மேஷம்

அதிகரிக்கும் செலவுகங்களால கையிருப்பு குறையுமுங்க. கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பிருக்கறதால அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப்போங்க. ப்ளீஸ்.  பேசும்போது பொறுமை அவசியம். மம்மி  வழி உறவினர்களால ஆதாயம் கெடைக்க வாய்ப்பு உண்டுங்க. பிள்ளைங்களுக்காகச் செலவு செய்யவேண்டி வரும். செய்யுங்க. இட்ஸ் ஓகே. நம் குழந்தைங்கதானே. அவங்களுக்குச் செய்யாம யாருக்குங்க செய்யப்போறோம்? வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் லேசாக அதிகரிக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கணுங்கவாழ்க்கைத்துணையால் சில சிறிய சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கணுங்க. சிவபெருமானை வழிபட சிரமங்கள் குறையுமுங்க.

சந்திராஷ்டமம் :  ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12 வரை

ரிஷபம்

புதிய முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்கணுங்க. மம்மி வழி உறவுகளால் சில நன்மைகள் ஏற்படக்கூடும். பிரிஞ்சிருந்த குடும்பங்கள் சேரும். டாடியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும்படியான காரியங்களில் ஈடுபடுவீர்கள். அவை உங்களின் திறமையையும் புகழையும் உலகிற்குப் புரிய வைக்கும். உழைப்பதற்கு ஒரு அளவில்லை? என்று கேட்டு யாரேனும் உங்களின் உற்சாகத்தைக் குறைக்க முயன்றால் அனுமதிக்கவே செய்யாதீங்க. மிக திடீர்ப் பணவரவு இருக்கும். உதாரணமாக எட்டுப் பத்து வருஷம் முன்னாடியே கை கழுவி…… வரவே வராதுன்னு நீங்க நினைச்ச தொகை டக்கென்று உங்க முன்னால் குதிக்கும். பைரவரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

சந்திராஷ்டமம் :  ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 15 வரை

மிதுனம்

அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. நீங்கள் லாபமோ வருமானமோ எதிர்பார்க்காமல் சும்மாவானும் செய்த செயல் ஒன்று லாபகரமாக வருமானம் கொடுத்துச் சந்தோஷத் திணறல் வழங்கும். ஆனால் ஸாரிங்க.. மிகப்பெரிய லாபமெல்லாம் வரும்னு எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க. ஓரளவு வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தே ஆகணும். நினைவில் வெச்சுக்குங்க. முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லதுங்க. நிச்சயமாப் பெரிய அளவில் ரிஸ்க்கெல்லாம் எடுக்கவே கூடவே கூடாது. சனீஸ்வரரைக் கட்டாயம் வணங்கணுமுங்க.

சந்திராஷ்டமம் :  ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 17 வரை

கடகம்

உங்களோட முயற்சிகள் எல்லாம் சாதகமா முடியுமுங்க. ஆனாலும் தடைகள் தாமதங்களைத் தவிர்க்க முடியாதுதான். டாடிகிட்டேயிருந்து எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பொறுமை முக்கிய முங்க. சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்தான். ஆனாலும்..  வீண் செலவுகளும் ஏற்படும்னு நினைவில்  வெச்சுக்குங்கப்பா. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த சண்டை சச்சரவுகளும் முறைப்புகளும்  நீங்கும். வியாபாரத்தில் பெரிய அளவில் அனுகூலம் எதிர்பார்க்க முடியாதுங்க. சகோதரர்களால் ஹெல்ப்பும் அனுகூலம் உண்டாகும். அவங்க கூட ஏற்கனவே ஏற்பட்டிருந்த ஃபைட் தீரும். திய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்கி விடுவது நது பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லைன்னா லும்.. தோல்வியில் முடியாதுங்க. .ஆஞ்சநேயரை வழிபடுவது நன்றுங்க.

