மேஷம்
அதிகப் பொறுப்புன்னு புலம்பல் செய்யாதீங்க. சாப்பிட தூங்க நேரம் இல்லைன்னு அலம்பல் செய்யாதீங்க. குழந்தைகள் வாழ்க்கையில் ஓரிரு தடைகள் ஏற்பட்டாலும் கடைசியில் எல்லாமே வெற்றிகரமாக நடக்கும். குழந்தைக்காகக் காத்திருக்கறவங்களுக்கு நல்ல செய்தி உண்டு. உங்களுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு இருந்தாலும் உழைப்பும் இருக்கறதால அலுவலகத்தில் புகழ் மற்றும் பாராட்டுக் குவியும்.
ரிஷபம்
இப்போது இருக்கும் வேலையையே சரியாகப் பிடித்துக் கொண்டால் உங்களுக்கு பெரிய நன்மைகள் காத்திருக்கின்றன. உங்க திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் குவியும். பரிசுகளும் உண்டு. வார்த்தைகள் வரிக்கு வரி பலிக்கும். எனவே நல்ல விஷயங்களை மட்டுமே பேசுங்க. கலைத் துறையில் உள்ளவர்கள் மேலும் அதிக வெற்றிகளை சுவைக்கப் போறீங்க. நம்பிக்கையைக் கைவிடாதீங்கம்மா. ஒவ்வொரு அடியையும் கவனமாய் எடுத்து வைக்க வேண்டிய சமயம் இது.வீடு வாங்கறது, கம்பெனி மாறுதல், மோதிரம் மாற்றுதல் அல்லது தாலி கட்டுதல் ….அதது தானாக நடக்கட்டும்
சந்திராஷ்டமம் : 13.05.2017 முதல் 16.05.2017 வரை
மிதுனம்
வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். கொடுத்த பொறுப்பை நிறைவேற்றிட்டீங்க. இனி எல்லாம் சுபமே. வருடங்களாக ஏதாவது ஒரு வகையில் சிறிய அல்லது பெரிய பிரச்சனையை அனுபவிச்சுக்கிட்டு இருந்த உங்களுக்கு நிம்மதி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே மறந்து போயிருந்தது. குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவுவதால் நிம்மதியாக தூக்கம் வரும். அவசிமில்லாமல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசக்கூடா துன்னா பேசவே கூடவே கூடாதுன்னு நினைவு வெச்சுக்குங்க. . டாடிக்குப் பதவி உயர்வு உங்களுக்குப் பாக்கெட் மனி உயர்வு எல்லாம் கிடைக்கும்.
சந்திராஷ்டமம் : மே 16 முதல் மே 18 வரை
கடகம்
குழந்தைகளுக்காக நிறையக் கவலைப் பட்டீங்க…வேதனைப் பட்டீங்க. எல்லாமும் சரியாகி விடும். அலுவலகத்தில் அமோக விளைச்சல் உண்டு. வேறு வேலைமாறத் திட்டமிட்டி ருந்தால் சீக்கிரமாக அடித்துப் பிடித்தக் கிளம்பப் பாருங்கள். உழையுங்க. நான் வேணாம்னாம்மா சொன்னேன், அதுக்காக உடல் நலத்தைப் பார்த்துக்க வேணாம்னு யாரும்மா சொன்னது? தயவு செய்து வேளா வேளைக்குச் சாப்பிடுங்க. ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை! மம்மியுடன் மல்யுத்தம் குத்துச்சண்டைன்னு பயிற்சி செய்ய வேண்டாம். அவங்களை வணங்குங்க.
சந்திராஷ்டமம் : மே 18 முதல் மே 20 வரை
சிம்மம்
இனி குட்டீஸ்க்காக நிம்மதியடைவீங்க, மகிழ்ச்சியடைவீங்க, பெருமைப்படுவீங்க. புது வேலை மாறியிருப்பீங்க அல்லது மாறப்போறீங்க. வீடு மாற வாய்ப்பு இருக்கு. புது வீடு வாங்கவும் சான்ஸ் அதிகமா இருக்கு. கங்கிராட்ஸ். புலம்பலை நிறுத்துங்க. உங்களால் முடியாமலா போகும். அப்புறம் அசடு வழிய வேண்டாம். இப்பவே நிம்மதியை அதிக ரிச்சுக்குங்க. உங்க டாடிக்கு செல்வாக்கு பிளஸ் பிளஸ் ஆகும். உங்களுக்கு திடீர் அதிருஷ்டம் வரும்போது உங்க கிட்ட முன்னறிவிப்பெல்லாம் செய்துகிட்டிருக்காது. தடால்னு வந்துடும்.
கன்னி
எடுத்த எடுப்பில் எல்லாமே வெற்றிகரமாய் முடியுதேன்னு சந்தோஷம் மட்டும் படுங்க போதும். குடும்பத்தில் ஒரு நபர் அதிகமாவார். உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் நன்மைகள் அதிகரிக்கும். மம்மிக்கு உடம்பு சரியில்லாமல் போனால் கலவரத்திலும் பதற்றத்திலும் தலையில் கைவெச்சு உட்கார வேண்டாம். இது தற்காலிக பிரச்சினைதான். வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர் சந்தோஷ செய்தி மட்டுமல்லாமல் பணமும்கூட அனுப்புவாங்கம்மா. நண்பர்கள் உதவி உங்களுக்கும் கிடைக்கும்மா. உங்கள் உதவி அவங்களுக்கும் உண்டு.
