மேஷம்

மம்மிக்கு சில சிரமங்கள் இருந்தாலும் உடனே சமாளிச்சு நிமிரும்படியான சின்னஞ்சிறு பிரச்சினை களாகத்தான் இருக்கும். டோன்ட் ஒர்ரி. வாகனமெல்லாம் இப்ப  வாங்க வேணாங்க, அவசரப்படாதீங்க, வெயிட் பண்ணுங்க. கொஞ்ச நாளில் நல்லதாக அமையும். தானா அமையும். டோன்ட் ஒர்ரி. படிக்கும் மாணவர்கள் சற்றே அதிக கான்ஸன்ட்ரேஷன் போடணும். அவ்ளோதான்.  ஆரோக்யம் முன்னே பின்ன இருக்கும். எனவே அதை நீங்களாக் கெடுத்துக்கும் செயல்களில் ஈடுபட்டுடாதீங்க. வெளிநாட்டு உத்யோகம்.. பிசினஸ் எல்லாம் வளமா இருக்கும். பயம் வேண்டாம்.

ரிஷபம்

சகோதர சகோதரிகளுடன் ஃபைட்டிங் இருக்கும். நீங்கபாட்டுக்குக் கண்டுக்காம நகர்ந்துக்கிட்டே இருங்க. சரியாவாங்க. சரியாவீங்க.  சண்டைக்கு நீங்க பிள்ளையார் சுழி போடாதவரை சரி. மிக அழகான வீடு.. ரொம்ப அழகான கார் எல்லாம் வாங்குவீங்க. அதையும் திடீர்னு தீர்மானிச்சு வாங்குவீங்க… குழந்தைங்க  மேடை மேல பரிசுகளும் பாராட்டும் கைதட்டலும் வாங்கும்போது காலரை நிமிர்த்திவிட்டுப்பீங்க. நியாயமான பெருமிதம்தானே. செய்ங்க செய்ங்க.  நண்பர்களின் புத்திசாலித்தனம் உங்களுக்கு மிக உதவும். அவர்களின் வழிகாட்டுதலால் வாழ்க்கை உயரும்.  

மிதுனம்

குழந்தைகளின் கல்வி ஓஹோ என்று உயரும். அவர்களின் பண்பாடு மற்றவர்களையும் உங்களையும் பிரமிக்க வைக்கும். இத்தனை காலம் அவங்களைப் பற்றி இருந்து வந்த மன உளைச்சல் தீர்ந்து அம்மாடி என்று ரிலாக்ஸ் ஆவீங்க. நண்பர்களில் நல்லவங்களும் உண்டு கெட்டவங்களும் உண்டுன்னு நினைவு வெச்சுக்குங்க. யாரையும் நம்பித் தலைல வெச்சுக்கிட்டு டான்ஸ் ஆடவும் வேண்டாம் .. தூக்கிப் போட்டு ஃபுட்பால் ஆடவும் வேண்டாம். வெளிநாடு பேவீங்க. கலை நிகழ்ச்சிகள் குடுக்கவும் வாய்ப்பிருக்கு.  ஆரோக்யம் பற்றிக் கவலை வேண்டாம். எது வந்தாலும் உடனே சரியாயிடும்.

கடகம்

பேச்சில் கோபத்தின் சாயல்கூட வராமல் பார்த்துக்கிட்டா பொழைச்சீங்க. ஜாக்கிரதை. அப்படிக் கோபப்பட வேண்டிய பதவில இருந்தீங்கன்னா அது கடுமையா வெளிப்படாம பார்த்துக்குங்க. இல்லாட்டி அப்புறம் நீங்க வருத்தப்பட வேண்டி வந்துடப் போறது.  ஜாக்கிரதை. வீடு வாங்கப்போறீங்க. அதுவும் பசுமை சூழ்ந்த பகுதியில் இருக்கும். கணவன் மனைவிக்குள் எந்த விதமான கடுமையான வார்த்தையும் வராமல் பார்த்துக்குங்க. உங்க பக்கம் நியாயம் இல்லாமல் டோட்டலி அவர் பக்கம் நியாயம் இருக்க வாய்ப்புள்ளது. புது வேலை கிடைக்கப் போகுதுங்க. தயாரா?

