ரியாத்
சவுதி அரேபியாவில் தீவிர வாத தாக்குதல் நடத்துவோரை இரும்பு கரம் கொண்டு அடக்கவோம் என சவுதி படடத்து இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிரான்சில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு காரணம் பிரஞ்சு ஊடகங்களில் வெளியான முகமது நபியின் கேலி சித்திரம் என கூறப்படுகிறது. இந்த கார்டடூன் குறித்து சவுதி அரேபியா கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சவுதி அரேபிய வாட்டின் ஜெத்தா நகரில் முதல் உலகப் போர் வீரர்களின் கல்லறையொன்று உள்ளது. இது இஸ்லாமியர் அல்லாதோரின் கல்லறையாகும். நேற்று முன்தினம் ஜெத்தாவில் உள்ள இந்த கல்லறையில் நடந்த சர்வதேச நிகழ்வில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒரு கிரேக்க காவல்துறையினர் மற்றும் சவுதி அதிகாரி ஒருவர் என இருவர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிகழ்வு குறித்து சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், “நாட்டில் எந்த ஒரு தீவிரவாத செயலையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்” என எச்சரித்துள்ளார்.
[youtube-feed feed=1]