும், மகள்களும் குடும்பச் சூழ்நிலை அறிந்து செயல்படுவாங்க. புண்ணிய ஸ்தலங்களுக்குப் போயிட்டு வருவீங்க. அரை குறையாக நின்று போயிருந்த வேலைங்க முடியும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. எதிலும் தடைங்களும் தாமதங்களும் இருந்துக்கிட்டுதான் இருக்கும். ஆனாலுல் எதையும் முழுமையா முடிப்பீங்க. டோன்ட் ஒர்ரி. சின்னச்சின்னதாய்த் தொந்தரவுக்ள் ஏற்பட்டு ஓரிரு நாளில் நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமா இருங்க. தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடனும் முழு அர்ப்பணிப்புடனும் ஈடுபடுவீங்க. இதனால் இப்போது இல்லைன்னாலும் சிறிது காலம் கழிச்சு நல்ல பலன கெடைக்கும்..
சிம்மம்
அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் தேடி வரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ரிலேடிவ்ஸ் வழியாக உதவிகள் தேடி வரும். உத்யோகத்துல புது சலுகைகள் கிடைக்கும். சாதிக்கும் வாரம். முன்பு எதற்கெல்லாம் போராடினீங்களோ அதெல்லாம் அநாயாசமாய் முடியும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைச்சாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலவற்றிற்கு உங்கள் அவசர மனபோக்குதான் காரணம் என்பதை உணர்வீங்க. அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவங்க எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் அனுகூலமான பலன்கள் கிட்டும் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் முன்பு ஏற்படட் மனஸ்தாபம் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வதால் முடிவுக்கு வரும்.
கன்னி
ரிலேடிவ்ஸ் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். ஆனால் உங்க புத்திசாலித்தனமான நடவடிக்கையால் அதிலிருந்த மீளப்பார்க்கலாமே? நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்., பணியாளர்களால் ஏற்பட்டிருந்த பிரச்னை தீரும். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேர்ந்தாலும் மனதில் நிம்மதியும் மகிழ்ச்சியும் குறையாது. வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்துல மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீங்க. விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். மேலதிகாரிங்களோட செயல் டென்ஷன் தரும். ஆனால் அவங்க உங்களுக்கு நல்லது செய்யத்தான முயற்சி செய்துக்கிட்டிருக்காங்கன்னு விரைவில் புரிஞ்சுக்குவீங்க. படிப்படியாகப் பொருள் சேர்க்கை உண்டு.
சந்திராஷ்டமம் : மார்ச் 21 முதல் மார்ச் 23 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.
துலாம்
அற்புதமான வாரம். இந்த வாரம் நீங்க எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். பெற்றோர் உதவி செய்வதால் நீங்க எதிர்பார்த்த விஷயம் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பாங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். புதிய முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ளுமுன் தசாபுக்தி சாதகமாக உள்ளதா என்று பார்த்துக்கொள்வது நல்லது. குடும்பத்துல ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வெளிநாடு போறதுக்கான வாய்ப்பு வரும். சிரிப்பும் பொழுது போக்கும் இன்கிரீஸ் ஆகும். பேச்சினால் வந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் முடிவுக்கு வரும். சக ஊழியர்கள் உதவுவாங்க. உங்க நல்ல மனசைப் பாராட்டுவாங்க. நன்மை நடக்கும் வாரம்.
சந்திராஷ்டமம் : மார்ச் 23 முதல் மார்ச் 25 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.
விருச்சிகம்
முன்பு நீங்க உழைத்து மற்றவர்களுக்கு நல்ல பெயர் வந்துக்கிட்டிருந்தது. இப்போ உங்களைத் தேடியே பாராட்டு வரும். மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். மனதில் கருணை மற்றும் இரக்க சிந்தனை அதிகரிப்பதால் மற்றவங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றாற்போல் நடந்து கொள்வீங்க. எதிர்பாராத சுபச்செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை மூலம் சில நன்மைகள் ஏற்படும். அலுவலகத்தில் நிறையக்காலமாய்ப் பலருக்குத் தொல்லை கொடுத்துக்கிட்டிருந்த பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பீங்க. இதனால் எல்லோரும் பாராட்டுவாங்க. குறிப்பா மேலதிகாரிங்க கிட்ட ‘சபாஷ்’ வாங்குவீங்க. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்துல ஒரு சின்ன நல்ல விஷயம் நடக்கும். எதிர்பாராத பாராட்டு என்பதால் மனசு நிறையும். குழந்தைங்க கொடுத்து வந்த டென்ஷன்ஸ் மெல்லக் குறைய ஆரம்பிச்சுடும்.