சிம்மம்

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீங்க. எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மகன் / மகள் முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். ஆனால் எதுவும் ஒரு இழுபறியாவே இருக்கும் என்பதைத் தவிர்க்க முடியாதுங்க. சாரி.. ஆனால் விரைவில் லேசாகவேனும் நிம்மதி தரும் செய்தி கிடைக்குமுங்க . வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். வீண் அலைச்சலால் உடல் அசதி உண்டாகக்கூடும். பட் .. நீங்க அதைப் பொருட்படுத்தறவரா என்ன? கடன்கள் விவகாரத்தில் கவனம் தேவைங்க. எஸ்பெஷலி.. யாராவது கடன் வாங்கி நீங்க அதில் ஜாமீன் கையெழுத்துப்போட்டிருந்தால் ஜாக்கிதைக். குருவாயூரப்பன் வழிபாடு தடைகளை உடைச்செறிய உதவுங்க..  

கன்னி

ஆசிரியர்கள் உங்களின் குழந்தைகளைப் புகழ் பெற வைப்பார்கள். குறிப்பாகக் கற்பனை சார்ந்த  துறைகளான நடனம் நாட்டியம் ஓவியம் போன்ற துறைகளில் ஏதாவது ஒன்றில் மிகச் சிறந்து விளங்குவார். ஆனால் திறமையும் வெற்றியும் இருந்தாலும் நீங்க எதிர்பார்த்த புகழை அவங்க அடையலைன்னு சின்னதா ஒரு குறை மனசுக்குள் இருக்கும் வெயிட் செய்து பாருங்க. வெற்றி நிச்சயம். எதிரிகளுக்கு நீங்க சிம்ம சொப்பன மாகத்தான் ஆகிவிடுவீங்க. இத்தனைக்கும் நீங்க சினிமா வில்லன் மாதிரி ஆக்கிரோஷமாய்க் கம்பு சுத்தலைதான். எனினும் உங்க மேல பெருந்தன்மையான மரியாதை வரும்படியா நடந்துக்கிட்டீங்க. இனி  அவங்க தொல்லை இருக்காது. உங்க பக்கம் தலை என்ன வால்கூட நீட்டிப்படுக்க மாட்டாங்க. நாராயணனைத் துதித்தால் நன்மை பெருகுமுஙங்க.

துலாம்

இத்தனை காலம் தொடர்ந்து இருந்து வந்த அலுவலக ரொட்டீன் மாறுபட்டு வேறு வகையான பாதையில் பயணிக்கும். இதுவும் நல்லாத்தான் இருக்கும். டென்ஷன் ஆவாதீங்க. புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். குழந்தைகள் புகழ் அடைவார்கள். மருத்துவர்களுக்கும் கட்டடத்துறையி இருப்பவர்களுக்கும் கொஞ்சமே கொஞ்சம் லாபம் பெருகும். சம்பளம் கூடுதலாகும் சரி. பெருமையான பொறுப்பு தருவாங்க சரி. தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

விருச்சிகம்

திமிர், கர்வம் போன்ற வார்த்தைகளை உங்க அகராதியிலிருந்து தூக்கிப்போட்டு நல்ல பெயர் எடுத்துக் கிட்டிருக்கீங்கல்ல. அதை இனியும் காப்பாத்திக்குங்க. ப்ளீஸ். செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் பயனுள்ள செலவுகளாகவே இருக்கும்.புதிய முயற்சி சாதகமாக முடியும். தந்தை வழியில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். எதற்கெல்லாம் பயந்தீர்களோ அவை சரியாகும்.  வயிறு சம்பந்தப் பட்ட பிரச்சினைகள் வராமல் காத்துக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லதுங்க.

