மேஷம்

ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். ஆயுதங்கள் கையாளும் போதும் வாகனங்களை ஓட்டும்போதும் கேர்ஃபுல்லா இருங்க. தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பிசினஸ் செய்யறவங்க வாடிக்கையாளர்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கறீங்க. இது நன்மை தரும். குடியிருக்கவோ.. பிசினஸ் செய்யவோ, புதியதாக இடம் வாங்குவீங்க.  உத்யோகத்துல  மேலதிகாரிகளிடம் உங்களது கருத்துக்களை தெரிவிச்சு பாராட்டு வாங்குவீங்க.பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரிச்சுக்கிட்டுப் போறீங்க. வெரி குட். உங்களை சரிவைப் பாத்துக் கைதட்டிச் சிரிக்க நெனைச்சவங்க மொகத்துல கரியைப் பூசிட்டீங்க.  நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இப்போ போய்கிட்டிருக்கீங்க பாருங்க.. இதான் பெஸ்ட். குடும்பத்துல சுப நிகழ்ச்ச உண்டு.

ரிஷபம்

எதிர்பார்த்த விஷயம் ஒன்றில் வெற்றி உண்டாகும். புத்தி சாதூரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும். அனுபவப்பூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். பணவரத்து தாமதப்படும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மைதரும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய  முடிவுகள் எடுக்க நேரிடும்.  உத்யோகத்துல இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்னை தலை தூக்கும். பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீங்க. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு தொழில், வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். நிதானமாக பேசுவது நன்மை தரும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். மனதில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.

மிதுனம்

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவாங்க. வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். மேலதிகாரிகளுடன் இணக்கமான் சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். பெண்கள் எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீங்க. கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை விலகும். விளையாட்டு போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மகளுக்கு / மகனுக்கு வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்படியான சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அவற்றினால் சந்தோஷங்களே ஏற்படும்.  அம்மாவின் சருமப் பிரச்னை மெல்லக் குறைந்து நிம்மதியடைவாங்க.

கடகம்

குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். பல வாரங்களாய் இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. இளம் வயதினருக்குக் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கியமற்ற விஷயங்களில் தடைதாமதம் ஏற்படும்.  எனவே அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியிருக்காது.  மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பர். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் சென்றால் ஒன்றும் குறைந்து போய்விடமாட்டீர்கள். செய்யும் வேலை பற்றி மனதில் நிறைவான திருப்தி உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம். பயணங்களின்போதும், பொதுவெளியில் இருக்கும்போதும் உங்க பொருள்களை கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது.

சிம்மம்

எல்லா விஷயங்களிலும் தடை தாமதங்கள் ஏற்படாமல் இருக்க அதற்கேற்ற முன்னேற்பாடுங்களும் முயற்சிங்களும் அவசியம் தேவைங்க. எடுத்த முயற்சிகளில் இழுபறி நிலை மாறி மன மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.   மாணவர்களுக்கு  கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நன்மை தரும். கவனமாக அடுத்தவர்களிடம் பழகுவது நல்லது.  சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்துல  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீங்க.  உத்யோகத்தில் இருப்பவர்கள் நெனைச்சதை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவாங்க.   குறிக்கோள் இன்றி வீணாக அலைந்த நிலை இளைஞர்களுக்கு மாறி உற்சாகமாக இலக்கை நோக்கிப் பயணிப்பீங்க. ஒரு பக்கம் வரும்படியும் இன்கிரீஸ் ஆகும்.. செலவும் அதிகரிக்கும்.

கன்னி

ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பெண்களுக்கு சமையல் செய்யும் போது கவனம் தேவை.கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற சான்ஸ்கள் கிடைக்கப் பெறுவர். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அவசியமே இல்லாத வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. சருமம் சம்பந்தமான பிரச்னைகள் வராதபடி பாதுகாத்துக்கொள்ளுங்க. மனோதைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்துல  எதிர்பாராத தடங்கல்கள் வரலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெறுவீங்க.  உத்யோகத்தில் இருப்பவர்கள் நெனைச்சதை சாதிக்க வேண்டும் என்ற வேகத்தில் பணிபுரிவாங்க.  சிலருக்குப் புதிய பதவி அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்க பெறுவாங்க. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீங்க.  திருமண முயற்சிகள் சாதகமான பலன் தரும். கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீங்க.

