டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.
பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது அகதிகளாக அடைக்கலம் தேடி இந்தியாவுக்கு வந்த பல கோடி பேருக்கு வாக்காளர் உரிமை மற்றும் ஆதார் அட்டைகள் மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது என கூறி, வங்கதேச அகதிகள், ரோகிங்கியா அகதிகள் போன்றோருக்கு வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையாள அட்டையை நீக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
அதன்படி, உரிய ஆவணங்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெற்றது. இதில் சுமார் 60லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆகஸ்டு 1ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இறுதிப்பட்டியல் செப்டம்பரில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ள. மேலும் உச்சநீதிமன்றத்தையும் நாடி உள்ளன. ஆனால், தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையில் உறுதியாக இருப்பதாக கூறியது. இதனால், தேர்தல் ஆணைய நடவடிக்கையில் தலையிட உச்சநீதி மன்றம் மறுத்த நிலையில், வாக்காளர்களின் விவரங்களில் அவர்களின் ஆதார் அட்டையை பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில், திபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜாய்மால்யா பக்ஷி அமர்வில் இந்த வழக்கின் (ஜூலை 29) விசாரணையிபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவுப் பட்டியலில் இருந்து அதிகளவில் மக்கள் நீக்கப்படுவதால் அவர்கள் தங்கள் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள் என வாதிட்டனர்.
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறப்பு தீவிர திருத்தச் செயல்முறையின் போது 65 லட்சம் பேர் கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், அவர்கள் இறந்துவிட்டவர்கள் அல்லது நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாறிவிட்டவர்கள் என்றும் பூஷன் தெரிவித்தார்.
நீதிபதி சூர்ய காந்த், “இந்திய தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு அமைப்பு என்பதால், அது சட்டத்திற்கு இணங்க செயல்படும் என்று கருதப்படுகிறது. ஏதேனும் தவறு நடந்தால், அதை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். நாங்கள் விசாரிப்போம்,” என்று கூறினார்.
நீதிபதி பக்ஷி பூஷனிடம், “சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரைவுப் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் என்று உங்கள் அச்சம் உள்ளது. இப்போது இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை நாடுகிறது.என்றார்.
நாங்கள் ஒரு நீதித்துறை அதிகாரமாக இந்த செயல்முறையை மேற்பார்வையிடுகிறோம். பெருமளவில் மக்கள் விலக்கு இருந்தால், நாங்கள் உடனடியாக தலையிடுவோம். இறந்துவிட்டதாக அவர்கள் கூறும் 15 பேர் உயிருடன் இருப்பதற்கு நீங்கள் ஆதாரம் கொண்டு வாருங்கள்” என்று கூறினார்.
ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் இது குறித்த இறுதிக்கட்ட விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.