புதுடெல்லி: வரும் 2050ம் ஆண்டில் உலகின் மக்களுக்கு உணவளிக்க, தற்போதைய உணவு உற்பத்தியைவிட கூடுதலாக 50% தேவை. ஆனால், பருவநிலை மாற்றத்தால் அக்காலகட்டத்தில் உலகளாவிய உணவு உற்பத்தியில் 30% வீழ்ச்சி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உலகளாவிய அறிக்கை ஒன்றில் இதுதொடர்பாக கூறப்பட்டிருப்பதாவது; தழுவுதலுக்கான உலகளாவிய கமிஷனால் இந்த அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. இந்த கமிஷனில் உறுப்பினராக உள்ள 19 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை செயலாளர் சி.கே.மிஸ்ரா இதன் கமிஷனர்களுள் ஒருவர்.
பாலைவனமயமாக்கல் என்பது ஒரு கற்பனைக்கெட்டும் விஷயமாக இருக்கவில்லை. காலநிலை தழுவல் என்பது மேற்கொள்ளப்படவில்லை என்றால், சமமின்மை ஏற்பட்டு அதன்மூலம் பின்தங்கிய மற்றும் ஏழ்மையான சமூகங்கள் பெரிதும் பாதிக்கப்படும்.
வாழுமிடங்களை பாழாக்குதல் என்பது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை மோசமாக பாதிப்பதோடு, பின்தங்கிய சமூகங்களின் மீது கடுமையாக தாக்கம் செலுத்துகிறது. வரும் 2050ம் ஆண்டில் உலகின் மக்கள் தொகை 1000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, அவர்களுக்கு உணவளிக்க கூடுதலாக 50% விளைச்சல் தேவை. ஆனால், அதேகாலகட்டத்தில் பவருவநிலை மாற்றத்தால், விளைச்சலில் 30% வீழ்ச்சி ஏற்படும் என்று மதிப்பிடப்படுகிறது.