மேஷம்

பங்கு வர்த்தகம் மற்றும் ட்ரேடிங் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கப் போகுதுங்க. புதிய முயற்சிகளுக்காக நீங்க பணத்தை செலவு செய்யப் போறீங்க. அதுக்கு நல்ல ரிசல்ட் உண்டு. இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்துல வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், பிசினஸ்.. புரொஃபஷன் சீரா நடக்கும். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது பெட்டர். எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனசுல எதைப் பற்றியாவது சிந்திச்சு கற்பனையாக் கவலைப்பட்ட வண்ணம் இருப்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மார்க்பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். நல்லவங்களை மீட் செய்து நன்மை காணுவீங்க.

ரிஷபம்

ரொம்பக் காலமா நிலுவையில் இருந்த பிரச்சினைங்க முடிவுக்கு வந்து ஒரு நிம்மதிப்பெருமூச்சை உங்க கிட்டேயிருந்து வெளிப்படுத்தும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் வகையில் செலவுகள் இருக்கும். அது மிகுந்த சந்தோஷத்தை ஒங்களுக்குக் கொடுக்கும். உங்க தாயின் உடல் நிலைல இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் எல்லாம் தீர்ந்து அவங்களுக்கு நல்ல ஆரோக்கியம் மேம்படும். எனவே குடும்பத்துக்கே நிம்மதி உண்டாகும். வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீங்க. பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கெடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கிட்டிருந்த பதவி உயர்வு கிடைக்கவும் சம்பள உயர்வு ஏற்படவும் அதிக சான்ஸஸ் இருக்குங்க.

மிதுனம்

உங்க உத்தியோகத்தைப் பொறுத்தவரை இது அனுகூலமான காலக்கட்டாமாக இருக்கும். இந்த வாரம் ஆரம்பத்தில் உங்க நீண்ட நாள் விருப்பமாக இருந்த ஊதிய உயர்வு மற்றும் சம்பள உயர்வு நீங்க பெறலாம். வியாபாரத்துல எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கெடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று பிஸியான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். பட் அவங்களால நன்மையும் சந்தோஷமும் கலகலப்பும் ஏற்படும்போது சிரமங்கள் காணாம போயே போச். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு ஆபீஸ்ல வேலைச் சுமை அதிகரிக்கும். சாப்பிடவும் பேசவும் நேரமே இல்லாம உழைப்பீங்க. ஆனாலும் உங்க சின்சியரிட்டியை மேலிடத்துல கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. இதுக்குப் பிற்காலத்துல ரிவார்ட் உண்டு.

சந்திராஷ்டமம் : நவம்பர் 7 முதல் நவம்பர் 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். ஆபீஸ்ல உற்சாகமான நிலையே காணப்படுகிறது. வியாபாரத்துல வழக்கமான நிலையே காணப்படுகிறது. ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது. உழைப்புக்கும் முதலீட்டுக்கும் தகுந்த லாபம் குறையாது. வாரத்தின் முற்பகுதியில், ஒங்களோட உற்றார் உறவினர்களிடையே பேசும்போது பேச்சுக்களில் கவனம் தேவை. ஜோக் அடிக்கறேன் பேர்வழின்னு எதுவும் வார்த்தைங்களை விட்றாதீங்கப்பா. கடந்த சில வாரங்களாக ஒங்களோட நிம்மதியை கெடுத்த சில பிரச்சினைகள் மறைந்து, வாரத்தின் பிற்பகுதியில் நிம்மதியான உறக்கம் காணுவீங்க. சிலருக்கு கண் சம்பந்தமா இருந்துக்கிட்டிருந்த பிரச்னை ஒன்றிற்கு நிரந்தரமாத் தீர்வு காணுவீங்க. சின்னதா ஒரு டூர் உண்டு. அது உங்களை பேட்டரி சார்ஜ் பண்ணியதுபோல் உற்சாகமாக்கிட்டும். சூப்பர்ல?

