இந்தியாவின் மிகப்பெரிய சைபர் ஊழல் “admin123” என்ற பலவீனமான கடவுச்சொல்லால் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பாயல் மகப்பேறு மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்தின் மூலம் இது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையின் சிசிடிவி அமைப்பு “admin123” என்ற சாதாரண கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்பட்டிருந்தது.
இதைப் பயன்படுத்தி சிஸ்டத்தில் நுழைந்த ஹேக்கர்கள், பரிசோதனைக்கு வரும் பெண்கள் தொடர்பான அந்தரங்க வீடியோக்களை திருடினர்.

அந்த காட்சிகள் பின்னர் சர்வதேச ஆபாச வலைத்தளங்களில் விற்கப்பட்டன. புலனாய்வின்படி, ஹேக்கர்கள் ஒரு ஆண்டுக்குள் சுமார் 50,000 வீடியோ கிளிப்புகளை திருடியுள்ளனர்.
அந்த மருத்துவமனை காட்சிகள் “Mega Mbps” மற்றும் “CB Monda” போன்ற யூடியூப் சேனல்களில் வெளியான பிறகு இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் அந்த வீடியோக்கள் டெலிகிராம் குழுக்களில் ரூ.700 முதல் ரூ.4,000 வரை விற்பனை செய்யப்பட்டது.
புனே, மும்பை, நாசிக், சூரத், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் உள்ள சுமார் 80 சிசிடிவி அமைப்புகள் ஹேக் செய்யப்பட்டதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனைகள், பள்ளிகள், நிறுவனங்கள், சினிமா அரங்குகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என 20 மாநிலங்களைச் சேர்ந்த பலர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பரித் தமேலியா என்ற B.Com பட்டதாரி, மூன்று மென்பொருட்கள் மூலம் “முரட்டுத்தனமான தாக்குதல் (brute force attack)” முறையில் கடவுச்சொற்களை உடைத்தார். அவருடன் ரோஹித் சிசோடியா என்ற இன்னொரு நபர் இணைந்து, திருடப்பட்ட உள்நுழைவு விவரங்களைப் பயன்படுத்தி கேமராக்களுக்கு நேரடி அணுகலைப் பெற்றார்.
இன்னும் பல சிசிடிவி அமைப்புகள் “admin123” போன்ற இயல்புநிலை கடவுச்சொற்களை பயன்படுத்துகின்றன. இதன் தனியுரிமை ஆபத்தில் இருப்பதாக புலனாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
பாதுகாப்பு கருதி எளிதாகக் கண்டுபிடிக்க கூடிய சாதாரண கடவுச் சொற்களுக்குப் பதிலாக கடினமான கடுவுச்சொற்களுக்கு மாற்றுங்கள் என்று அறிவுத்தியுள்ளனர்.