மேஷம்

இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்துக்கிட்டிருந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைபளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி வந்தால் அதைத் தவிர்த்துடுங்கப்பா. பிகாஸ், வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படாம சாமர்த்தியமாய் அவாய்ட் செய்து அமைதி காப்பீங்க. அதாவது, கௌரவத்தைக் காப்பாத்திப்பீங்க. உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக உங்களைவிட்டுக் கிளம்பிப்போயிடுங்க. வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். அது அனேகமாய் உங்க மனசுக்குப் பிடிச்சவங்ககிட்டேயிருந்ததோ சகோதர சகோதரிங்ககிட்டேயிருந்தோ வரும். அவங்கதான் இப்போ ரொம்பவும் உயரத்துக்குப் போயிக்கிட்டே இருக்காங்களே.

சந்திராஷ்டமம் : மார்ச் 2 முதல் மார்ச் 4 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

 ரிஷபம்

தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து வெற்றியும் லாபமும் பார்ப்பீங்க. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்துல இருக்கறவங்க சக ஊழியர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரிச்சு நன்மை காண்பீங்க. இயந்திரங்கள், ஆயுதங்கள், நெருப்பு ஆகியவற்றை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்துல உள்ளவங்களால போன வாரம் ஏற்பட்ட திடீர் பிரச்சினைகள், வாக்குவாதம் போன்றவை தீர்ந்து சமாதானக் கொடி வெள்ளையாய்ப் பறக்கும். நிம்மதிதானே? தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறுவீங்க. ஆபீஸ் வேலைல உள்ளவங்க அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவச் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.

சந்திராஷ்டமம் : மார்ச் 4 முதல் மார்ச் 6 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

கடந்த சில வாரங்களாய்க் கொடுக்கல், வாங்கலில் இருந்துக்கிட்டிருந்த  சிக்கல்கள் இந்த வாரம் தீரும். தடைபட்ட சுப காரியங்களில் இருந்த தடை நீங்கி எல்லாம் ஹாப்பியா நடந்து முடியும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவாங்க. நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். போட்டிகள் குறையும். எதிர்பார்த்த ஆர்டர் வரும். ஆபீஸ்ல உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் வாய்ப்பு உள்ளது. நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுட்டீங்க. பல காலம் நிறைவேற்றாத திட்டங்கள் நிறைவேறும். பிரார்த்தனைகளை நிறைவேற்றக் கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க. மனசை அமைதியாக்கி நிம்மதி பெறுவீங்க.

சந்திராஷ்டமம் : மார்ச் 6 முதல் மார்ச் 8 வரை

சந்திராஷ்டம தினங்களில்  பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

பணவரத்து திருப்தி தரும். கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். உத்தியோகத்துல இருக்கறவங்க உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். உங்களுக்கு மேல உள்ள ஆபீஸர்ஸ் ஒத்துழைப்பும் இருக்கும். உங்களுக்கு எதிராக பிரச்சினையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவாங்க. வீட்ல சுப காரியம் நடக்கும். உங்களுக்கோ உங்க  ஃபாமிலில உள்ள ஒருத்தருக்கோ, திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். இந்த வாரம் உழைப்பினால் வெற்றி அடைவீங்க. வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்க்கு நன்மை உண்டாகும். விருந்து சாப்பிடுவீங்க. என்ஜாய்.

சிம்மம்

பிள்ளைங்களால பெருமை உண்டாகும். உங்களுக்கு பப்ளிக்ல மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். பொருளாதாரம் மேம்படும். பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் உடனே சாமியைத் திட்ட வேண்டாம். நீங்க திட்டி முடிக்குமுன் குழந்தை ஜாலியா சிரிச்சுப் பேசி விளையாட ஆரம்பிக்குங்க. எந்த முயற்சியும் உங்களுக்கு வெற்றியாய்த்தான்முடியும் . ஆனால் எடுத்த வேலைகளில் சோம்பல் உள்ளே புகுந்து வேலைகளைத் தாமதப்படுத்தாமல் பார்துக்குங்க. திடீர் நன்மைகளையும் லாபங்களையும் ஷ்யூரா எதிர்பார்க்கலாம். எதிலும் ஒரு தடை தாமதங்கள் இருந்தாலும் அவை விலகும்.

கன்னி

ஆபீஸ் வேலைல உள்ளவங்க நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். இந்த வாரம் எல்லாவற்றிலும் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம், பண வரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உங்களுக்கு எண்ணம் இருந்தால் வீடுகளை வாங்க, விற்க இது கரெக்டான டைம்தான். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகளைக் காணப்போகிறீர்கள் பாருங்களேன்.

