மேஷம்
உங்களோட பேச்சுத் திறமையால காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் மனசுல ஏதாவது ‘இப்பிடி ஆயிடுமோ.. அப்பிடி ஆயிடுமோன்னு‘ தேவையில்லாத கற்பனைக் கவலை இருந்துக்கிட்டே இருக்கும். திடீர்ப் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மத்தவங்களோட ஹெல்ப் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் உற்சாகமாய் கவனம் செலுத்தி அதுல வெற்றியும் அடைவீங்க. எஸ்பெஷலி குடும்பத்துல உள்ள வேற யார் பெயரிலாவது வாங்கவும் சான்ஸ் இருக்கு. தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கைக் கைவிடுவது நல்லது. சிஸ்டர்ஸ்.. பிரதர்ஸ்.. இவங்க நன்மை செய்வாங்க. பதவி உயர்வதால் அலுவலகப் பொறுப்பு செமத்தியா அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 11 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாய் இருங்கள்.
ரிஷபம்
திறமையான பேச்சின் மூலம் நண்பர்களை/ உத்யோத்தை/ பிசினஸை/ மனைவியை/ கணவரைத் தக்கவைச்சுக்குவீங்க. பொருளாதார நிலை நல்லபடியாவே இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பாங்க. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும். குழந்தைகள் சந்தோஷ சர்ப்பிரைஸ் குடுப்பாங்க. அப்பா அன்பால் திணற வைப்பார். கல்யாணம் ஆகாதவங்களுக்குக் கல்யாணம் ஆகவும், குழந்தை பிறக்காதவங்களுக்கு “கங்கிராட்ஸ்” சொல்லவும் வேளை வந்தாச்சு. பாலிடிக்ஸ்ல ஈடுபட்டு உள்ளவங்களுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். கவலைகள் டாட்டா சொல்லும் வாரம் இது.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 13 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாய் இருங்கள்.
மிதுனம்
உங்க மனக்குறையை வீட்ல உள்ள பெரியவங்க கிட்ட சொல்லுவீங்க. அவர்களிடமிருந்து மனதிற்கு ஆறுதல் தரக் கூடிய ஆலோசனை கிடைக்கும். அது கரெக்ட்டான தீர்வு. அதைவிட்டுப்புட்டு.. அறிமுகம் இல்லாதவங்க கிட்ட பர்சனல் விஷயங்களைச் சொல்ல வேண்டாம். பயணம் செய்யும் போது கவனம் தேவைங்க. கடன் வாங்கிய இடத்தில், சொன்ன சொல்லைக் காப்பாற்றப் பாடுபட்டு நல்ல பெயர் எடுத்துடுவீங்க. மாணவங்க படிப்பில் கவனம் செலுத்துவீங்க. நண்பர்களின் எண்ணிக்கை இன்கிரீஸ் ஆகும். ஹாப்பியான விஷயம்தான். ஆனாலும் உணர்ச்சி வசப்பட்டு ஒட்டிக்காதீங்க. டிஸ்டன்ஸ்லயே வெச்சுக்கிட்டிருங்க. பிசினஸ் செய்யறவங்களோ.. கடன் கொடுத்தவங்களோ… பழைய பாக்கிங்களை வசூல் செய்யறதுல மும்முரமாக ஈடுபடுவீங்க. அதில் ஓரளவு வெற்றியும் கெடைக்கும். செம்ம ஜாலியான வாரங்க இது. ஊர் சுத்தி என்ஜாய் செய்வீங்க. மூவீஸ்.. ஜாலி டூர்னு கலக்குவீங்க.
கடகம்
பழைய கவலை ஒண்ணு மனசுல இருந்து.. அரிச்சுக்கிட்டே இருந்துச்சு இல்லையா? அது ஃபுல்ஸ்டாப் வெச்சுக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சி களில் ஈடுபட்டு சக்ஸஸ் ஆவீங்க. இப்போது உள்ள வேலையை மட்டும் கவனிச்சுக்கிட்டு வாங்க. எதிலும் நிதானத்துடன் முடிவு எடுத்து நன்மை காண்பீங்க. எடுத்த விஷயங்கள்ல ஒண்ணு ரெண்டுதடைகள் வரலாம். அதையெல்லாம் பார்த்து நீங்க நம்பிக்கை இழக்க வேண்டாம். குறிப்பாய், ஆரோக்கியம் கொஞ்சம் முன்னேபின்னே இருக்கலாம். அதுக்காக…. சுண்டு விரல் நகம் பிய்ஞ்சால் உங்க கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு அஞ்சி நடுங்கித் தூக்கத்தைக் கெடுத்துக்கறதெல்லாம் டூ மச். கெடைக்க வேண்டிய இடங்களில்.. எஸ்பெஷலி ஆபீஸ்ல, தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் ஒரு வழியா ஹப்பாடான்னு முடிஞ்சுடும்.
