மேஷம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவாங்க. குடும்பத்துல உள்ளவங்க பேச்சால் சந்தோஷம் வரும். ஒரு நல்ல விஷயம் கைகூடி வரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்குக் காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானங்களோ அல்லது லாபங்களோ வரும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் அதன் பலன்களும் சூப்பரா இருக்குமுங்க. தந்தைக்கும் தந்தைக்கு நிகரானவங்களும் வரும் பிரச்சினையைப் பொருட்படுத்தவே வேண்டாம். எல்லாம் தற்காலிகம்தான். அரசியல்துறையினருக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கொஞ்சம் கேர்ஃபுல்லாப் போங்க. வாரம் ஃபுல்லா மனசுல உற்சாகம் இருக்கும்.
ரிஷபம்
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். சற்று நிதானப்போக்கு இருக்கத்தாங்க செய்யும். தவிர்க்க முடியாது. ஆனால் எல்லாம் நல்லபடியா நடந்து சுபமாய் முடியும். அதானேங்க நமக்கு வேணும்? வெளிநாட்டு வாய்ப்புக்காகக் காத்துக்கிட்டிருந்தீங்களா? நிச்சயமா அது கைகூடும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒன் பை ஒன்.. வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருக்கறவங்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும்.
மிதுனம்
சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே ஒங்களோட கௌரவம் உயரும். அப்பாவுக்கு நன்மைகள் நடக்குமுங்க. அவரு அரசாங்கத்திடமிருந்து ஏதாச்சும் நன்மைகள் எதிர்பார்த்துக்கிட்டிருந்தாங்களா? அப்ப கட்டாயம் அது கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவங்க படிப்படியான வளர்ச்சியைக் காண்பீங்க. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண .. சற்றே அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். டோன்ட் ஒர்ரி. சமாளிச்சுடுவீங்க. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அலுவலகத்திலும் , வீட்டிலும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை அழகாகக் கையாளும் திறமை உங்களிடம் இயல்பா இருப்பதால் குழப்பங்கள் நீங்கி மனசுல தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். ஆரோக்கியம் அருமையாய் நலம் பெறும்.
கடகம்
வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில ஆதாயங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளை மிகச் சில காலத்துக்குத் தவிர்க்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவாங்க. சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருக்கறவங்க கூடுதல் பணி சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.. அவருடன் இருந்த சண்டை மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வரும். பெண்களுக்கு கடின முயற்சி செய்தால்தான் காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்வாதிகள் மிகப் பெரிய சேவைகளைச் செய்து பொது மக்களின் பாராட்டுகளைப் பெறுவீங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 2ம் தேதி முதல் மே மாதம் 4ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்.
சிம்மம்
சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இட்ஸ் ஓகே. வாங்குங்க. சிறந்த எதிர்காலத்துக்கு உதவப்போகும் திட்டத்துக்கு அது உதவப்போகுது. பதவி உயர்வு காரணமா, சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். பெண்களுக்கு உயர்வு உண்டு. அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இந்த வாரம் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்யுங்கப்பா. அதுதான் நல்லது. எந்த விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்குமுங்க. அலுவலக விஷயமாய்ப் பயணங்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படக்கூடும். கோயில் விசிட்கள் நிறையச் செய்வீங்க. ஆரம்பிச்ச காரியங்களை முழுமையா முடிக்கணும்னு தீவிரமா இருங்க. உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவர்கள் செய்யும் செயல்கள் உங்க கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். கட்டுப்படுத்திக்குங்க
சந்திராஷ்டமம் : மே மாதம் 4ம் தேதி முதல் மே மாதம் 6ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்.
கன்னி
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தை யிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சி களில் ஈடுபட சாதகமான வாரம். வாயில் நல்ல வார்த்தைகள்தான் வர வேண்டும் என்பதில் தீர்மானமாக இருங்க. முக்கியமாய் சோப வார்த்தைகளோ எதிர்மறைச் சொல்கறோ வராமல் பார்த்துக்குங்க. ஆரோக்யத்தைக் கண் மாதிரியும் பார்த்துக்கணும். கண்ணின் ஆரோக்யத்தையும் பார்த்துக்கணும். கொடுத்த வேலையை உரிய நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்
சந்திராஷ்டமம் : மே மாதம் 6ம் தேதி முதல் மே மாதம் 8ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்.
