மேஷம்

பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். நீங்க பயந்த மாதிரி, வீண் செலவுங்க எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னைகள் தோன்றக்கூடும். அட எந்த தம்பதிதான் சண்டை போடலை? பிற்பாடு அதை மறந்துட்டு அனுசரிச்சுக்கிட்டுப் போக வேண்டியதுதானேங்க? மறுபடியும் மறுபடியும் அது பத்திப் பேசணுமா என்ன?   வெளியூர்ப் பயணங்களால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். கருத்துவேறுபாட்டின் காரணமாக பிரிந்திருந்த உறவினர்கள் உங்களைப் புரிந்துகொண்டு மீண்டும் வந்து பேசுவார்கள். ஜஸ்ட் மன்னிச்சுடுங்க. பாவம். பொழைச்சு போகட்டுங்க. உங்க சின்னச் சின்ன மனக்குறையை வீட்ல உள்ள பெரியவங்க கிட்ட சொல்லுவீங்க.  அவங்க கிட்டேயிருந்து மனசுக்கு ஆறுதல் தரக் கூடிய ஆலோசனை கிடைக்கும். அறிமுகம் இல்லாதவங்க கிட்ட பர்சனல் விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.

ரிஷபம்

பிஸினஸ்.. ஜாப்.. தொழில் காரணமா சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். உங்க கீழ ஒர்க் பண்ற பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். புதுசு புதுசா நெறையக் கத்துக்கப் போறீங்க. அதெல்லாம் லைஃப்ல ரொம்பவும் யூஸ் ஆகப்போகுது. முயற்சிகள் வெற்றி தரும் வீக் இது. தொழில் உங்க குடும்பத்துல உள்ளவங்க நல்ல காரணம் ஒன்றிற்காகப் பரபரப்பாக செயல்படுவார்கள். ஆபீஸ்ல ஒர்க் பண்றவங்க பணியிடத்துல முக்கியத்துவம் பெறுவார்கள். ஏதாச்சும் ஒரு காரணத்துக்காக வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நல்லவங்களைச் சந்திப்பீங்க. வெளியூருக்கோ வெளிநாட்டுக்கோ போயிருக்கும் ஒங்க குடும்பத்தினர் திரும்பி வருவாங்க.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள் 

மிதுனம்

தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில செல்லும். நிதி உதவி கெடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவங்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி உங்களை வந்து ரீச் ஆயிடும் இரவு பகலாக உழைச்சுப் பாடுபட்டு டிரை பண்ண வேண்யிருந்தாலும்கூட….    நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். இந்த வாரம் மனசுல இருந்த விஷயங்கள் சாதகமா நடந்து முடியும். பேச்சுத் திறமையால் சில காரியங்களைச் சாதிப்பீங்க. ஹாப்பியா இருப்பீங்க.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள் 

கடகம்

வரவேண்டிய பணம் உங்க கையில் வந்து உட்கார்ந்துக்கும். அரசாங்கத்தோட ஹெல்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தவங்களுக்கு அது ஈஸியாக் கெடைக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்த்து வைச்சு அவங்களோட மதிப்புக்கு ஆளாவீங்க.  மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உங்களுடைய அல்லது உங்க குழந்தைங்களோட எதிர்காலக் கல்வி அல்லது மேல்படிப்பு பற்றிய சிந்தனை மேலோங்கும். அதனால முயற்சிகளை முடுக்குவீங்க. அலுவலகவாசிகள், மேலதிகாரிங்க சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவாங்க. குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வித்து மகிழ்வீங்க.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 21 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள் 

சிம்மம்

இந்த வாரம் தந்தையின் உத்யோகத்துல முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் திடீர்னு இன்டரெஸ்ட் வரும். ஒரு நல்ல காரணத்தை உத்தேகம் செய்து, நீண்ட தூரப் பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். ஸோ வாட்? பொறுமையா இருங்க. பலன் இனிக்கும். புதிதாய்ச் செய்யும் காரியங்கள்ல கவனம் தேவை. கலைத்துறைல உள்ளவங்க இனிமையான வார்த்தைகளால் பேசுவீங்க. இதனால மத்தவங்க மத்தியில் மதிப்பு கூடும். பண விஷயத்துல கேர்ஃபுல்லா இருக்கணுங்க.. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அதை நல்லபடியா சமாளிப்பீங்க. ஆனா அவசியம் இல்லாதவங்களுக்குத் தூக்கிக் கொடுத்துடாதீங்கப்பா.

சந்திராஷ்டமம் : ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 23 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள் 

கன்னி

பிசினஸ்லயோ.. ஜாப்லயோ… போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். ஆனா அது எதிர்காலத்துல பெரிய நன்மையைத் தரப்போகுதுங்க. குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்துக்கிட்டிருந்த கோல்ட் வார் திடீர்னு சரியாகி வெள்ளைக் கொடி பறக்கும். பிள்ளைங்களோட செயலெல்லாம் மனசுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும். இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனசுல ஏதாவது தேவையில்லாத சஞ்சலம் இருந்துக்கிட்டே இருக்கும். காரணம் என்ன தெரியுமா? நீங்க செய்துக்கற வீண் கற்பனைதான். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவை ரொம்பவும் சின்னது என்பதால் தேவையான நேரத்தில் உங்களுக்கு  வேண்டியவங்களோட உதவி கிடைக்கும்.