தனுசு

காரியங்கள் அனுகூலமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப் பார். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும், பணியாளர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் ஊருக்கு உழைப்பது பற்றி சூப்பர் பெருமைதான். இது புண்ணியச்செயல்தான். நிறுத்தாதீங்க. கன்டின்யூ செய்ங்க. எனினும் கொஞ்சம் உங்கள் ஆரோக்யத்தையும் பார்த்துக்குங்க. சரியா?  ஓகே? மூத்த சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு சிறு பிரச்சினைகள் ஏற்படுவது போல் தோன்றினாலும் விரைவில் சரியாகும். உதவிகள் நிறையக் கிடைக்கும்.  உங்க முயற்சியும் உதவும் என்பதால் சகோதர சகோரிகளுக்கிடையே நல்லெண்ணங்கள் பரவும்.  முருகப்பெருமானை வழிபடுவது நல்லதுங்க.

மகரம்

குழந்தைகள் புகழ் அடைவார்கள். அதுவும் திடீர்ப் புகழ் அடைவார்கள். வெளிநாட்டில் கல்வி கற்க எண்ணம் கொண்டவர்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும். லாபம், சம்பாத்தியம், நிதி நிலைமை போன் விஷயங் களில் பிரச்சினையே இருக்காது. கடன் பெற்றுப் புதிய வீடு வாங்குவீர்கள். ஆனால் கடன் கிடைப்பதற்கள் உன்பாடு என்பாடு என்றாகிவிடும். மனசைத் தயார் நிலைல   வெச்சுக்கங்க. குழந்தைங்க வாழ்க்கைல ஒரு சின்னஞ்சிறு தேக்கம் இருந்தால் கவலை டென்ஷன் அது இதுன்னு பட வேணாங்க. சீக்கிரம் சரியாகும். வெளிநாட்டு வாகனம் வாங்கப்போறீங்க. இனிமேல்தான் செலவுகள் பிரமாதமாகக் கட்டுப்பட்டு சேமிப்பு அதிகரிக்கப்போகுது. வேங்கடேச பெருமாளை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கும்பம்

உங்க வீட்டில் யாருக்கோ திருமணம். சீமந்தம் இன்ன பிற விசேஷங்கள் வருதே ஆஹா ..ஜாலி,,. செம ஷாப்பிங் உண்டு. புது உடைகளையெல்லாம் எடுத்து ரெடியாய் அயர்ன் செய்து வையுங்க.  ஆனாலும் உடனே எதுவும் நடக்காதுன்னு உங்களுக்கே தெரியுமேங்க. எப்போதும் யாரிடமும் எந்த சூழலிலும் கவனமாய்ப் பேசறீங்க. உங்களின் கவர்ச்சிகரமான புன்னகையும்   அழகாய் நடந்து கொள்ளும் முறையும் ஏற்கனவே உங்களைப் பலரின் அபிமான நட்சத்திரம்போல் ஜொலிக்க வைத்திருக்கிறது. சூப்பர். கீப் இட் அப். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்வதைத் தவிர்க்கவும். பணிச்சுமை அதிகரிப்பதால் சற்று சோர்வு உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். விநாயகரை வழிபடுவது நல்லதுங்க.

மீனம்

மருத்துவக் கல்வி பயிலுபவர்கள் சிறந்த முறையில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் புத்திசாலித்தனம் வெளிப்படும். இதன் காரணமாக அலுவலகத்திலும் சொந்த வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். ஸ்வீட்டி எடுங்க கொண்டாடுங்க.  எத்தனை உரிமையாய்ப் பழகினாலும் எதிர்பாலினத்தினரிடம்.. குறிப்பா அலுவலகத்தில் உங்களின் உடனடி மேலதிகாரியிடம் அடக்கி வாசிங்க.  வீடு அல்லது வாகனம் வாங்க முனையும்போதோ பூர்வீக வீடு சம்பந்தமான முயற்சிகள் செய்யும்போதோ தேக்க நிலை ஏற்படக் கூடும். முயற்சியில் மனம் தளராக விக்ரமாதித்யன் போல முயற்சி செய்ங்க. எல்லாம் காலப்போக்கில் வெற்றி வெற்றி வெற்றிதான் தரும். அம்பிகை வழிபாடு சிறப்புப்பலன் தரும்.