மேஷம்

ஸ்டூடன்ட்ஸ் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தால் லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். யார் கண்டது மேடை ஏறிப் பரிசு வாங்கி.. பள்ளி.. கல்லூரியில்.. ஏன் மாநிலத்திலேயே முதல்வராகத் தேறவும் வாய்ப்பு இருக்குங்க. கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க  அதிகக் கஷ்டப்பட மாட்டீங்க. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் முயற்சி செய்யறீங்களா? நல்லபடியாக்கிடைக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும்.

சந்திராஷ்டமம் : ஜூன் 19 முதல் ஜூன் 21 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

நண்பர்/ சிநேகிதி ஒருவருடன்… அல்லது காதலன்/ காதலியுடன் ஏற்பட்டிந்த சண்டை ஒன்று  அசட்டுச் சிரிப்புடன் சரியாகி இப்போத ஜாலியாப் பேச ஆரம்பிப்பீங்க. மிஸ்டேக் உங்க பேர்லதானே? நீங்கதானே வம்பு செய்து சண்டை போட்டீங்க. எனில் நீங்கதான் காலில் விழுந்து ஸாரி சொல்லணும். சொல்லுங்க. வார மத்தியில ஆபீஸ்ல எல்லா விஷயத்திலும் பணிஞ்சு போயிடுங்க.  இப்போதைக்கு ஃபைட்டிங் வேண்டாம். எல்லாம் அடுத்த வாரத்தில் பார்த்துக்கலாம். ஓகேயா? கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதிக வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். குடும்பத்துல திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் ஏற்பட்டு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  அதிக உழைப்பிற்குப் பிறகு எடுத்த காரியங்கள் ஈடேறும்.  தொழில் மூலம் பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதர்மங்கள் செய்வீங்க. அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. வாக்குவன்மை, வாகன யோகம் உண்டு. சில மாணவர்கள் கல்வியில் உயர்நிலை எய்துவர். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். மனைவி அனுகூலமாக நடந்து கொள்வார். தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பெற்றுத் தருவார்.  கலைத்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.

கடகம்

கவர்ச்சிகரமான பேச்சினால் மற்றவர்களைக் கவர்வீங்க. பேச்சை முக்கியமாய்க் கொண்டு தொழில் அல்லது ஜாப் செய்யறவங்களுக்கு இது ஜாக்பாட் வாரம். குடும்பம் ஹாப்பியா இருக்குமுங்க. ஜாலியான் டிஸ்கஷன்ஸ் நடந்து வீடு சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும. உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. பிலீவ் மீ. இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்

அட்ராக்ஷன் அதிகமாகும். நடை உடை பாவனையில் ஸ்டைல் தன்மை அதிகரிக்கும். கலையுணர்வு அதிகமாகும். பிரமாதமாய் டிரஸ் பண்ணிக்கிட்டு சென்ட் அடிச்சுக்குவீங்க. நிறையப் பேர் பாராட்டுவாங்க. உங்களைப் பார்த்து வியப்பாங்க. ஜமாய்ங்க. அழகு செய்துக்கும் பொருட்கள் வாங்கவும் செய்வீங்க. டீச்சர்கள் மற்றும் லெக்சரர்கள் தவிர மற்றவங்க உங்க பேச்சில கவனமாக இருக்கணும். எதிர்பாலினத்தவர் விஷயத்தில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. எதுவும் பெரிய அதிர்ஷ்டமாவோ மிக சுலபமாகவோ கிடைக்காது.. எதை முயன்றாலும் தடையும் தாமதங்களுமாய் இருக்கும்தான். பட்… எல்லாமே கடைசில சக்ஸஸ்ஃபுல்லாத்தாங்க அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். இந்த வாரம் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். குடும்பத்துல திருமணம் போன்ற சுபகாரியச் செலவுகள் ஏற்பட்டு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

கன்னி

உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. எதுக்காகத்தேவையே இல்லாமல் குரலை உயர்த்தறீங்க. ப்ளீஸ் இந்த வாரம் யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க. அதுகூடப் பரவாயில்லைங்க.. உங்க பெருமையைப்  பேசவே பேசாதீங்க. பயணங்களில் வெற்றி கிடைக்கும். எஸ்பெஷலி அலுவலக சம்பந்தமான டூர்களில். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். அது சக்ஸஸ் ஆகும்.  முன் எப்போதோ கொடுத்து மறந்த போயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும். கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீங்க. அரசியல்துறையினருக்கு நிம்மதியான காலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சென்று வருவீங்க.

துலாம்

பெண்களுக்கு இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா?  இனி மனசுக்குப் பிடித்த வரன் அமையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க.. அதனால அரை அடி குறைஞ்சு போயிட மாட்டீங்க. நல்லதே நடக்கும். உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமாக இருங்க. அது போதும். இந்தப் பிரச்சினை பர்மனென்ட் இல்லைன்னும் புரியும்.  மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க. உங்களுக்கு எந்த வயசானாலும்.  புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டி வரும். அந்தப் பயணங்களால் ஓரளவு நற்பலன்கள் ஏற்படும். எனவே அதில் டயர்ட் ஆகாமல் பார்த்துக்குங்க.. இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீங்க. புதிய  வீடு பொலிவுடன் ரெடியாகும். நண்பர்களையும் உறவினர்களையும் அழைச்சு விருந்து தருவீங்க.