துலாம்
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை வீட்டிலிருந்து சொந்த இடத்துக்கு மாறுவீங்க. அக்கம்பக்கத்தினரால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும். சுப நிகழ்ச்சிகள் எல்லாம் எப்படியாவது தட்டுத் தடுமாறியாவது நடந்து முடிஞ்சுடுங்க. பயம் வேண்டாம். அலுவலகத்தில் சற்று கவனமாய் இருக்க வேண்டி வரும். கலைத்துறையில் உள்ளவங்களுக்குத் தடை தாமதங்கள் வரும். வெற்றி சற்றே எட்டிப்போகும். கடைசியில் கைக்கு வரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்பிருந்ததைவிடவும் நல்ல முன்னேற்றம் காணப்படும். பல நாள் திட்டமிட்டுப் பல காலம் தட்டிப் போய்க்கொண்டிருந்ததுதானே? ஆனா அந்த விஷயங்கள் எல்லாம் தன்னிச்சையாய் மடமடன்னு முடியுங்க. குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றங்கள் இருக்கும். குறிப்பாக வெளிநாட்டில் வாழும் மகன் அல்லது மகள் பெரிய அளவில் நன்மைகளை அடைவாங்க.
சந்திராஷ்டமம் : மே மாதம் 8ம் தேதி முதல் மே மாதம் 10ம் தேதி வரை
சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்கள்.
விருச்சிகம்
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீங்க. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியா இருக்குமுங்க. பெண்களுக்கு இவ்ளோ நாளா இருந்த வந்த பிரச்சனைகள் போயேபோச். கலைத்துறையினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீங்க. அரசியல் துறையில் உள்ளவங்களுக்கு சக நண்பவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இட்ஸ் ஓகே. இருவரில் ஒருவர் மன்னிப்புக் கேட்பதால் சுலபமாக முடியும். அது நீங்களா இருந்தாலும் பரவாயில்லை. உங்க மன நிம்மதிக்கு நீங்கதான் ஸ்டெப் எடுக்கணும்.
தனுசு
உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வழக்குகளில் நிதானமான அணுகுமுறை அவசியம். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் மேலிடம் உங்களிடம் பாராட்டுத் தெரிவிப்பார்கள். குடும்பத்துல ஹாப்பியான சூழ்நிலை காணப்படும். ஒரு விஷயம் நல்லா நினைவில் வெச்சுக்குங்க. வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாலினத்தினரிடம் மிகவும் கவனமாய் இருங்க. நேர்மையான சிந்தனைகள் வருமாறு பார்த்துக்கொண்டால் சூப்பர் வாரம் இது.
மகரம்
எதுவுமே தடைகள் மற்றும் தாமதத்துக்குப் பிறகுதான் நிறைவேறும். இப்போ உங்க ராசிக்காரங்களுக்குத் தேவையெல்லாம் ஜஸ்ட் பொறுமை மட்டும்தான். அது இருந்தால் ஜெயிச்சுடுவீங்க. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீங்க. பிள்ளைகள் பிடிவாதமாக இருந்தாலும் கூடுமானவரை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகளும் ஏற்படக்கூடும். சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சனைகள் வரும். ஆனால் ஓடிடும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர மனப்பான்மை உண்டாகும். சின்னச் சின்ன விஷயங்களில் கூட அருமையான மனநிறைவு ஏற்படுமுங்க.
கும்பம்
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. சிலருக்கு அவங்க விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும். அம்மாவுக்கு நன்மை செய்து ஆசீர்வாதம் வாங்கிடுவீங்க. வெரி குட். நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். நல்லதே நடக்கும். கட்டாயம் நடக்கும். நடந்தே தீரும். எவ்வளவு சோர்வான நிலையிலும் அதைப் பொருட்படுத்தாமல் அந்நிலையிலிருந்து வெளியே வரும் மனவலிமைக் கிடைக்கும். பணவரவு அதிகமாகும். எனவே பொருளாதாரம் ஓங்கும். திடீர் அதிருஷ்டத்தையெல்லாம் எதிர்பார்க்கவே வேணங்க. உழைப்பாலும் முயற்சியாலும்தான் கட்டாயமா உக் இலக்கை அடைய முடியும். நிறைய வகைகளில் வரும்படியும் லாபங்களும் வரும். அவசரப்படாமல் எதையும் செய்வது நல்லது. நன்மைகள் நிதானமாய்த்தான் நிகழும்.
மீனம்
எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். குடும்பம் தொடர்பான. முக்கிய முடிவுகள் எடுக்கும்போது, குடும்பப் பெரியவர்களுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. திட்டமிட்ட பயணங்கள் திட்டமிட்டபடியே நடந்து முடியும். மேலும் அவை திட்டமிட்ட வெற்றிகளையும் அளிக்கும். நல்ல சிந்தனைகளும் நல்ல யுக்திகளும் மனசில் உருவாகும் அதனால எல்லாரும் பாராட்டுவாங்க. பழைய சிநேகிகிளை/ சிநேகிதர்களைச் சந்திப்பீங்க. கவர்ச்சி அம்சம் அதிகமாகும். பாராட்டும் கைதட்டல்களும் கிடைக்கும். மேடையில் பேசுவீங்க. கலைத்துறையில் ஈடுபாடு வரும். பாவ எண்ணங்கள் மனசில் தோன்றாமல் பார்த்துக்குங்க.