டெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. சர்ச்சைக்குரிய வகையில் அவ்வப்போது வரும் அவர், பதவியில் இருந்தபோது, வருமானத்துக்கு மீறிய அளவுக்கு சொத்து சேர்த்தாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக மதுரையை சார்ந்த மகேந்திரன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் வழக்கு நடைபெற்றது. இதில் மாறுப்பட்ட தீர்ப்பு காரணமாக 3வது நீதிபதி விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த விசாரணை யின்போது, வழக்கு தொடர்பாக எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது, ஆனால் விசாரணை தொடரலாம் என்று உயர்நீதிமன்றத்தை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ,முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது, அதனால்,ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு! உச்சநீதிமன்றம் இடைக்கால தடை….