சென்னை: புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம், திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும் என புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர், இது அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசு என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!“ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம்.“ எனக் கூறியுள்ளார்.
அதோடு, “திராவிட மாடல் நல்லாட்சிதான் தொடரும்! தலைநிமிர்ந்து வரும் தமிழ்நாட்டின் நிதிநிலை சீரடையச் சீரடைய அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளும் நீங்கள் கேட்காமலே நிறைவேறும்!“ என்றும் உறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்: 20 ஆண்டுகாலக் கோரிக்கையை நிறைவேற்றிய #DravidianModel அரசு!
நம்பி வாக்களித்த மக்களுக்கு, கழக அரசு எப்போதுமே உண்மையாக இருக்கும் என மீண்டுமொருமுறை செய்து காட்டியுள்ளோம்! அரசு ஊழியர்களுக்கு மிகப் பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக #TAPS… pic.twitter.com/bF9VR0IoTp
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 3, 2026
தமிழ்நாடு அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தின் பலன்கள் என்ன.?
மாநில அரசு அலுவலர்கள் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். இவ்வாறு 50 சதவீதத்திற்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்குவதற்கு, பணியாளர்களின் 10 சதவீத பங்களிப்போடு, ஓய்வூதிய நிதியத்திற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்
50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுதோறும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அரசு அலுவலர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்.
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவர் ஏற்கெனவே பரிந்துரைத்த குடும்ப உறுப்பினர்களுக்கு அவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்
அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிடும் போதும், அவரவரின் பணிக்காலத்திற்கேற்ப 25 இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்
புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டபின், ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும்
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் (Contributory Pension Scheme) கீழ் பணியில் சேர்ந்து, புதிய தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுத்தப்படுவதற்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
[youtube-feed feed=1]