சென்னை: பிட்சுகள், பந்துகள் திரும்பும் நிலையில் இருக்கையில், நாம் சம்பவத்தை நிகழ்த்துபவர்களாய் இருக்க வேண்டும் என்றுள்ளார் ரோகித் ஷர்மா.

அவர் கூறியுள்ளதாவது, “பிட்ச் எப்படி தயாரிக்கப்பட்டுள்ளது என்று நமக்கும் தெரியும். பந்துகள் ஏடாகூடமாக திரும்பும் என்பதும் நமக்கு தெரியும். நாங்கள் அதற்கேற்ப சிறப்பான பயிற்சி மேற்கொண்டோம். அது எங்களுக்கு நன்றாக பயனளித்தது.

இதுபோன்ற சூழலில் ஃபூட் வொர்க் மிகவும் முக்கியமானது. மேலும், ஸ்வீப் ஷாட் ஆடுவது அதிக பயனளிக்கும். நீங்கள் சூழலைக் கட்டுப்படுத்துபவராக இருக்க வேண்டுமேயொழிய, சூழலுக்கு எதிர்வினையாற்றக்கூடியவராக இருத்தல் கூடாது.

இத்தகைய பிட்சுகளில் தற்காலிக செயல்பாடுகளை நிகழ்த்தக்கூடாது. இதில் LBW ஆவதற்கான வாய்ப்புகள் குறைவு. நீங்கள் ஸ்வீப் ஷாட் ஆடினால், பெளலர்கள் விரக்தியடைவார்கள். இத்தகையப் பிட்சுகளில் நாம் ரன்களை அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்” என்றுள்ளார் ரோகித்.