விருச்சிகம்

சற்றே முயற்சி எடுத்தால் போதும். சூப்பரா எக்ஸாம் எழுதுவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். மன அமைதிக்காக சுற்றுலா போவீங்க. போன இடத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும்.  அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும். நிறைய செலவுங்க வந்தாலும் அதெல்லாம் உங்களை ரொம்பவும் ஹாப்பியாக்கற செலவுதான். அடிச்சுவிடுங்க. உங்களோட பேஸிக் புத்திசாலித்தனம் இப்பவும் பளிச். குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே ரொம்ப நாளாய் அப்படித்தான் இருந்துக்கிட்டிருக்கு மேடம் என்கிறீர்களா. சரியாகும். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக நடைபெறும். இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.

தனுசு

வீட்டில் இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். குறிப்பாய் உங்க  சகோதர சகோதரிங்களுக்கு நடக்காமல் தள்ளிப் போய்க்கிட்டிருந்த திருமணம் அல்லது குழந்தைப் பேறு நடக்கப்போகுது என்ற தகவல் உறுதியாகும்.  இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை அல்லது சோம்பல் நிலை காணாமல் போயிடும். சுறுசுறுப்பும்  வேகமும் உடம்புக்குள் புகுந்து கொள்ளும்.  கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு வந்து.. நல்ல வேளையாய் வெள்ளைக் கொடி பறக்க விட்டு சமாதானம் ஆயிடுவீங்க. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. சக்ஸஸ். மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நடைபெறும், அவங்களுக்குப் பாப்பா பிறக்க வாய்ப்புள்ளது.  அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும்.  நீங்க நினைத்தது தான் நடக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருக்காதீங்க. ஒரு கூட்டம் உங்களைத் தேடி வரும். எச்சரிக்கையாக இருங்கள்.

மகரம்

தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசி உங்க பார்ட்னரை ஹர்ட் செய்யக்கூடாதுன்னு ரியலைஸ் செய்துடுவீங்க. மை டியர் ஸ்டூடன்ட்ஸ்… நீங்க சற்று படிப்பில் கவனமாக இருங்கப்பா.  ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்துடுங்க. மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். ஒரு நிமிடத்தில் கெட்ட பழக்கம் உள்ளே புகுந்துவிடும். பிறகு துரத்துவது இம்பாஸிபிள். நல்ல வேலைவாய்ப்பபு கிடைக்கும். முதலில் வேலை மாறியது தப்போன்னு ஒரு பயம் வரும். பிறகு தாங்க் காட் .. என்பீர்கள். அந்த வேலை வெளி நாடு சம்பந்தப்பட்ட ஜாப்-ஆக இருக்க சான்ஸ் இருக்குங்க. ஒங்களோட சொல் கேட்டு நடப்பாள். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படும். வாசனாதி பரிமள திரவியங்கள் சேரும். தன் இனிய வாக்கால் அனைவரையும் கவர்வார். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்த வாரம் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும்..

கும்பம்

விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை குடும்பத்தில் இருந்த வந்த கவலைங்க தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் அல்லது பர்சனல் லைஃப் தொடரும். தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்க்காதீங்க. உழைப்புகேற்ற பலன் கட்டாயம் உண்டு. சமீபத்தில் குடும்பத்தில் ஒரு விஷயத்துக்கான நீங்க எடுத்துக்கிட்ட முயற்சி சூப்பர் பலன் தரும். எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்தது. எல்லா நன்மைகளும் லாபமும் தடை தாமதங்களோடதான வரும். ஆனால் இறுதியில் நல்ல முடிவுதான். உங்களுக்குள் சின்னதாய் ஒரு பயம் இருந்தாலும் மனோதைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீங்க. மாணவர்களுக்கு அற்புதமான வாரம் இது. நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீங்க.

சந்திராஷ்டமம் : ஜூன் 14 முதல் ஜூன் 16 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்

மீனம்

அதெல்லாம் இனி மாறியாச்சுங்க. நீங்க இளம் வயதினரா…? இவ்ளோ காலமாய் உங்க லவ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டம் இருக்கும். பொறுமை. பொறுமை. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் விலகுயிருக்குமே? வாரத்தின் முதல் மூன்று நாட்கள்  மட்டும் பேச்சில் ஜாக்கிரதையா இருங்க. ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. அநாவசியமா மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்கவே செய்யாதீங்க. புன்னகையுடன் விரட்டிடுங்க. விளையாட்டுத் தனங்களை விட்டு விவேகத்துடன் நடப்பது நல்லது.  சிலருக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும்,

சந்திராஷ்டமம் : ஜூன் 16 முதல் ஜூன் 19 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்