 துலாம்

பெண்களுக்கு மனக்கவலை நீங்கி மனதில் நிம்மதியும் அமைதியும்  உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது.  கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கலைப்பொருட்கள் விற்பனை தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்கள் வீண் அலைச்சலை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவீங்க. ஃபாரின் சான்ஸ்கள் எதிர்பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு அது அநாயாசமா வரப்போகுது.. பார்த்துக்கிட்டே இருங்களேன்.. சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற முழுமூச்சாக பாடுபடுவர்.  புதிய நட்பு கிடைப்பதுடன் அவர்களது ஆலோசனையும் வெற்றிக்கு உதவும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீங்க. எதிர்ப்புகள் விலகும். முக்கியமா .. ஒங்க மனசுல சதா ஒட்டிக்கிட்டிருக்கற அந்த பயம் விலகும். கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.  எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி  வருவாங்க. நீங்க பிசினஸ்            செய்யறவங்களா இருந்தால், வியாபாரத்துல சில தந்திரங்களை கற்றுக் கொள்வீங்க.   உத்யோகத்துல சக ஊழியர்கள் உதவுவாங்க. வாழ்வில் சிலருக்குப் புது அத்தியாயம் தொடங்கும் .விருந்தினர் வருகை அதிகரிக்கும். சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு  காண்பீங்க. பேச்சில் கம்பீரம் பிறக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள்  எடுப்பீங்க. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பாங்க. வியாபாரத்துல  அனுபவமிக்க வேலையாட்களை அமர்த்துவீங்க. வெற்றிக்கு வித்திடும் வாரம்.

சந்திராஷ்டமம் : ஜூலை 4 ம் தேதி முதல் ஜூலை 6 ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்.

தனுசு

பயணங்களால் பயனடைவீங்க. பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீங்க.  தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். பணப்பற்றாக்குறையை  சமாளிப்பீங்க. வியாபாரத்துல அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீங்க.  உத்யோகத்துல சூழ்ச்சிகளை முறியடிப்பீங்க. உழைப்பால் உயரும் உத்வேகம் வரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நண்பர்கள்/ சிநேகிதிங்க மூலமா நல்ல செய்தி  கேட்பீங்க. குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீங்க.  வியாபாரத்துல வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீங்க.  உத்யோகத்துல சக ஊழியர்கள் உங்க வேலைகளைப் பகிர்ந்துக்  கொள்வாங்க. நெனைச்சது நிறைவேறும் வாகன வசதி பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவாங்க. மெல்ல மெல்ல ஒவ்வொரு பிரச்சினையா உங்களைவிட்டுப் போறதைப் பார்த்து நிம்மதியடைவீங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 6 ம் தேதி முதல் ஜூலை 9 ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்.

மகரம்

நிறைய உழைப்பும் முயற்சியும் கூடுவதால் படிப்படியா முன்னேற்றம் காண்பீங்க. உறவினர், நண்பர்களில் சிலர் உங்க உதவியை நாடுவாங்க. வியாபாரத்துல  வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவீங்க. உத்யோகத்துல சில  புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீங்க.  பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்வதால் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். ஆடை ஆபரணம் சேரும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். அம்மாவின் உடல் நிலை சீராகும். ஒங்களோட சுய பலம் அண்ட் பலவீனத்தை உணர்வீங்க. பிள்ளைகள் உங்க அறிவுரையை ஒரு வழியா ஏத்துக்குவாங்க. வியாபாரத்துல சில புரிஞ்சுக்குவீங்க.  உத்யோகத்துல வேலைகளை உடனடியாக முடிப்பீங்க. அதுக்காக மேலிடத்துலேயிருந்து ஒர சபாஷ் ஒங்களை வந்தடையும். தன்னம்பிக்கை  துளிர்விடும். ஹாப்பி?

சந்திராஷ்டமம் : ஜூலை 9 ம் தேதி முதல் ஜூலை 11 ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயல்பாடுகளிலும் கவனமாக இருங்கள்.

கும்பம்

தவற விட்ட தருணங்களை மீட்டுப் பிடிச்சு நிம்மதியாவீங்க. வாகன வசதி பெருகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவாங்க.  உறவினர், நண்பர்களில் சிலர் உங்க உதவியை நாடுவாங்க. வியாபாரத்துல  வாடிக்கையாளரின் நம்பிக்கையை பெறுவீங்க. உத்யோகத்துல சில  புதுமைகளை செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீங்க.  பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் வாரம் பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மற்றவர்களுக்காக சில  பொறுப்புகளை ஏற்பீங்க. வீடு வாகனத்தை சீர் செய்வீங்க. வியாபாரத்துல  புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீங்க. உத்யோகத்துல  தலைமையின் நம்பிக்கையை பெறுவீங்க. மாறுபட்ட அணுகுமுறையால்  சாதிக்கும் வாரம்.திட்டமிட்ட காரியங்கள் கை கூடும். சபைகளில் மரியாதை  கிடைக்கும்.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தீங்கதானே? அதெல்லாம் திரும்பக் கிடைச்சு சந்தோஷப்படுத்தும்.

மீனம்

பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்துல விஐபிகள்  வாடிக்கையாளர்கள் ஆவாங்க. உத்யோகத்துல பாராட்டப்படுவீங்க. மதிப்பு  மரியாதை கூடும். வேலைச்சுமையால் உடல் அசதி மனச்சோர்வு வந்தாலும் ஒங்க சுறுசுறுப்பும் உற்சாகமும் எங்கயும் போகாது. வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்துல புது முதலீடு செய்யலாம். உத்யோகத்துல சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய  வாரம். கணவன் – மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வீடு தேடி வருவாங்க. வியாபாரத்துல சில தந்திரங்களை கற்றுக் கொள்வீங்க. உத்யோகத்துல சக ஊழியர்கள் உதவுவாங்க. புது அத்தியாயம் தொடங்கும் .