சிம்மம்

கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பெருமையும் பாராட்டும் புகழ் வெளிச்சமும் உங்களைத் திக்குமுக்காடச் செய்யும். குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்கேனும் அரசு உத்யோகமோ.. அரசாங்கத்தால் நன்மையோ.. பாஸ்போர்ட் போன்ற விஷயங்களில் நன்மையோ அதிகரிக்கும். வீடு வாங்குவதில் சிறிய தாமதங்களோ தடைகளோ இருக்கக்கூடும். பயம் வேண்டாம். நல்லபடியாகவே முடியும். நண்பர்களால் சிறு பிரச்சினைகள் வரும். பரவாயில்லை விடுங்க. உங்க தப்பும் கொஞ்சம் இருக்கும்.  திடீர் லாபங்களும் திடீர் நன்மைகளும் உங்களுக்கு இன்று நேற்றா பழக்கம்?

கன்னி

அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் அவார்ட் ரிவார்ட் என்று மட்டுமின்றி மேடைப் பாராட்டும் கிடைக்கும்.  கலைத்துறையில் உள்ளவர்கள் பளீர் வெளிச்சத்தில்  ஜொலித்துப் புகழ் வாங்குவீங்க.  வெளிநாட்டு வருமானம் வரும். அயல் நாடு சம்பந்தமான பிசினஸ்     செய்பவர்களுக்கு நன்மை  அதிகரிக்கும். லாபமும் கூடும்.  திருமணத்துக்குக் காத்திருப்பவர்களுக்கு பயமோ கவலையோ வேண்டாம்.. இதோ…  இப்பவே திருமணம் நிச்சயமாயிடும் பார்த்துக்கிட்டேயிருங்க. நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.  தந்தையிடம் நல்லுறவு அதிகரிக்கும்.

துலாம்

அப்பாடா.. எத்தனை நல்ல செய்திகள். குழந்தைப் பேறு.. திருமணம் போன்ற விஷயங்கள் மட்டுமன்றி மன அமைதி புண்ணிய நதி நீராடல் என்ற சந்தோஷங்களும் கிடைக்கும்.  புது வேலை கிடைக்கும்.  வெளிநாட்டு வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளமும் பதவியும் உயர வாய்ப்புள்ளது.  கலைத்துறையில் உள்ள வங்களுக்குப் புது வாய்ப்புக்கள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேறவும் புகழ் அதிகரிக்கவும் வாய்ப்பு வரும்.  அப்பாவுக்காகக் கொஞ்சம் செலவு செய்ய வேண்டி வரலாம். முகமோ மனமோ சுளிக்காமல்  செய்ங்க. தப்பில்லை.

விருச்சிகம்

கணவருக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை என்று உங்களுக்குக் கொஞ்சம் மன வருத்தம் இருந்ததல்லவா? அது சரியாகி நிம்மதி கிடைக்க இன்னும் சிறிது காலம்தான் இருக்கு. கவலைப்பட்டு உடம்பு இளைக்காதீங்க. இப்போ உங்க முயற்சிக்குப் பலன் இல்லைங்கறதுக்காக முயற்சியே செய்யாமல் இருப்பீங்களா? நோ நோ. செய்யும் முயற்சியைச் செய்துக்கிட்டே இருங்க. வேளை வரும்.  தானே வரும்.  படிப்புக்காகவும் சுப நிகழ்ச்சிகளுக்காகவும் செலவுகள் செய்வீங்க.  நல்லதுதானே?  திடீர்னு புது வேலை கிடைக்க வாய்ப்பிருக்கு.  கலை சம்பந்தமான வெற்றி உண்டு.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 11 முதல் அக்டோபர் 13 வரை 