சிம்மம்
உங்க நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கும். முயற்சிகளைத் தொடருங்கள். எதிர்பார்த்த பலன்களை அதன் மூலம் பெறுவீங்க. உடல்நலத்தில் கேர்ஃபுல்லா இருக்க வேண்டும். உங்களை ஆரோக்கியமாக வைத்து கொள்வதற்குக் தியானம் செய்வது உதவிகரமாக இருக்கும். மனசை அமைதியா வெச்சுக்குங்க. அநாவசியத்துக்கு டோன்ட் ஒர்ரி. பயணத்தைத் தள்ளிப்போட வேண்டி வரும். அது நல்லதுக்குதாங்க. அரசியல்வாதிங்க விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களோட பொருட்களை ரொம்பவே கேர்ஃபுல்லாப் பார்த்துக்குங்க. இந்த வாரம் செலவுகள் கூடும். அவற்றில் சுப செலவுகளும் உண்டு. எதையும் எதிர்த்து நிற்பதைத் தவிர்த்து அனுசரித்துச் செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமா இருக்கறது பெட்டர்.
கன்னி
அதிர்ஷ்ட பலன்களை எதிர்பார்க்கலாம். உங்க வேலையை ஈஸியா முடிக்கக் கூடிய யுக்திகளைக் கண்டறிவீங்க. பண வரவு சிறப்பாக இருப்பினும், மறுபுறம் செலவும் இருக்கக்கூடும். செய்யும் விஷயங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்துல பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுப்பீங்க. தேவையே இல்லாத விஷயங்களில் வீண் குழப்பம் ஏற்படறதுக்கு சான்ஸே குடுக்க வேணாம். அதாவது, எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனசைக் குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லதுங்க. பணவரவு இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். ரெடியா இருங்க. எங்கும் எதுலயும் கவனமாய்ச் செயல்படறீங்க. வெரி குட். “என்னடா வாழ்க்கை இது”ன்னு கவலை வரும்போதெல்லாம் நிஜமான கஷ்டத்துல இருக்கறவங்களைப் பார்த்து ஆறுதல் கொள்ளுங்க. உங்க கஷ்டம்லாம் குண்டூசி சைஸ்.
துலாம்
ஒங்களோட எதிர்காலத்திற்கு உதவும். கடந்த கால தவற்றை எண்ணாமல் புதிய முயற்சிக்கு வித்திடுவீங்க. மன உளைச்சலால் ஆரோக்கியத்தில் ஏற்பட்டிருந்த பிராப்ளம்ஸ் தீரும். மனதை தைரியமாக வைத்துக் கொள்ளுவீங்க. முன்னோர்கள் வழிபாட்டை முறைப்படி ஒழுங்குபடுத்தினால் உங்களை துரத்திக் கொண்டிருந்த தொல்லைகள் அகலும். லேடீஸ் தங்க கிட்ட குடுத்த வேலைகளைத் திறம்படச் செய்து முடிச்சு நல்ல பெயரும் பாராட்டும் பெறுவீங்க. வெளியூர் அல்லது வெளிநாடு.. மற்றும் வேற ஸ்டேட்லேயிருந்து வர்ற தகவல்ஸ் நிம்மதியளிக்கும். டிக்கெட் தேதி கன்ஃபர்ம் ஆகும். மாணவர்களுக்கு மேல்படிப்பு பற்றி உறுதியாக முடிவாகும். கூடுதல் நேரம் ஒதுக்கிப் படிக்கறீங்க. சூப்பர். இது வெற்றிக்கு உதவும். தடைநீங்கிப் புதிய வாய்ப்புகளைப் பெறுவீங்க. மனசுல உற்சாக வெள்ளம் ஓடும்.
விருச்சிகம்
துன்பங்களுக்கு ஆட்பட்டவர்கள் கூட இப்பொழுது சிரமங்கள் இல்லாத வாழ்க்கையை பெறுவீங்க. டென்ஷன்ஸ் எல்லாம் போயே போச். புதிய வாய்ப்புகளை சரியான ஆட்களிடமிருந்து சரியான தருணத்தில் கிடைக்கப் பெற்று முன்னேறப் போறீங்க. எதிர்காலத்தைப் பற்றிய ஒர்ரீஸ் அகலும். பொருளாதார ரீதியிலும் உடல் ஆரோக்கியத்திலும் வளமான நல்லநிலைகள் உண்டாகும். ரிலேடிவ்ஸ் கிட்ட நல்லபெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். பொறுப்பு அதிகரிக்கும். ஆபீஸ்ல இன்கிரிமென்ட் எதிர்பார்த்துக்கிட்டிருக்கறவங்க கொஞ்சமே கொஞ்சம் பொறுத்துக்குங்க. இனஃப். உங்களோட விருப்பத்திற்கு மாறா எதுவும் நடந்துடாதுங்க. பயப்படாதீங்க. பகைவர்களை வென்று நிம்மதி பெறுவீங்க. எதிர்ப்புகள் அகலும். பணவரவு ஓரளவுதான் திருப்திகரமா இருக்கும். இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு லாபம் வரும்.
