சண்டிகார்:
இந்தியா-பாகிஸ்தான் மோதல் போன்று அரசியல் மாறக்கூடாது என சிரோன்மனி அகாலிதளம் தலைவர் சுக்பீர் பாதல் கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் தனிநபர் தாக்குதல்கள் அதிகம் இருந்தது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
பாஜக கூட்டணியில் பல ஆண்டுகளாக இருக்கிறோம். இன்றைய நிலையில் மோடியைப் பேனாற வலுவான பிரதமர்தான் தேவை.
நாடு தன்னாலேயே வளர்ச்சியடைந்து விடாது. நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற தலைவர் தான் நமக்கு தேவை.
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஆழ்ந்து முடிவு எடுக்கக்கூடிய பிரதமரை பெற்றுள்ளோம்.
அரசியல் என்பது இந்தியா-பாகிஸ்தான் மோதல் போல் மாறக் கூடாது. நாம் எதிரிகள் அல்ல என்றார்.
Patrikai.com official YouTube Channel