துலாம்
உழைப்புக்கு வெற்றி உண்டு. முன்பு வேலை விஷயமாக நிறைய அலைய வேண்டியிருந்தது. இனி நிரந்தரமாக ஓரிடத்தில் இருந்து வேலை செய்வீங்க. ஆபீஸ், வீடு, பள்ளிக்கூடம், கல்லூரி என்று உங்கள் சம்பந்தப்பட்ட இடம் எதுவானாலும் அதில் நீங்கள் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிப் பாராட்டுப் பெறுவீங்க. குழந்தைகளால் சின்னச் சின்ன டென்ஷன்கள் இருக்கும். உடனுக்குடன் சரியாயிடும். தம் கட்டி இழுத்துப் பிடிச்சு நிலைக்கு வந்துட்டீங்க. இனி வெற்றிக்கொடிதான் போங்க.. உங்க பொறுமைக்கு சாமி எவ்வளவு நல்ல பரிசு குடுத்தாரு பார்த்துக்குங்க. பக்தி அதிகரிக்கும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் புன்னகையை அகலமாக்கும்.
விருச்சிகம்
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள ஏதாவது கோர்ஸ் இருந்தால் அதில் நீங்க முதலில் ஃபீஸ கட்டி சேரணும். அலைபாயுதே கண்ணா என்று தடுமாற வேண்டாம். உடல் நலம் நன்றாகவே இருக்கும். கல்வியில் உங்களை மேலும் மேம்படுத்திக் கொள்ளப்போகிறீர்கள். கவனமாய் இருங்க. அவ்ளோதான் நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன். முகம் பார்க்கும் கண்ணாடி முன்னால் நின்னுக்கிட்டு ‘உன்னைப் போல் திறமைசாலி உலகத்தில் உண்டா’ன்னு புகழ்ந்து தள்ளுங்கம்மா. குழந்தைகளுக்குப் படிப்பில் அல்லது உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு. வீட்டில் சுப காரியங்களுக்கான அறிகுறி தென்படும்.
தனுசு
தொட்டிலுக்குத் தோரணம் கட்டி வையுங்க. குட்டி பாப்பா உங்க வீட்டுக்கு வரப்போகுது. சகோதர சகோதரிகளின் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். அதில் நீங்களும் கலந்துகொண்டு நல்ல பெயர் எடுப்பீங்க. ஆபீஸ் விஷயமாக வெளிநாடுகளுக்கு அனுப்பு வார்கள். சந்தோஷமாய்ப் போய்விட்டு சீக்கரமாகத் திரும்பி வருவீர்கள். கவர்ச்சி அம்சம் உங்களின் முக்கியத்துவத்தை அதிகரித்துக் காட்டும். உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் உள்ளங்கால் தேயும் அளவுக்கு ஓடி ஓடி உழைப்பீங்கம்மா.. நண்பர்களிடம் ஏழெட்டு அடி தள்ளியே இருங்கம்மா. கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். நீங்களாய் மனமுவந்து செலவு செய்யறீங்க. அப்புறம் ஏன் புலம்பல்?
மகரம்
சில பெரிய பொறுப்புக்களை நீங்க சுமந்து நடத்த வேண்டியிருக்கும். குடும்பத்தில் நன்மைகளும் மகிழ்ச்சியும் தாண்டவமாடும். நல்ல நியூஸ் இருக்கு. பார்ட்டி, ட்ரீட்டுன்னு ஜாலியாவும் இருப்பீங்க. அதே சமயம் வெளியூர் வெளிநாடுன்னு பயணங்களும் உண்டு. மேலும் கொஞ்சம் சான்றிதழ்கள் சேரும். சிஸ்டர் பிரதர்ஸ்கூட எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்களே, அவங்க உங்களுக்கு செய்த நன்மைகளைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்க. புரிஞ்சுக்குவீங்க. அலைச்சலும் பயணமும் இருந்தாலும் அலுத்துக்கும்படி இருக்காது. வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டி ருந்தவங்களுக்கும் பாஸ்போர்ட் விசாவுக்காகக் காத்திருந்தவங்களுக்கும் பால் பாயசம்தான்.
கும்பம்
சகோதர சகோதரிகளால் உங்களுக்கு நன்மை ஏற்படும் – வைசி வெர்சா. விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் அபார வெற்றி குவிப்பீர்கள். அடேயப்பா. வாழ்க்கையில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. பல நாள் காத்திருந்த சஸ்பென்ஸ் ஒன்று சந்தோஷமாய் முடியும். மம்மியை நல்லா கவனிச்சுக்குங்க. படிப்பில் முழு வீச்சில் கவனம் செலுத்துங்க. சிறு சிறு பயணங்கள் உண்டு. முதலீடுகளை அதிகப்படுத்துவீங்க. பரிசுகள் கிடைக்கும். வரவும் அதிகரிக்கும். செலவும்தான்.
மீனம்
நிறைய அலைச்சல் ஏகப்பட்ட பயணங்கள் இருக்கும். குடும்பத்தில் திருமணம் அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து ரேஷன் கார்டில் இடம் கேட்பார்கள். அப்பாடா. நிறைய காலம் கழிச்சு நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும். முக்கியமான பொருட்களை அந்தந்த இடத்தில் ஜாக்கிரதையா வைக்கக் கத்துக்குங்க. டாலர், யூரோ, பவுண்ட், யென் என்று ஏதாவது கையில் வந்து விழும். ஹூம்.நடக்கட்டும். வரவரத் தன்னம்பிக்கை குறைந்து சோர்வு ஏற்படுது போலிருக்கே? குழந்தைங்களைப் பற்றிக் கவலை வேண்டாம். பிரச்சினைகள் தாற்காலிகமானவைதான். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி ஒற்றுமை என்று எல்லாமும் நிலவும்.