சென்னை,

டுத்த மாதம் 21ந்தேதி அரசியல் கட்சியின் பெயர் அறிவிக்க உள்ள நிலையில் 4 தென் மாவட்டங்களை சேர்ந்த   தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமலஹாசன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் பேசிய கமல், நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த நடிகர் கமலஹாசன் வரும் பிப்ரவரி  21ம் தேதி, தனது கட்சி குறித்த அறிவிப்பை, முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பிறந்த மண்ணான,  ராமநாதபுரத்தில் அறிவிக்க இருப்பதாக கூறி உள்ளார்.

இந்நிலையில், இன்று தனது ரசிகர்மன்ற நிர்வாகிகளுடன் முதல்கட்டமாக தனது ஆலோசனையை தொடங்கி உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் காலை 11 மணிக்குத் துவங்கிய ஆலோசனை மதியம் 1 மணி அளவில் நிறைவு பெற்றது.

ரசிகர்களுடன் நடைபெற்ற ஆலோசனையின்போது கமல்ஹாசன் பேசியதாவது,

நாம் மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 35 வருடங்களாக ரசிகர்களாக இருந்தீர்கள்; இனி நீங்கள் நற்பணி நாயகர்கள்  அடுத்த கட்டத்துக்கு செல்ல தேவையான நேரம், தேவை தற்போது  ஏற்பட்டுள்ளது எனறு கூறினார்.

ஆலோசனை முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட நற்பணி மன்றத் தலைவர் மன்னன், கூறும்போது,  கமல்ஹாசன், தனது  அரசியல் பிரவேசத்திற்கு வலு சேர்க்கும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினமான பிப்ரவரி 24-ம் தேதி அன்று மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.