கொல்கத்தா:

மேற்கு வங்கத்தில் ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ரத யாத்திரை நடத்தப்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும், ராமராஜ்யத்தை உருவாக்க வேண்டும் என்ற வலியுறுத்தி இந்து அமைப்பு சார்பில்  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழியாக  வந்து தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ராமநவமிக்கு ரத யாத்திரை நடத்துவோம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

ராம நவமி நாளான வரும் 25-ந் தேதியன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் ரத யாத்திரை நடத்தப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

மம்தா பானர்ஜியின்  இந்த அறிவிப்பு தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.