சென்னை: 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழகஅரசு ஆளுநருக்கு அழுத்தம்தான் கொடுக்க முடியும் என்று அரசின் இயலாமையை  அமைச்சர் ஜெயக்குமார் வெளிப்படுத்தி உள்ளார்.

ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பான தமிழகஅரசின் தீர்மானம் குறித்து ஒரு வாரத்தில் முடிவு அறிவிக்க வேண்டும் என ஆளுநருக்கு உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியது. ஆனால், ஆளுநர் அதை நிறைவேற்றாமல், தற்போது, பிரச்சினையாதும், குடியரசுத் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்று கூறி மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று கூறி வந்தனர். இப்போதும், 7 பேர் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடி நல்ல முடிவை தெரிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் குழப்பி வருகிறார்.

இந்த நிலையில், செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர், 7 பேரை விடுதலை செய்யும்  அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத்தான் உள்ளது. எங்களை பொருத்தவரை அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதுதான் நிலைப்பாடு. ஆளுநரை பொருத்தவரை குடியரசு தலைவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஆளுநரிடம் பேசும்போது அழுத்தம் மட்டும் தான் கொடுக்க முடியும். அந்த வகையில் நாங்கள் அவர்களை விடுதலை செய்யக்கோரி அழுத்தம் தான் கொடுத்துள்ளோம்.ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் எங்களது நிலைப்பாடு இதில் எந்தவித மாற்றமும் இல்லை. இந்த விவகாரத்தில்,  குடியரசுத்  தலைவர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.