தனுசு
ஆபரணச் சேர்க்கை எதிர்பார்ப்புகள் மங்கலமாய் நிறைவேறும். சேமிப்பு பெருகும். இதன் காரணமா நீங்க எதிர்காலத்துல நிம்மதியாக வாழ வழிபிறக்கும். படிப்பில் உங்க கடின முயற்சி காரணமாக நல்ல நிலை அடைவீங்க. பெற்றோர் மற்றும் ஆசிரியர்களோட அறிவுரை கேட்பது நல்லது. தேவையற்ற மன வருத்தங்கள் காணப்படும். இத்தகைய உணர்வை தவிர்த்தல் நல்லது. சிறிய பயணங்கள் ஓரளவு சாதகமான பலன் தரலாம். தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் ஓரளவே இருக்கும். தம்பதிகள் ஒருத்தரை ஒருத்தர் அனுசரிச்சுக்கிட்டுப் போறது நன்மை தருமுங்க. பெண்கள் சாதூர்யமாகப் பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க. பணவரவு கூடும். குடும்பத்தில் உள்ளவங்களோட செய்கைகள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். நிதானத்தைக் கடைபிடிப்பது வீண் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்.
மகரம்
பக்குவமான அணுகுமுறையினால வெற்றி பெறுவீங்க. நினைச்ச காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும் பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்பட சான்ஸ் இருக்குங்க. கணவன், மனைவிக்கிடையே மனசு விட்டு பேசுவது நன்மை தரும். தொழில் தொடர்பான செலவும் கூடும். யாரிடமுமே வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு, சென்ற ஆண்டைவிடவும் சிறப்பான வாரமா இருக்கும். தாமதமாகி வந்த மற்றும் தட்டிப்போன வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். துடிப்பும் தவிப்பும் இன்னும் கொஞ்ச காலத்துக்குத்தான். பல்லைக் கடிச்சுக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்துடுங்க. ப்ளீஸ். எந்த முன்னேற்றமும் நத்தை வேகத்துலதான் இருக்கும். முன்னேறறீங்க என்பதே குட் நியூஸ் இப்போதைக்கு.
கும்பம்
பிள்ளைங்ககிட்ட கவனமா பேசுவது நல்லது. மனசுல இருந்துக்கிட்டிருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனசுல உற்சாகம் ஏற்படும். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். மனசுல தேவையில்லாத பயம் காரணமாக விரக்திக்கு என்ட்ரி குடுக்காம பார்த்துக்குங்க. சமூகத்துல உங்க அந்தஸ்து உயரும். கொடுக்கல் வாங்கலில் முன்னே இருந்துக்கிட்டிருந்த பிராப்ளம்ஸ் எல்லாம் தீரும். தந்தை வழியில் ரொம்பக் காலமாய் நிலவிக்கிட்டிருந்த கஷ்டம் நீங்கும். ஆபீஸ்ல எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதத்தை அவாய்ட் செய்ங்க. குடும்பத்துல சந்தோஷம் உண்டாகும்.
மீனம்
இந்த வாரம் மனசுல இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீங்க. வாடிக்கையாளர்கள் தேடி வருவாங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவாங்க. அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும். அலுவலகவாசிகள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் யார்கிட்டயும் டிஸ்கஸ் பண்ணாம இருப்பது நன்மை தருமுங்க. ஆபீசில்.. முன் எப்பவோ எதிர்பார்த்த பிரமோஷன் கிடைக்கலாம். குடும்பத்துல உள்ளவங்களை அனுசரிச்சுக்கிட்டுப் போறது நல்லது. அம்மா பற்றிய கடுகு சைஸ் டென்ஷன்கள் இருந்துக்கிட்டிருக்கும். ஆனால் பிரச்சனை பெரிதாகாதுங்க. டோன்ட் ஒர்ரி. குடும்பத்தில் உள்ளவங்களால அதிகப்படி வருமானம் வரும்.
சந்திராஷ்டமம்: செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 9 வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்களிலும் மிகவும் கவனமாய் இருங்கள்.