சந்திராஷ்டமம் : மார்ச் 25 முதல் மார்ச் 27 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்.
தனுசு
தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களால் ஏற்பட்டிருந்த சில பிரச்னைகளை உங்களுடைய மென்மையான அணுகுமுறை முடிவுக்குக்கொண்டு வரும். வாழ்க்கைத்துணையின் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவதால் அவருக்கு மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத வெற்றி வாய்ப்பு உண்டாகும். ஃபாதர் அல்லது பாட்டன் வழி சொத்து பற்றிய வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தாலும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்துல உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சாதிக்கும் வாரம் இது. எதிர்பாராத பணவரவு உண்டு. உழைப்பு அதிகரிக்கும். . அரசியல் சார்ந்த அதிகாரிகளின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மகரம்
பணியாளர்கள்.. அல்லது உங்களுக்குக் கீழ வேலை பாக்கறவங்க, உற்சாகமாகச் ஒத்துழைப்பாங்க. இதனால உங்களோட வேலைப்பளு குறையும். மேற்கொள்ளும் புதிய முயற்சி சாதகமாக முடியும். சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படு உடனுக்குடன் சரியாகிவிடும். எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களைத் தேடித் தானாய்வர வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். ரிலேடிவ்ஸ் முலம் சுபசெய்திகள் கிடைக்கும். முன்பெல்லாம் உழைத்த உழைப்புக்குப் பலன் இல்லாமல் இருந்தது. அல்லது குறைவான பலன் இருந்தது அல்லவா? இனி அப்படியே ஆப்போசிட். சிறிது உழைத்தாலும் நல்ல பலன் இருக்கும். போதாக்குறைக்குப் பலர் உங்களை இளக்காரமாய்ப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. இகழ்ந்த வாய்களும் உங்களைப் புகழ ஆரம்பிக்கப்போகுது பாருங்களேன். சோம்பலையெல்லாம் உதறித் தள்ளிச் சுறுசுறுப்பாகச் செயல்படுவீங்க.
கும்பம்
எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீங்க. மற்றவர்களின் பணத்தையோ பொருளையோ கையாளும்போது எச்சரிக்கையா இருங்க. குறிப்பாக உறவினர்களிடம் பேசும்போது மிகுந்த பொறுமையைக் கடைப்பிடிக்கணுங்க. யாருடனும் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராக அதிகரித்திருக்கும். பணியாளர்களிடம் கடுமையான சொற்களைப் பயன்படுத்தாமல அவர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்க. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் வாரத்தின் மத்தியப் பகுதியில் நீங்கும். வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். பொது இடங்களில் புதிய மனிதர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. அலுவலகத்திலும் வீட்டிலும் சந்தோஷ சூழல் நிலவும். பொருட்களை கவமாப் பார்த்துக்குங்க
மீனம்
புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனம் தேவை. வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இருந்து வந்த இனம் தெரியாத சோர்வும் பயமும் ஒரு நிகழ்ச்சி மூலம் முழுமையாக நீங்கி மெல்ல நிம்மதியடைய ஆரம்பிப்பீங்க. அக்கம் பக்கத்தில் உள்ளவங்க கிட்ட இணக்கமாக நடந்துக்கணுங்க. உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைங்களால வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அவங்க மகிழ்வதைக் கண்டு மனம் சந்தோஷப்படும். அவங்களோ சாதனைங்க சந்தோஷம் தரும். பெரிய விஷயங்கள்ல உங்களோட ஆலோசனை கேட்டு நடப்பாங்க பெருமிதமா உணர்வீங்க தடை தாமதங்களைச் சுலபமா வெற்றி கொள்வீங்க. குடும்பப் பெரியவங்க கிட்ட பேசும்போது வார்த்தைகளில் கவனமா இருங்க. வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரிச்சுப் போகணுங்க. நண்பர்கள் மற்றும் உறவினரின் உதவிகள் சிரமம் குறைக்கும்.