தனுசு

லாபம்னா என்னன்னு கண்லயே தெரியலையே என்று ஏங்கிக் காத்துக்கிட்டிருந்தீங்கதானே? இதோ .. வந்தாச்சு. திகட்டத் திகட்ட வெற்றிதான். புது வியாபாரம் ஆரம்பிக்க இது நல்ல நேரம். ஆசிரியர்களுக்குப் புகழும் பாராட்டும் வருமானமும் கூடும்.  பேச்சில் பணிவும் இணக்கமும் இருக்கும்படி பார்த்துக்குங்க. யாரையும் மட்டம்  தட்டியோ கடிந்தோ பேச வேண்டாம்.  ஆரோக்யம் பற்றிக்கொஞ்சமாச்சும் கவலைப்பட்டே தீரணும் நீங்க. இந்த அளவுக்கு அலட்சியமாவா இருப்பீங்க.. அடடா. அப்பாவின் புகழ் அதிகரிக்கும். ஏற்கனவே உள்ள செல்வாக்கு கூடும். சற்று மந்தப்போக்கு இருந்தாலும் வெற்றிதான்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 13 முதல் அக்டோபர் 15 வரை 

மகரம்

ஓடிக்கொண்டிருந்த ரேசில் ஓரிருவர் உங்களை முந்தித்தான் போவாங்க. அதுக்கென்ன செய்ய முடியும். எங்கயும் எதுலயும் வெற்றியே பெற முடியுமா என்ன? புது வேலை மாற இது சமயம் இல்லை.  பேச்சில் விஷம் வேண்டாம். அது ஆபத்து. வெளிநாட்டுப் பயணங்கள் நன்மை தரும்.  டாடிக்கு நன்மைகள் உண்டு. எந்த விஷயத்திலும் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் போய்க்கொண்டிருந்தால் பிரச்சினை வராது.  உடல் ஆரோக்யத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்.     யாரையும் நம்பி எதிலும் கையெழுத்துப் போட வேண்டாம்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 15 முதல் அக்டோபர் 17 வரை 

கும்பம்

திருமணத்திற்கு நாள் குறிச்சாச்சா? காத்திருந்த நன்மைகள் எல்லாம் நடக்க ஆரம்பிச்சாச்சில்ல? அப்பாடா. சந்தோஷம்.  கணவருக்கு/ மனைவிக்கு கோபம் வரும்படி நடந்துக்கிட்டா அவங்க என்ன செய்வாங்க பாவம்? அப்புறம் அவங்களை மட்டும் குற்றம்  சொல்லி என்ன பயன்?  யூரினரி பிரச்சினைகள் போன்றவை வராமல் ஆரோக்யத்தைப் பார்த்துக்குங்க.  அப்பாவின் ஆரோக்ம் நல்லாயிருக்கும். அவருடைய புத்திசாலித்தனமான நடவடிக்கைகளால் அலுவலகத்தில் உள்ளவங்களும் அக்கம்பக்கத்தினரும்.. உறவினர்களும் நன்மையடைவாங்க. பாராட்டுவாங்க.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 17  முதல் அக்டோபர் 19 வரை 

மீனம்

காதல் சிறகைக் காற்றினில் விரிப்பீங்க. புகழ் மழை உங்களை நனைக்கும்.  முன் எப்போதோ இருந்தமாதிரி இப்போது நன்மைகள் வந்தடையும்.  ஒரு வகையில் ஆக்ஷன் ரீப்ளே மாதிரி இருக்கும்.  அப்பாவுக்கு சிறு பிரச்சினைகள் வரலாம். கவலைப்படாதீங்க. சரியாயிடும். அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சினையாய் இருந்தார் அவர் குற்றமற்றவர் என்று உடனேயே நிரூபணம் ஆயிடும்.  திடீர் நண்பர்கள் கிடைப்பாங்க. பல காலத்து நண்பர்கள் திடீர்னு விலகவும் கூடும்.  குழந்தைங்களால சிறு டென்ஷன்ஸ் ஏற்பட்டாலும் சரியாகும். அவங்களுக்கு சிறிய உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுச் சரியாகும். புதிய வாய்ப்புகள் வரும். கப்பென்று பிடிச்சுக்குங்க.