பெங்களூரு

ர்நாடகா தேர்தலை முன்னிட்டு முதல்வர் சித்தராமையா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கர்நாடகா தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிந்தது.    அனைத்துக் கட்சி தலைவர்களும்  நேற்று மாலை வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.   இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக அணிகளும் ம ஜ த அணியும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன.  நேர்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் சித்தராமையா, “வாக்காளப் பெருமக்களே, உங்களின் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் வந்து பேசாததற்கு என்னை மன்னியுங்கள்.  நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை அளித்துள்ளோம்.   கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.   நாங்கள் பொய் சொல்லி திசை திருப்பும் செயலை நடத்தவில்லை.

கர்நாடகத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு எனது தலைமையிலான அரசு 5 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது.   மக்களூக்கு சேவை செய்யாத தலைவர்கள் மதவாதத்தை தூண்டி விட்டு ஆதரவு பெற முயலுகின்றார்கள்.   மதவாதத்தை தூண்டுவது சட்ட விரோதமாகும்.   மேலும் அது வளர்ச்சிக்கு எதிரானது. நாங்கள் அது போல நடக்க மாட்டோம்.

நாங்கள் கர்நாடகத்தில் பல திட்டங்களை அமுல்படுத்தி அனைத்து மக்களுக்கும் உணவு, சுகாதாரம், கல்வி வேலை வாய்ப்பை அளித்துள்ளோம்.   எங்கள் ஆட்சியில் பாரபட்சம் கிடையாது நேர்மை மட்டுமே உள்ளது,   எங்கள் ஆட்சியில் நாங்கள் இந்திரா உணவகம், மின்னணு விவசாய சந்தை, அன்ன பாக்யா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அமைத்து எங்கள் பணியை செய்துள்ளோம்.  நிங்கள் அந்த பணிக்கான ஊதியத்தை கொடுங்கள்”  என தெரிவித்துள்ளார்.