பெங்களுரூ:

நாங்கள் இந்துத்துவத்தை உறுதியாக நம்புகிறோம் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவரான டி கே சிவகுமார் மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் ஆகியோரால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஹிந்துத்துவ சித்தாந்தங்களை காங்கிரஸ் கட்சி உறுதியாக நம்புகிறது என்று தெரிவித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த மூத்த தலைவர்களை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிகே சிவகுமார் தெரிவித்துள்ளதாவது: நாங்கள் மகாத்மா காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தர் பின்பற்றிய ஹிந்துத்துவ சித்தாந்தத்தை உறுதியாக நம்பி பின்பற்றுகிறோம், அதே வேளையில் பாஜக பிரிவினை இந்துத்துவத்தை பின்பற்றுகிறது என்று தெரிவித்தார்.

கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார்

மேலும் ஹிந்து மற்றும் ஹிந்து மதம் யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது, இது அனைவருக்கும் சொந்தமானது. அதுமட்டுமல்லாமல் அரசியலமைப்பையும் பாதுகாப்பது எங்கள் கடமையாகும், காங்கிரஸை கேடார் அடிப்படையில் ஒரு கட்சியாக நாங்கள் மாற்ற திட்டமிட்டுள்ளோம். எனவே வரவிருக்கும் கிராம பஞ்சாயத்து தேர்தல்களில் பூத் மற்றும் பஞ்சாயத்து குழுக்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

கர்நாடக தேர்தல் ஆணையம் நேற்று மாநிலத்தில் 5,762 கிராம பஞ்சாயத்துகளுக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 22 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.