பாட்னா: பீகார் தேர்தலில் வெற்றி நிலவரம் தெளிவாகத் தெரிய வேண்டுமெனில், மாலைநேரம் கடக்கும் வரை காத்திருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், முன்னணி நிலவரங்கள் மாறிமாறி வந்துகொண்டுள்ளன. கொரோனா காலத்தில், பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நடத்தப்பட்ட தேர்தல் என்பதால், பல இடங்களில், அதிகளவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
இதனால், வாக்குகளை எண்ணுவதில் பெரியளவில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. பிற்பகல் ஆகிவிட்ட நிலையில், இன்னும் பாதியளவு வாக்குகள்கூட எண்ணி முடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், பல தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் சிறிய அளவிலேயே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்போதைய நிலையை வைத்து, தேர்தல் முடிவுகளை அறுதியிட்டுக் கூற முடியாது என்றே அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது ஆர்ஜேடி கூட்டணி முன்னிலை வகித்தது. பின்னர், பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஒருகட்டத்தில், அதை முந்திக்கொண்டு ஆர்ஜேடி மேலேறியது. பின்னர், மீண்டும் பா.ஜ. மேலேறி, ஆர்ஜேடி இரண்டாமிடத்திற்கு இறங்கியது.