துலாம்

ரிலேடிவ்ஸ்கிட்ட பக்குவமாக பேசுவது நல்லது. கோர்ட் கேஸ் சமாசாரங்கள்ல சாதகமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவிங்க கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாகப் படிச்சு முடிப்பீர்கள். சாமர்த்தியமாப் பேசுவதன் மூலம் காரியங்களைச்  சாதிச்சுக்குவீங்க. பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான சான்ஸஸ் வரும். புதிசாய்ச் சொத்து வாங்குவதில் விருப்பமும் கவனமும் செல்லும். முயற்சிகள் சீக்கிரத்துல பலன் தரும்.  தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. பொருளாதார நிலை சுமாராக இருக்கும்.  சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பாங்க.

விருச்சிகம்

உங்களுடைய ஒரே மைனஸ்பாயின்ட் தன்னம்பிக்கை இல்லாததுதான். உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை வேண்டாமா? வெளியூர்ப் பயணங்கள் சாதகமான பலன் தரும். மத்தவங்களோட நலனுக்காக சம்பந்தப்பட்டவங்ககிட்ட வாதாடி வெற்றி பெறுவீர்கள். சிம்ப்பிளாச் சொன்னால், பஞ்சாயத்துப் பண்ணுவீங்க. கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்துல முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும். உணவு விஷயத்துல கொஞ்சமாச்சும் கட்டுப்பாட்டோட இருங்கப்ப்பா… அது ஆரோக்கியத்திற்கு உறுதுணையா அமையும். ஆரோக்யம் = நிம்மதி என்பது உங்களுக்கா தெரியாது? லாபம், பண வரவு, இன்கிரிமென்ட் என்று ஏதாவது ஒரு நன்மை பற்றிய அறிவிப்பு வந்து சந்தோஷக்குளத்துல உங்களைத் தூக்கிப்போடும். கல்யாணம் ஆகாதவங்களுக்கு இதோ மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடும்.

தனுசு

உத்தியோகத்துல உள்ளவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதுசு புதுசாப் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்துல உள்ளவங்களுக்கு சுக சவுக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். இனம்புரியாத கவலை மனசுல இருந்துக்கிட்டிருந்துச்சு இல்லையா? அது ஃபுல்ஸ்டாப் வெச்சுக்கும்.  தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு சக்ஸஸ் ஆவீங்க. இப்போது உள்ள வேலையை மட்டும் கவனிச்சுக்கிட்டு வாங்க. எதிலும் நிதானத்துடன் முடிவு எடுத்து நன்மை காண்பீங்க. வீடு வாங்குதல், வேலை மாற்றம் மாதிரியான விஷயங்கள்ல நல்லா யோசிச்சு டிஸைட் பண்ணுங்க.

மகரம்

புது நபர்கள்கிட்ட கொஞ்சமாச்சும் எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களோட எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க வழிவகை செய்யும். கவனமுடன் செயல்பட்டால் மேலதிகாரிங்களோட நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்க கிட்ட உதவி கேட்டு வர்றவங்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மன நிறைவும் வெற்றியும் உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம். சின்னச் சின்னத் தடைகளும் தாமதங்களும் வாழ்க்கை என்னும் ரோடில் எதிர்ப்படும்தான். அதையெல்லாம் பார்த்து நீங்க நம்பிக்கை இழக்க வேண்டாம். உங்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். முயற்சிகளைத் தொடருங்கள். எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் பெறுவீங்க. உடல்நலத்தில் கேர்ஃபுல்லா இருக்க வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும். மனசை அமைதியா வெச்சுக்குங்க. டோன்ட் ஒர்ரி. அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்க்கலாம்.

கும்பம்

இந்த வீக், வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிக்கறதுல இத்தனை காலமா இருந்துக்கிட்டிருந்த தடங்கல் எல்லாம் ஒருவழியா நீங்கும். தேவையற்ற மனக்கவலை தீர்ந்து நிம்மதி ஏற்படும். வழக்கு விவகாரங்களில் இருந்துக்கிட்டிருந்த தாமதமான போக்கு நீங்கும். திடீர்னு வெளியூர்ப் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்துல எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு இந்த வாரமே சரியாகும். புது மனிதர்கள் மற்றும் வெளி மனிதர்கள்கிட்ட பேசும்போது கவனம் தேவை. அவசியமில்லாத விஷயங்களை யார்கிட்டயும் ஷேர் செய்துக்க வேணாம். உங்க  வேலைகள்.. பணிகள்.. முயற்சிகள் ஆகியவற்றை ஈஸியா முடிக்கக் கூடிய யுக்திகளைக் கண்டறிவீங்க. பண வரவு சிறப்பாக இருப்பினும், மறுபுறம் செலவும் இருக்கக்கூடும். சமாளிச்சுடுவீங்க. தேவையில்லாத கவலைங்களை மனசுல போட்டுக்க வேணாம். சிம்ப்பிளா விடுங்க. சரியாயிடும்.

மீனம்

சில முக்கியமான விஷயங்கள்ல, சரியான முடிவு எடுக்கணுமே என்ற கவலை உண்டாகும். ஆபீசில், சக ஊழியர்கள் கிட்ட  பேசும்போது கவனமாப் பேசுவது நல்லது. குடும்பத்துல உள்ளவங்களால திடீர்ப் பெருமிதம் ஏற்பட சான்ஸ் உண்டு. எதிர்பாராத செலவு உண்டாகும். ஆனாலும் கையில் காசு புரளும் என்பதால செலவு பற்றிக் கவலை அதிகம் இருக்காது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் வராதபடி காத்துக்க வேண்டிய பொறுப்பு முழுக்க உங்க தோளில்தான் என்பதை மறக்கவே செய்யாதீங்க. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. ஆயுதங்களைப் பயன்படுத்தும்போது கவனம் தேவை. எது பத்தியும் கவலைப்படாதீங்க. பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் ஒங்களுக்கு சூப்பரா உதவி செய்வாங்க. செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்துல பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுப்பீங்க.