துலாம்

பிள்ளைங்க கிட்ட அனுசரித்து செல்வதும் அவர்கள் போக்குல விட்டு பிடிப்பதும் நல்லது. பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உங்க ஆபீசில் இத்தனை நாளா இருந்து வந்த  பிரச்னைங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.  மாணவர்கள் ஸ்காலர்ஷிப் கிடைக்க முயற்சி செய்யலாம். கூடிய விரைவில் பலன் கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அக்கறை கூடுதலாயிக்கிட்டு வரும்.

விருச்சிகம்

இந்த வாரம் பிரச்னையைச் சமாளிக்கற திறமை இன்கிரீஸ் ஆகும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல், ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீங்க. பாராட்டு கிடைக்கலாம். குழந்தை வேணும்னு ஏங்கிக் காத்திருந்தவர்களுக்கு, அந்த பேபிக்காக அட்வான்ஸாய்த் தொட்டில் வாங்கும் வேளை வந்துடுச்சுங்க.

தனுசு

பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். மாணவர் களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும் | பரிகாரம்: குல தெய்வத்தை பிரார்த்திப்பது. ஆபீஸ்ல உங்களுடைய வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேணாம். பிறகு நீங்க இன்னொரு வாட்டி அதையே சரியான முறைல செய்ய வேண்டி வரும். சில நல்ல விஷயங்கள் பற்றி அவசரம் அவசரமா முயற்சி செய்துட்டு வேக வேகமாய்ப் பலனை உடனடியாய் எதிர்பார்த்தா எப்பிடிங்க? வெயிட்டீஸ் ப்ளீஸ். அததுக்கு நேரம் வந்தால் நாலு கால் பாய்ச்சலில் நன்மை வந்தடையும். பொறுங்க.  உடனடிப் பலன் இல்லையேன்னு முயற்சி செய்வதை நிறுத்தி சமுத்திரத்தில் போட்டுடாதீங்க.

மகரம்

இந்த வாரம் எந்த காரியத்திலும் வேகம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. மேரேஜ் பற்றிய பேச்சுக்கள் நல்லபடியாக முடியும்.  அப்பாடா எவ்ளோ காலமாய்க் காத்திருந்தீங்க.  ஆனாலும் திருமண நாள் சற்று போஸ்ட்போன் ஆக வாய்ப்பிருக்குங்க. அதனால்  என்ன? மணமகன்/ மணப்பெண் யாருன்னு தெரிஞ்சாச்சு, இரண்டு பேருக்கும் பரஸ்பரம் பிடிச்சுப்போச்சு., பிறகென்ன? ஜாலிதான்.  எதை எடுத்தாலும் கொஞ்சம் ஸ்லோவாத்தான் போகும். உடனே அப்செட் ஆகி, ஃப்ரெண்ட்ஸ் கிட்ட புலம்ப வேணாம்.  அடுத்த வாரமே முழுக்க சரியாகும். ஜாப்ல நீங்க ரொம்பநாளா ஆசையாக் காத்துக்கிட்டிருந்த விஷயம் நடக்கும்.

கும்பம்

பிள்ளைங்களோட செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். பழைய நட்பையெல்லாம் புதுப்பிச்சு சந்தோஷப்படுவீங்க. வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். புதிய கார்.. ஃப்ளாட்..வில்லா..  வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீங்க. உறவிர் மத்தியில் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீங்க. மனதில் குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத்  தவிர்க்க முடியாது.  வீடானாலும் சரி.. வாகனமாயினும் சரி.. அழகாகவும் கவர்ச்சிரகமாகவும் அமையும். நீங்களே எதிர்பார்க்காத அளவு சிறப்பாக இருக்கும். பயணங்களால் லாபம் ,நன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். எஸ்பெஷலி அலுகலகம் சம்பந்தமான பயணங்கள். நிதி சம்பந்தமான நன்மைகள் திடீர்னு நடைபெற்று சந்தோஷம் கொடுக்கும்.

மீனம்

இந்த வாரம் எடுத்த வேலையை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து உங்க பக்கம் உள்ள நியாயத்தை நிரூபிச்சு விடுபடுவீங்க. தேவையேயில்லாமல் கற்பனையாய், திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீங்க. நீங்க வீடு வாங்கினால் அதில் சுற்றிலும் பசுமை இருக்கும். உங்க பட்ஜெட் சற்று பெரிய அளவில் இருக்கும்னா.. எஸ்டேட் போன்றவை வாங்கவும் சான்ஸ் இருக்குங்க. உழைப்பு எதுவும் வீணாகாது. அததற்குக் காலம் வரும்போது சிறப்பான பலன் கொடுக்கும். இப்பபோ அப்படிப்பட்ட நல்ல காலம் வந்திருக்குங்க. பழைய ஃப்ரெண்ட்ஸையும், ரொம்ப காலமா சந்திக்காத ரிலேடிவ்ஸையும் மீட் செய்வீங்க.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 28 முதல் மார்ச் 2 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.