பாட்னா:
உள்ளே தீய எண்ணமும், வெளியே நல்ல எண்ணமும் என, பாஜகவுக்கு இரண்டு முகங்ள் உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் உபேந்திர குஷ்வாஹா விமர்சித்துள்ளார்.
பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்படுவார்கள் என பாஜகவின் கிரிராஜ் சிங் கூறியிருந்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு வரை பாஜக தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்து, பின்னர் வெளியேறிய ராஷ்ட்ரிய லோக் சம்தா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், மெகா கூட்டணி அமைந்ததும், பாஜகவினர் பாலைவனத்துக்கு அனுப்பப்படுவர். அவர்கள் எப்படி மற்றவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார்கள் என்று பிறகு பார்க்கலாம்.
பாஜகவினரை நான் அருகில் இருந்து பார்த்தவன். அந்த கட்சிக்கு 2 முகங்கள் உண்டு. உள்ளே தீய எண்ணமும், வெளியே நல்ல எண்ணமும் அவர்களுக்கு உண்டு.
சீதா வேடம் போடுபவரை மக்கள் கும்பிடுவார்கள். சிறிது நேரத்தில் சீதா வேடமிட்டவர் மேடைக்கு பின்புறம் சென்று புகைபிடிப்பார்.
இது தான் பாஜகவின் உண்மை முகம் என்றார்.