சந்திராஷ்டமம் : நவம்பர் 9 முதல் நவம்பர் 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

குடும்பத்துல  மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீங்க. பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கெடைக்கும். நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மகன் மற்றும் மகள் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். ஆனால் அது உங்க தலையீட்டினால் நல்ல முறையில் முடிஞ்சு அவங்களுக்கும் ஒங்களுக்கும் நிம்மதி வழங்கிடும். டோன்ட் ஒர்ரி. யாராவது இரண்டு பேர் பேசிக்கிட்டிருந்தா நீங்க வேடிக்கை பார்க்கலாமே தவிர அந்த டிஸ்கஷன்ல கலந்துக்கிட்டு தேவையில்லாத கமென்ட் எதுவும் சொல்லிடாதீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 11 முதல் நவம்பர் 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

கன்னி

தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் மனசுல ஆர்வம் உண்டாகி செயலாக்குவீங்க. நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. ஆபீஸ்ல இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்துல  எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கும். தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்

சந்திராஷ்டமம் : நவம்பர் 13 முதல் நவம்பர் 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம்

இந்த வாரம் தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகளில் சாதகமான நிலை காணப்படும். தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். மகிழ்வித்து மகிழ்வீங்க. நிதானமாகப் பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்துல கூடுதல் கவனம் செலுத்தறீங்க. வெரிகுட். வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும். மேலதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரிச்சுக்கிட்டுப் போறீங்க. ஸோ.. ஃபேமிலி.. ஹாப்பியா இருக்கும்.

விருச்சிகம்

திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை மட்டும் கொஞ்சமாச்சும் குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். ஆபீசில் தொடர் பணிகளால் களைப்படைவீங்க. பட் அவார்ட்.. ரிவார்ட்.. பாராட்ஸ்.. கெடைக்குங்க. வாழ்க்கைல முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். இந்த வாரம் வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்துல வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.

தனுசு

ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு வேலை பளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீங்க. குடும்பத்துல  இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சினைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீங்க. உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனசுல எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மார்க்பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீங்க.

மகரம்

ஆபீஸ்ல இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கெடைக்கும். குடும்பத்துல  சுக சவுக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பீங்க. பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும். குடும்பத்தினருக்கு எதிலும் தடை தாமதங்கள் இருந்தாலும் எல்லாம் நல்லபடியா முடியும். நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருக்க வேண்டியது பேச்சுலதாங்க. சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீங்க. யாருடைய வம்பும்புக்கும் போகாதீங்க. நீங்க உண்டு ஒங்க வேலை உண்டுன்னு இருங்க.

கும்பம்

இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டாலும்தான் என்னங்க. அது நல்ல முறைல நீங்கும். தேவையற்ற மனக்கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தொழில் வியாபாரத்துல எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கவனம் தேவை. நீங்க தப்பு செய்யாதவரைக்கும் ஒங்களுக்கு பிராப்ளம் எதுவும் வராதுங்க. அதுல நோ டவுட். ஒங்க மனசுக்குப் பிடிக்காத சில நல்ல காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. மனசை வேற பக்கம் சிதற அடிக்கக்கூடிய விஷயங்கள் நடந்தாலும் எதையும் திரும்பிப் பார்க்காம முன்னேற்றப் பாதைல ஓடிக்கிட்டே இருங்க. சக்ஸஸ் உறுதி.

மீனம்

இந்த வாரம் உங்க ஹஸ்பெண்ட்/ ஒய்ஃப் மூலம் நெறைய சந்தோஷம் கெடைக்கும். வாழ்க்கைல நிம்மதி நிலவும். பிள்ளைகளின் வெளிவட்டார செயல்பாடுகள் பெருமை அளிக்கும். வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கத்தால் லாபம் ஏற்படும்.   விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவீங்க..  சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கெடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கெடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கெடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். இலாபத்தை எதிர்பார்க்கலாம். சிலருக்குக் காரியத் தடைகள், வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படலாம்.   அவற்றில் தீவிரமான முயற்சி காரணமாக வெற்றி காணலாம்.